கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வகுப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகுப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


 பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.


கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.


அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.


மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த கல்வித்துறையின் அறிவிப்பை குறை கூறினர். 


மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி, ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.


இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டமானது நிறுத்தி வைக்கப்படு வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்தநிலையில், பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பு வருவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமரவைக்க வெளியிடப்பட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்... முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.


ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.



எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது.


வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.



இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?


பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.



மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கும் நடைமுறை சாத்தியமா?



ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கும் நடைமுறை சாத்தியமா?


தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


முன்னதாக, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சில பள்ளிகளில் பின்வரிசை, முன்வரிசை என்ற பாகுபாட்டைக் களையும் பொருட்டு அரைவட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை அமைக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வைரலாகின. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கப்பட்ட படத்தில் ‘சம இருக்கை, சமூக நீதி’ என்ற வாசகம் சேர்க்கப்படுள்ளது.


இந்த இருக்கை வசதி பற்றி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டி ஒன்றில், “பின் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள், முன் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்ற வகையில் எல்லாம் இருக்கை அமைப்பை மாற்றும் முடிவை எடுக்கவில்லை. பின் வரிசையில் அமர்ந்தவர்கள் கூட பெரும் சாதனையாளர்களாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்போது இந்த மாதிரியான வடிவமைப்பில் இருக்கைகள் இருந்தால் அது மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்துமா என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


மாணவர்கள் மத்தியில் சமத்துவம் ஏற்படுத்தும் என்றால், இது நல்ல முயற்சியே. எதிர்காலத்தில் ஒரு போர்டு மீட்டிங்கில் அமரும்போது ஏற்படும் உணர்வை மாணவர்கள் இப்போதே பெறட்டுமே. மாற்றங்கள் நல்லதாக இருந்து அது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தாலும் நாம் அதை பின்பற்றலாம். இந்த முயற்சி எப்படி பலனளிக்கிறது என்று ஆசிரியர்கள் முயற்சிக்கட்டும்” என்றார்.


பள்ளிகளில் வகுப்பறை இட வசதி, இருக்கை வசதி மற்றும் மாணவர் எண்ணிக்கை ஆகிய காரணிகளை உள்ளடக்கியே இத்தகைய "ப" வடிவ இருக்கை ஏற்படுத்த இயலும் என கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


Seat students in "ப" formation in classrooms - DSE Proceedings



பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமரவைக்க பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


Classroom Seating Arrangement - DSE Proceedings


Director of School Education Proceedings to seat students in "ப" formation in school classrooms



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 

வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் - அமைச்சர்

 வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


 ப வடிவ வகுப்பில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட முடியும் . ஆசிரியர்கள், தங்களின் மாணவர்கள் அனைவரையும் பார்க்க முடியும். தொடக்க வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த அமைப்பினை பிற வகுப்புகளிலும் செயல்படுத்திப் பார்க்க இருக்கிறோம். முதற்கட்டமாக , வாய்ப்புள்ள பள்ளிகளின் வகுப்பறைகளில் ‘ ப வடிவ இருக்கை அமைக்கப்படும் . 


- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி



A film changed Kerala school classrooms



கேரள பள்ளிக்கூட வகுப்பறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம்


The film that changed Kerala school classrooms


 கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது - மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்


படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.


கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது.


இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கேரளாவில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி தேர்தலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் இடையேயான நட்புறவு, மகிழ்ச்சிகள், அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் ஆகியவை அழகாக படமாக்கப்பட்டு உள்ளன.


வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்சுகளில் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். முதல் வரிசை, 2-ம் வரிசை, 3-ம் வரிசை என தொடர்ந்து பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். முதல் வரிசையை போல கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.


இத்தகைய வரிசை முறை என்பது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. அந்த வேறுபாடுகளை மாற்றும் நோக்கத்துடன் இந்த படத்தில் பள்ளி வகுப்பறையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்தும் கருத்து இந்த படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்த படம் வெளியான பிறகு மாணவர்களின் பெஞ்ச் இருக்கை அமைப்பு தொடர்பான காட்சிகளுக்கும், அது வலியுறுத்தும் கருத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் உள்ள காட்சிகளின்படி இதுவரை கேரளாவில் உள்ள 6 பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி கடைசி பெஞ்ச் இல்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



இதுகுறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது:-


கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் எனது படத்தில் உள்ள வகுப்பறை பெஞ்ச் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தி உள்ளன. இன்ஸ்டாகிராம் வழியாக நாங்கள் அதை பற்றி அறிந்தோம். நான் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தொடக்கப்பள்ளியில் படித்தபோது அப்படித்தான் அமர்ந்திருந்தேன். இந்த காட்சியை படத்தில் வைத்தபோது பள்ளிகளில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வெளியிட பல வகையிலும் சிரமங்களை சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட தாமதத்துக்கு பிறகு படத்தை வெளியிட்டு உள்ளோம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் தியேட்டர்களில் கொஞ்ச நாட்களே ஓடியது. பின்னர் 7 மாதங்கள் கழித்து ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு உள்ளது.


கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய பெஞ்ச் மாற்றத்தை அமல்படுத்தியது. இந்த பள்ளியை கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் நிர்வகிக்கிறார். அவர் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.


இந்த படம் வெளியாவதற்கு 7 மாதங்களுக்கு முன்பே அவருக்கு படத்தை போட்டு காட்டினோம். அவருக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அவரது பள்ளியில் பெஞ்ச் முறையில் மாற்றம் செய்திருப்பது அவரது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்தது. படம் வெளியானபோது அதை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதுதான். ஓ.டி.டி.யில் வெளியான பிறகே நாங்கள் அதை பிரபலப்படுத்தினோம்.


அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் இந்த மாற்றங்களை செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


பள்ளியில் இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது புதியது அல்ல. கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அதை அமல்படுத்த முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளாவில் உள்ள பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.



பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்...


1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.


2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.


3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.


4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.


5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.


7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.


8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.


9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.


10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.


11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.


13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.


14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.


15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.


16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.


17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.


18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.


19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.


20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.


21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.


22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.


23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.


24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.


25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.


26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.


27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.


28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.


29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.


30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.


31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.


32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.


33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.


34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.


35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.


38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.


39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.


40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்


*🌹 💐🎊🤝🏻🙏🏻வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🌹🎊🤝🏻🙏🏻🌸💐*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (25.07.2025) நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - SPD Proceedings

இன்று (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள் >...