அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு
G.O.(D).No.47 - Govt Kallar School Teachers' Transfer Counseling 2026-2027
Government Order issued providing guidelines for conducting transfer counseling for teachers and wardens of Government Kallar Reclamation Schools
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் / விடுதிகள் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் /நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆசிரியர்கள் / காப்பாளர்கள், காப்பாளினிகள் -2026-2027 ஆம் கடைபிடிக்கப்பட கல்வியாண்டு முதல் பொதுமாறுதல் கலந்தாய்வு வேண்டிய நெறிமுறைகள்- ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலபிந31)த் துறை
அரசாணை (D) எண்.47 , நாள்: 02.06.2026
பராபவ, வைகாசி-19 திருவள்ளுவர் ஆண்டு, 2057 படிக்கப்பட்டது.
1. அரசாணை (14) στστ.65, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல (பிந3(1)த் துறை, நாள்:19.08.2024.
2 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் : 06.05.2026. கடித ந.க.எண்.பி2/2334496/2025
ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான, தெளிவான, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்கள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
3. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து, கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென்று அரசு ஆணையிடுகிறது.
பொது நிபந்தனைகள்
1 பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு, இறப்பு, பணி மாற்றம், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களும் பொதுமாறுதல் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் உள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களை ஒருங்கிணைந்த உள்ளடக்கிய காலிப்பணியிடங்களின் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் தயாரிக்கப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முன்னர் உள்ள கல்வியாண்டின் ஆகஸ்ட் 1-ஆம் தேதி B. Educational Management Information System (EMIS) உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
3. கள்ளர் பள்ளிகளில் கலந்தாய்வானது, பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள் அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் நடைபெற வேண்டும்.
4. கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் /காப்பாளினிகள் அனைவருமே முதன் முதலில் இத்துறையில் ஆசிரியர்களாகவே பணி நியமனம் செய்யப்பட்டு, அதன் பின்பு பணிமாறுதலில் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
5. அதே போல் கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் முதுநிலை, முன்னுரிமை, மற்றும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கள்ளர் விடுதியின் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட வேண்டும்.
6. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் உத்தமபாளையம் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும், சரக மேற்பார்வையாளர்களை செக்கானூரணி, பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும் கட்டாய பணிமாறுதல் (Zero Counseling) செய்யப்பட வேண்டும். மேலும், மேற்படி சரகங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களின் பணி ஒய்வு / இறப்பு / பதவி உயர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
%20(2).png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.