கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 


மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு - நாளிதழ் செய்தி 


ஆண்டிபட்டி தாலுகாவில் கடமயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளில் 98 மலை கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். 


 ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்ட பின்பு இந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதி உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 98 மலை கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் 98 மலை கிராமங்களில் வசிப்பிடம் கொண்ட காவல், வனம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் 118 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இவர்களை அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், மேலும் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் அந்த பகுதி மக்களை வெளியேற்ற முதல்கட்ட நடவடிக்கையில் தான் தற்போது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிகழ்வு என இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.




Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices(Black)


https://link.amazon/B02IVyD5R



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...