கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

D.El.Ed. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
D.El.Ed. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) மாணவர் சேர்க்கை



 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்


மாணவர் சேர்க்கை 2026


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) Diploma in Elemantary Education


2026 2027 மாணவர் சேர்க்கை (ஆன்லைன்/நேரடி)


Online சேர்க்கை https://scert.tnschools.gov.in

என்ற இணையவழி மூலம் 02.06.2026 to 15.06.2026 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

 16.06.2026 முதல் நேரடி சேர்க்கை இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது (Spot Admission)


வயது வரம்பு


1) பொதுப்பிரிவினர் 30வயது மிகாமல் இருக்க வேண்டும் SC/2) SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்


3) ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் (ம) கைம்பெண்கள் - 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்


விண்ணப்பகட்டணம்


SC/SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ 250.00 OC/BC/BCM/ MBC/DNC 5.500.00


சேர்க்கை கட்டணம்


ரூ.3500.00


கல்விக்கட்டணம்


ரூ 1500.00(ஆண்டு ஒன்றிக்கு)


குறிப்பு


தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:


https://scert.tnschools.gov.in


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு D.El.Ed., - ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்...


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு D.El.Ed., - ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்...


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்; 


இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி ஆசிரியர் (D.El.Ed.,) பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் (Instructions for applying for Diplomo in Elementary Education (D.El.Ed.,) )...



தொடக்கக் கல்வி ஆசிரியர் (D.El.Ed.,) பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் (Instructions for applying for Diplomo in Elementary Education (D.El.Ed.,) )...


💥 இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஜுலை 4ஆம் தேதியில் காலை 10 மணிக்கு https://scert.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகும். 


💥 2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன.


💥 தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பிற்குச் சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், பொதுப்பிரிவினர் (குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC SCA ST) பிரிவினர் குறைந்தபட்சம்  45 விழுக்காடு (540/1200 - 270/600) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.


💥 விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ் / ஆங்கிலம்/ தெலுங்கு/ உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை 12ஆம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயாமாகப் பயின்றிருக்க வேண்டும்.


💥 31-07-2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால்  கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது / பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் ஆதி திராவிடர்/ பழங்குடியினருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். 


💥 சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.


💥 விண்ணப்பத்தினை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 09.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



2021-2022ஆம் கல்வியாண்டில்(Academic Year) தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில்(D.El.Ed.,) சேர ஆகஸ்டு 16ஆம் தேதி(16-08-2021) முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 27-08-2021...

 2021-2022ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில்(D.El.Ed.,) சேர ஆகஸ்டு 16ஆம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 27-08-2021...




விண்ணப்பிக்கும் முகவரி: https://scert.tnschools.gov.in


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்