மீன் குழம்பு லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடை நீக்கம் Suspension
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சிட்டா வழங்க விவசாயியிடம் மீன் குழம்பு பார்சல் வாங்கி வரும்படி கூறிய புகாரில் தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் பணியிடை நீக்கம்
சிட்டா வழங்க லஞ்சமாக பொரித்த மீன் கேட்ட விஏஓ பணியிடை நீக்கம்
கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்.
கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேவா்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவா், வங்கியில் விவசாய கடன் பெறுவதற்காக நிலத்துக்கு சிட்டா, அடங்கல் கேட்டு தேவா்மலை கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம், தேவராஜ் கைப்பேசியில் சிட்டா குறித்து கேட்டுள்ளாா். அப்போது காா்த்திக், தேவராஜிடம் பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அங்கிருந்து பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு வாங்கி வருமாறு கூறியுள்ளாா்.
இதையறிந்த தேவராஜ் மகன், விஏஓ காா்த்திக்கை கைப்பேசியில் அழைத்து, உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லையா என லஞ்சம் குறித்து கேட்டுள்ளாா். இதனால் அதிா்ந்து போன காா்த்திக், உங்க அப்பாவை அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலாக பரவியது.
இந்நிலையில், குளித்தலை சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபிசானு, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சாா்- ஆட்சியா் உத்தரவிட்டாா்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.