கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ATM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ATM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Gpay, PhonePe, PayTM Apps மூலமாக ATMல் பணம் எடுப்பது எப்படி?



 Gpay, PhonePe, PayTM செயலிகள் மூலமாக ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?

என்று பார்ப்போம்.


இம்முறையில் கீழ்க்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்கலாம்.

1. SBI - State Bank of India 

2. Union Bank of India

3. City Union Bank

4. Bank of Baroda

5. Punjab National Bank

6. Indian Bank

7. Canara Bank

8. Karur Vysya Bank

9. Federal Bank

10. Central Bank of India

11. Bank of India 


இப்போதைக்கு இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் மட்டுமே உள்ளது.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...



ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



 GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு சிறப்பான தகவல்.  UPI செயலிகளை (அப்ளிகேஷன்களை) பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஏ.டி.எம் மையங்களில் 5 முறைக்கு மேல் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு (Charges increase for more than 5 transactions at ATM centers)...

 ஏ.டி.எம் மையங்களில் 5 முறைக்கு மேல் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு (Charges increase for more than 5 transactions at ATM centers)...


5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.





ATM கட்டணம் - 01-01-2022 முதல் அதிகரிப்பு...

 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும்  மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.


இதை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால்  20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில்,  2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி  அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. 


அதன்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற ஏடிஎம்-களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."



SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...

 SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை  பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...



எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் மோசடி நடந்தது எப்படி?

 


எந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு மோசடியும் புதுப்புது ஃபார்முலாக்களில் நடக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் கார்டின் விவரங்களைச் சேகரித்து, போலி கார்டை தயாரித்து மோசடி செய்ததெல்லாம் பழைய டெக்னிக். தற்போது ஏடிஎம் கார்டுகளைக்கொண்டு சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை நூதன முறையில் வடமாநில இளைஞர்கள் மோசடி செய்திருக்கின்றனர். அது தொடர்பாக சென்னை வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு வங்கி தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.


ஏடிஎம்-மில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல்

இது குறித்து நம்மிடம் பேசிய மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில்தான் இந்த நூதன மோசடி நடந்திருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை டெபாசிட் மற்றும் பணம் எடுக்கும் வசதியுள்ள சிடிஎம் (Cash Deposit Machine) இயந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பணம் வந்தவுடன் அதை உடனடியாக எடுக்க மாட்டார்கள். பணம் எடுக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நிமிடத்துக்குப் பிறகு அது மீண்டும் இயந்திரத்துக்குள் உள்ளே சென்றுவிடும். பணம் உள்ளே செல்வதற்குச் சில நொடிகளுக்கு முன் இயந்திரத்தில் உள்ள சென்சாரையும் ஷட்டரையும் விரல்கள் மூலம் மோசடிக் கும்பல் தடுத்து நிறுத்தி பணத்தை எடுத்திருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் எடுக்கவில்லை என்று மெஸேஜ் வரும். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து, லட்சக்கணக்கில் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கும்பல். இந்த மோசடி குறித்து ஆரம்பத்தில் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரியவில்லை. ஆனால் ஏடிஎம் மையங்களில் வைக்கப்படும் பணத்தையும், அதை எடுத்தவர்களின் விவரங்களையும் வங்கி நிர்வாகம் ஆய்வு செய்தபோதுதான் இந்த மோசடி நடப்பது தெரியவந்திருக்கிறது. இது பழைய டெக்னிக் என்றாலும் ஜூன் மாதம் 17-ம் தேதி இந்த மோசடியில் வடமாநில இளைஞர்கள் வளசரவாக்கம், வடபழனி, ராமாபுரம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களிலுள்ள ஏடிஎம் மையங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



இந்த மோசடி குறித்து வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குப் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சென்னை முழுவதும் இந்த மோசடி நடந்திருப்பதால், மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்துவருகிறார்கள். ஏடிஎம் மையங்களிலுள்ள சிசிடிவி ஆதாரங்களை வங்கித் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்தபடி இளைஞர் ஒருவரும், அவருடன் இன்னொரு இளைஞனும் ஏடிஎம் மையத்தின் முன் நிற்கிறார்கள். பிறகு அவர்கள் ஆட்கள் வருகிறார்களா என நோட்டமிட்ட பிறகு உள்ளே செல்கின்றனர். அப்போது சிடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள். பணம் வந்ததும் அதை எடுக்காமல், பணம் உள்ளே செல்லும் சமயத்தில் சென்சாரைத் தடை செய்து பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.


அது தொடர்பாக விசாரித்தபோது டெல்லியிலுள்ள வங்கிக் கணக்கை இந்தக் கும்பல் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். இந்த மோசடி சம்பவத்துக்குப் பிறகு குறிப்பிட்ட மாடல் கொண்ட சிடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ வங்கி தடை விதித்திருக்கிறது. சிடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணத்தை எடுத்த கும்பலைப் பிடித்தால் மட்டுமே எவ்வளவு ரூபாய் எடுத்தார்கள் என்ற விவரம் தெரியவரும். வங்கித் தரப்பில் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகத் தகவல் தெரிய வந்திருக்கிறது. மோசடிக் கும்பல் டூ வீலரைப் பயன்படுத்தியிருக்கிறது. அந்த வாகன பதிவு நம்பர் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.


இந்த மோசடி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் உயரதிகாரிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது மோசடி நடந்தது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி : விகடன்

ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...

 ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...


அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.


இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.


வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of winners of Thirukkural competitions

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...