கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NMMS தேர்வு - Hall Ticket Download செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...

 

2023 - 2024ஆம் கல்வியாண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...


8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS HALL TICKET வரும் 24.1.2024 புதன்கிழமை பிற்பகல் முதல் DOWNLOAD செய்து கொள்ளலாம்...



>>> NMMS தேர்வு - Hall Ticket Download செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை  வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning  - Directorate of Government Examinations Press Note)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு...


+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from Director of Government Examinations to issue +1 & +2 original mark certificate to students from 31.07.2023)...

 

>>> +1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from Director of Government Examinations to issue +1 & +2 original mark certificate to students from 31.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023, ஜூன்/ ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய +1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், மறுகூட்டல்/ மறு மதிப்பீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு (2023, June/July +1 Supplementary Exam Results, Re-Totaling/ Revaluation - Directorate of Government Examinations Press Release)...


>>> 2023, ஜூன்/ ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய +1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், மறுகூட்டல்/ மறு மதிப்பீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு (2023, June/July +1 Supplementary Exam Results, Re-Totaling/ Revaluation - Directorate of Government Examinations Press Release)...


 2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்;


தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்


-அரசு தேர்வுகள் இயக்ககம்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...


>>> மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...

.

தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.


மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.


தேர்வு நாள் வழிமுறைகள்


கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.


உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.


மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.


தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.


விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.


மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.


தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


SSLC - 2023 பொதுத் தேர்வுக்கு, தேர்வு மைய மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் கோரி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் கடிதம் (Letter from Joint Director of State Examinations seeking details of Affiliated Schools seeking change of examination center for SSLC - 2023 Public Examination)...


>>> SSLC - 2023 பொதுத் தேர்வுக்கு, தேர்வு மைய மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் கோரி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் கடிதம் (Letter from Joint Director of State Examinations seeking details of Affiliated Schools seeking change of examination center for SSLC - 2023 Public Examination)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



10 மற்றும் 12ஆம் வகுப்பு - ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022க்கான துணைத் தேர்வுகள் தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th and 12th Standard - Supplementary Examinations Date and Application Details for July and August 2022 - Government Examinations Directorate Announcement)...


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு - ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022க்கான துணைத் தேர்வுகள் தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th and 12th Standard - Supplementary Examinations Date and Application Details for July and August 2022 - Government Examinations Directorate Announcement)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடுகள் (HANDBOOK ON EXAMINATION DUTIES & RESPONSIBILITIES – MAY 2022)...

 


>>> பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடுகள் (HANDBOOK ON EXAMINATION DUTIES & RESPONSIBILITIES  – MAY 2022)...


ந.க.எண்‌. 004555/ எச்‌.1 / 2022,  நாள்‌ :05.04.2022


ஐயா/அம்மையீர்‌,


பொருள்‌: அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌, சென்னை - 6 - மே 2022, இடைநிலை,  மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ - தேர்வுப்‌ பணிகள்‌ கையேடு - மின்னஞ்சல்‌ மூலம்‌ அனுப்புதல்‌ - சார்பு.


நடைபெறவுள்ள மே 2022, இடைநிலை, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ தொடர்பான தேர்வுப்‌ பணியில்‌ ஈடுபடும்‌ ஆய்வு அலுவலர்கள்‌, முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌, வினாத்தாள்‌ கட்டுக்‌ காப்பாளர்கள்‌, வழித்தட அலுவலர்கள்‌, துறை அலுவலர்கள்‌, முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌, அறைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ பறக்கும்‌ படை உறுப்பினர்களுக்கான அறிவுரைகள்‌ இத்துடன்‌ இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. மேற்படி அறிவுரைகளை தேவையான எண்ணிக்கையில்‌ (வகை வாரியாக) நகலெடுத்து, தங்கள்‌ மாவட்டத்தில்‌ மேற்குறிப்பிட்ட பணிகளில்‌ ஈடுபடும்‌ அனைத்துநிலை பணியாளர்களுக்கும்‌ வழங்கிடுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

ஒம்‌/-

 இயக்குநர்‌

இணைப்பு :

  1. ஆய்வு அலுவர்களின்‌ கடமைகள்‌
  2. மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்களுக்கான பணிகள்‌
  3. வினாத்தாள்‌ கட்டுக்‌ காப்பாளர்களின்‌ கடமைகள்‌
  4. வழித்தட அலுவலர்களுக்கான அறிவுரைகள்‌
  5. துறை அலுவலர்களுக்கான அறிவுரைகள்‌
  6. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களுக்கான பணிகள்‌
  7. அறைக்‌ கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்‌
  8. பறக்கும்படை உறுப்பினர்களின்‌ நியமனமும்‌ கடமைகளும்‌
  9. . படிவங்கள் - பிற்சேர்க்கைகள்‌
  10.  உதவி தொடர்பு எண்கள்‌ (Helpline Numbers)
  11.  தேர்வுக்‌ கால அட்டவணை (Time Table)



நகல்‌.

1. அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌,

2. அனைத்து மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌.



>>> பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடுகள் (HANDBOOK ON EXAMINATION DUTIES & RESPONSIBILITIES  – MAY 2022)...


6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு கால அட்டவணை வெளியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Examination Schedule from 6th to 12th Class - Final Working Day from 1st to 5th Class on 13.05.2022 - School Education Department Announcement)...



>>> 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு கால அட்டவணை வெளியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு - 6-9 வகுப்புகளுக்கு மே 5 முதல் மே 13 வரை தேர்வுகள் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு - மதிப்பெண் குறைவாக உள்ளது என கருதுபவர்கள் எழுதலாம்...


அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு - மதிப்பெண் குறைவாக உள்ளது என கருதுபவர்கள் எழுதலாம்...

அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 22.07.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு...

+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு...

 


+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் (02.05.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால்) - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு கடிதம் ந.க.எண்: 025650 / எச்1 / 2020, நாள் : 12-04-2021...


தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...



 தமிழகத்தில் தட்டச்சு (Type Writing), சுருக்கெழுத்து (Short Hand) தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பக் கட்டணம் ரூ.20.  தேர்வுக் கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் 

தலைவர்,
தேர்வு வாரியம், 
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 
கிண்டி, சென்னை

என்ற முகவரியில்  சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனில் பொதுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை முடிவு (நாளிதழ் செய்தி)...

 


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால், புதிய கல்வி ஆண்டில், சில மாதங்களாவது பள்ளிகளை திறந்து பாடம் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு வரும், 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவானது. மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

🍁🍁🍁 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது...

 தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் (2020-2021) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...