திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :269
விளக்கம்:
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
_பசி வந்தால் பத்தும் பறந்திடும்._
இரண்டொழுக்க பண்புகள் :
1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே. மகாத்மா காந்தி
பொது அறிவு :
1.வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?
விடை: மெக்சிகோ
2. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?
விடை: பிங்கல வெங்கையா
English words & meanings :
1. Approbate (அப்ராபேட்) - அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
2. Decline (டிக்லைன்) - சரிவு.
வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .
நீதிக்கதை
குரங்கின் அறிவு
ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்
ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது
ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!
அடுத்த ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.
நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"
அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.
முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.
சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற
03.10.2023
* பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.
*பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து வல்லூர் அணைக்கட்டு நீர் நிரம்பி வழிந்தது.
*வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி துவக்கம்.
* பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு.
*ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.
*ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் வங்காள தேசத்தை 12-0 என வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* 50 percent reduction in milk supply of green aavin milk: Milk Agents Association alleges.
* Vallur dam overflowed after release of surplus water in Poondi lake.
* After three years in Vandalur Park, the facility to see lions and deers by vehicle has been inaugurated.
* Boycott of Gram Sabha meeting in 13 panchayats in protest of Parantur airport.
*Chief Minister M K Stalin congratulated Tamil Nadu athletes who won medals in the Asian Games.
* India beat Bangladesh 12-0 in Asian Games Hockey.