>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கொரோனா பாதிப்பு : அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்? என்னென்ன சான்றுகள் தேவை? (Corona Infection: Do Government servants and Teachers have Special Casual Leave? Who can take up to how many days? What evidence is needed?)
வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி ஊழியர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம்.
மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் யாவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு திரும்பப் பெறப்படும் வரை பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு 25.03.2020 முதல் தற்போது வரை முழுமையாகத் திரும்பப்பெறப்படவே இல்லை. இடையிடையே தளர்வுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. மேற்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலமே இது என்பதால் தற்போதும் மேற்படி அரசாணைப்படி சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டு.
ஆசிரியர்-ஊழியர் பாதிக்கப்பட்டாலோ / குடும்ப உறுப்பினர் பாதிக்கப்பட்டாலோ / கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தாலோ அவரது விடுப்பு காலம் சிறப்புத் தற்செயல் விடுப்பாக அனுமதிக்கப்படும் என்பதே அரசாணை.
முதல் அலையின் போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் நோய்பாதிக்கப்பட்டவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் என்பது தமிழ்நாடு அரசின் வழிகாட்டல்படி அதிகபட்சமாக 14 நாள்கள். இதன் காலத்தை ஊழியரின் வசிப்பிடப் பகுதிக்கான மருத்துவ அலுவலரே முடிவு செய்வார். அதற்கான சான்றளிக்கும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததே. 14 நாள்கள்தான் அளிக்க வேண்டுமென்றும் இல்லை. நோயின் தாக்கத்தைப் பொறுத்து குறைத்தோ கூட்டியோ மருத்துவர் முடிவு செய்யலாம்.
ஒருவருக்கு / குடும்பத்தில் ஒருவருக்கு / பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் Positive Test Report பெற Sample அளித்த நாள் (Report வருவதற்கு முதல் நாள்) முதல் Negative வந்த நாள் வரை சிகிச்சை காலம். இதனை சிகிச்சை பெறும் மருத்துவமனை முடிவு செய்யும். Negative வந்த நாள் முதல் தனிமைப்படுத்தல் காலம் உண்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோருக்கு அவரின் Discharge Report-ல் வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் குறிக்கட்டிருக்கும்.
மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்படாது வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு Home Quarantine Days எத்தனை நாள்கள் தேவை என்பதை வட்டார மருத்துவ அலுவலர் மட்டுமே முடிவு செய்வார்.
குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் ஆசிரியர் / ஊழியருக்கான Home Quarantine Days எத்தனை நாள்கள் அளிக்கலாம் என்பதை வட்டார மருத்துவ அலுவலர் தான் முடிவு செய்ய முடியும். அதற்கான கடிதத்தையும் பணியேற்கும் நாளுக்கு முதல் நாள் அனைத்துத் தகவல்களையும் (Positive Date, Negative Date, அவர் அளித்த Home Quarantine Days) கூறி அவரிடமே பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் கொரோனா பாதித்த ஆசிரியர் / ஊழியர் / குடும்ப உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். இதற்கான தீர்க்கமான காலவரையறை என்பது ஏதுமில்லை. ஏனெனில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமாகி தனிமைப்படுத்தல் காலம் முடிந்து பணிக்குத் திரும்பும் நாளில்கூட குடும்பத்தில் மற்றொருவருக்கு தொற்று உறுதிசெய்யப்படக்கூடும். அந்நேர்வுகளில் மீண்டும் சிறப்புத் தற்செயல்விடுப்பு நீட்டிக்கப்படலாம்.
மேலும், தொற்று பாதித்த நபர் / குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் Discharge Summary நகல் / வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
பெற்றோருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு...
Government of India,
Ministry of Personnel Public Grievances & Pensions,
Department of Personnel and Training
(Leave and Allowance Division)
No.13020/1/2019 - Estt.(L)
கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021...
>>> Click here to Download Clarification Letter No.13020/1/2019 - Estt.(L)...
ஒரு அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ, கோவிட் 19 பாதித்து சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில் இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்.
See Government Order para, 5 (vi)
>>> Click here to Download G.O.Ms.No.: 304, Dated: 17-06-2020...
டிசம்பர் 3 - உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - தகுதியுடையோர் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அரசாணை...
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...