கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்



பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்


இன்று (26.05.2026) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கூறிய அறிவுரைகள்


அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி அன்று பள்ளி திறக்கப்பட இருப்பதால் தங்கள் பள்ளியில் மேல்நிலைநீர்த்தொட்டிகள் அல்லது நிலத்தடி நீர்த்தொட்டிகள் இருப்பின் அவற்றை தூய்மைப்படுத்திட வேண்டும்.

 கடைசியாக தூய்மைப்படுத்த நாள் குறிப்பிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

 கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மாணவ,மாணவியரின் பயன்பாட்டிற்கு ஏதுவாக தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  

இத்துடன் சமையலறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு பாத்திரங்கள் மற்றும் மாணவர்கள் சாப்பிடும் தட்டுகள், டம்ளர்கள் தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவரங்களில் மிகுந்த கவனம் செலுத்திட அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளபடுவதாக கூறினார்கள்.

ஆய்வு அலுவலர்கள் பார்வையிட உள்ளதால் வருகின்ற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு கவனம் செலுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது..


- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...