கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொடைக்கானல் செல்லும் பயணிகளின் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக ₹20 வசூலிக்கப்படும் - மாவட்ட நிர்வாகம்...


Kodaikanal bound commuters will be charged ₹20 per bottle of water or soft drink as green tax - District Administration...


 கொடைக்கானல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக ₹20 வசூலிக்கப்படும் - மாவட்ட நிர்வாகம்.


கொடைக்கானல் பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்றம் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி- தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது.


இதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்கள் வைத்து இருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரி விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதித்து, பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கூறும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்திலும் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறை செப்.20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns