கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து CEO தகவல்


 இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (CEO) தகவல்


1. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இன்றைய (19.04.2026) பயிற்சியின் போது தேர்தல் பணி சான்று (EDC) வழங்கப்பட உள்ளது.


2. தபால் வாக்கு இதுவரை செலுத்தாதவர்கள் இன்று செலுத்தலாம். தபால் வாக்கினை தேர்தல் பயிற்சி மையங்களில் மட்டுமே அன்றைய தினமே செலுத்தி விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.


3. PRO App இல் இன்றைய பயிற்சியின் போதும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் (Presiding Officers ) அந்தந்த நேரத்திற்கு உண்டான பதிவுகளை குறித்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.


4. இரண்டாவது பயிற்சிக்காக, முதன்மை கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பயிற்சி மையத்திற்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சான்றொப்பம்  இடுவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் போன்ற அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை இன்றைய பயிற்சியின் போதும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


CEO, Tiruvannamalai


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...