கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gratuity லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gratuity லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு


ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு (வாட்ஸ் அப் பகிர்வு)


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும்.


- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்


ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் நேற்று ஆஜர்.


CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் நேற்று (17.12.2025) விசாரணைக்கு வந்தது.


புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்டது.


மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி அரசு ஊழியரின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு அரசின் பங்களிப்பாக 10% வழங்கப்பட்டு பணி ஓய்வின் போது ஒட்டு மொத்தத்தமாக வழங்கப்படுகிறது.


ஓய்வூதியத்திற்கான உருவாக்கப்பட்ட PFRDAல் அனைத்து மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓய்வூதியத் தொகை அதன் பராமரிப்பில் உள்ளது. பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் CPS திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பணிக்கொடையும் இல்லை. எவ்விதமான விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை


அரசின் பங்களிப்பாக 14% பல மாநிலங்கள் உயர்த்தி வழங்கி வருகின்றனர்.


1978 ஓய்வூதிய விதிகளின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் ஒன்று.


2019ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர் கே.கே.சசிதரன் அமர்வில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அறிக்கை இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை, பழைய ஓய்வூதியத் திட்டமே அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானது என்று கூறினார்.


இதனை அடுத்து அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. மனுதாரர் 2005 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து உள்ளார். 2012 ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசாணை எண்கள்: 430, 59 ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்தை வரையறை செய்துள்ளோம் என்றும், நீதியரசர் சிவஞானம் அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரர் தமிழில் வினாக்கள் கொடுத்ததால் , நாங்களும் தமிழில் பதில் வழங்கியுள்ளோம் என்று கூறி இது பற்றி தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.


இதனை அடுத்து நீதியரசர்கள் அரசிற்கு கால அவகாசம் வழங்கி 06.01.2026 அன்றைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Portronics Clamp M3 Adjustable Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices (Black)


https://amzn.to/4s5vR3B






Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு


Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


* தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.


HC Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in CPS


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


High Court Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in Contributory Pension Scheme

 

தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற எனக்கு  ஈட்டிய விடுப்பு,  சிபிஎஸ் வைப்பு நிதி தொகை மட்டுமே ஓய்வின் போது வழங்கினர். எனது பணி காலத்திற்கான பணிக்கொடை வழங்கவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு நிதித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களிடம் பணிக்கொடை கோரி விண்ணப்பம் செய்தும் பதில் ஏதும் இல்லாததால், பணிக்கொடை வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசின் பதில் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் வழங்க நீதியரசர் திரு. பட்டு தேவானந்த் அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


"பணிக்கொடை" (Gratuity) குறித்த தகவல்கள்...


 "பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

 

Gratuity - Amount


"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள். குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.


இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.


    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது. சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.


நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.


 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.


ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குரிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.


   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375 நாட்கள் சம்பளமும் 30 ஆண்டுகள் பணி செய்திருந்தால் 30×15=450 நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.


   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு. அதிகப்பட்சம் 2000000 (இருபது லட்சம்) மட்டுமே வழங்கப்படும்.


  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.


உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.


    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் (அதிகபட்சம் 33 ஆண்டுகள் மட்டுமே கணகக்கீடுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ) சர்வீஸ் முடித்த பனிஷ்மெண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம். (இப்போதைய DA 50%.)


  பேசிக்....................................40000

 DA 50%(40000×50÷100)..............20000

மொத்தம்(40000+20000)........60000

26ஆல் வகுக்க= 42800/26 = 2308ரூபாய்.


   இந்த 2308தான் ஒருநாள் சம்பளம்.


15நாள் சம்பளம்= 2308×15= 34620ரூபாய்


33 ஆண்டுக்கு = 34620×33= 11,42,460ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.


சுருக்கமாகச்சொன்னால்


(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்த ஆண்டுகள். இதுவே கிராஜூவிட்டி ஆகும்


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு...


1.1.2024 முதல் 

பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. 


1.1.2024 முதல் நடைமுறை..


1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்....

( தமிழ்நாட்டில் GPF employee)


இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்...


புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்...



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...


குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு வட்டி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அளித்த உத்தரவு வருமாறு: தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுகால பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும், ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டியை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இந்த தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டியை வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...