கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்

 

 

அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது.


மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டுமுதல் மாணவா் சோ்க்கை முன்கூட்டியே மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரவலாக பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன


அதேபோல், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணா்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...