அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026-2027ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - இயக்குநரின் செயல்முறைகள்
Aided School Staff Fixation | DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
//பணியாளர் நிர்ணயம்//
//சுற்றறிக்கை//
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண் 012581/ஜி/எச்/2026 , நாள். 21.08.2026
பொருள் :-
தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது-பணியாளர் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல்-சார்ந்து
பார்வை 1
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-1973 மற்றும் விதிகள் 1974
2- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009, விதிகள் -2011
3:- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-2018, விதிகள்-2023.
4 அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை நாள்.11.08.2010
5- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை WA.(MD) No's 76 of 2019, etc., batches.
6-அரசாணை (நிலை) எண் 139 பள்ளிக் கல்வித்துறை , நாள்-19.06.2024
7:- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P. (MD) No. 3824 of 2026 நாள்.03.07.2026
8:- இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.13.07.2026
9: மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 of 2025 நாள்.18.08.2026
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு -25 ன்படியும். இச்சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்ற அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை , நாள்.11.08.2010 ன்படியும், மேற்படி பள்ளிகளில் ஆகஸ்டு 1 ஆம் தேதியில் EMIS - ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொண்டு, ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், பார்வை 4 இல் காணும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள்-2023, 32(A) -ல் பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், 32 (B) -ல் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாகவும் கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு மேற்குறிபிட்ட கால வரையறைக்குள் மேற்படி பணியாளர் நிர்ணயப் பணிகளை (Staff Fixation) முடித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிநிரவல் (Deployment) தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P(MD) No. 3824 of 2026, நாள். 03.07.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டது.
17.Recording such report, this Court directs the Secretary, Department of School Education, to examine the reasons for issuing the deployment orders in a delayed manner, not only to this petitioner but also to the other 52 surplus teachers. If it is found that the delay was attributable to any lapse or dereliction on the part of the second respondent or any other officer, the sixth respondent shall ensure that appropriate action is taken on the erring officers in accordance with law, including initiation of disciplinary proceedings and recovery of the salary which was paid to all the surplus teachers during this period, from such officer(s). The Secretary shall also ensure that the statutory time line prescribed under Rule 32(B) is strictly complied with.
எனவே, பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், உபரி ஆசிரியர்களை பணிநிரவல்/மாற்றுப்பணி செய்வது தொடர்பாகவும், மேற்படி தனியார் பள்ளி விதி 32 (A) மற்றும் 32(B) இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, முடித்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 9 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 நாள்.18.08.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. of 2025
11.Considering the rival submissions made, this Court is of the view that even though Rule 32 of the Tamil Nadu Private Schools (Regulation) Rules 2023 provides a strict timeline, staff fixation has been done in a delayed manner, for the reasons best known to the officers concerned and thereby huge loss has been caused to the government exchequer. Therefore, disciplinary proceedings have to be initiated as against the District Educational Officers /Chief Educational Officers concerned, who have violated Rule 32 and fixed the staff strength belatedly. The CEOs who have to monitor the functions of the DEO, have also failed in their duty. The Government has also been forced to incur expenditure on the teachers, already identified as surplus. Therefore, the salary, if any, paid to the teachers, who were found to be surplus, also has to be recovered from the DEOS/ CEOs concerned.
எனவே, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி. 2026-2027 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள் 2023, விதி 32(B) -இல் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் மேற்படி பணிகளை முடித்திட மீளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
B. Deployment of surplus staff,-(1) The District Educational Officer concerned in respect of Primary and Middle schools, the Chief Educational Officer concerned in respect of High and Higher Secondary schools and the Joint Director concerned in respect of Anglo-Indian schools shall fix the strength of the staff based on the strength of the pupils updated in the Educational Management Information System (EMIS) as on the 1stday of August of every academic year and shall complete the assessment process on or before the 12th day of August of that academic year.
(2) The staff fixation statement along with the list of surplus staff identified shall be forwarded to the Secretary of the school committee or the management of the school concerned on or before the 15th day of August of that academic year.
மேற்படி பணியாளர் நிர்ணயம் மற்றும் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணை வழங்குவது தொடர்பான பணிகளை உரிய கால வரையறைக்குள் முடிக்கத் தவறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை. மேற்கொள்ளப்படும். மேலும், அதனால் ஏற்படும் நிதியிழப்பை உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரசின் நிதி ஆதாரங்கள் முறையாக பயன்படுத்தப்டுவதை உறுதி செய்திடும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும், இப்பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர் கடக்கக் கல்வி
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
ileke
(மின்னஞ்சல் மூலமாக)
நகல்:
1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மா.க.அ. மூலமாக)
2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை தலைமைச் செயலகம் தகவலின் பொருட்டு பணிந்தனுப்பலாகிறது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.