இடுகைகள்

முறைகேடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை...

படம்
 நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை... இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.07.24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?

பல்கலைக்கழக முறைகேடு விசாரணை: 3 மாதத்தில் அறிக்கை...

படம்
உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணை:  சேலம் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து, செய்திகள் வெளியாகி உள்ளன. மதுரை காமராஜ் மற்றும் அண்ணாமலை பல்கலையிலும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துஉள்ளன. எனவே, இது குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் சங்கீதா, பல்கலைகளுக்கான அரசின் இணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் விசாரணை நடத்த உள்ளனர். தங்களின் விசாரணை முடிவுகளை, மூன்று மாதத்தில் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் மூன்று கோடி மாயம்...

படம்
 ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் மூன்று கோடி மாயம். கூட்டுறவு அதிகாரியின் விசாரணை முடிந்தது மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை...

பள்ளி நிதியில் முறைகேடு - 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

படம்
 நீலகிரி மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன், பொன்னானி பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பான, புகார்களை மார்ச், 1க்குள் அனுப்பவும் -ஆசிரியர் தேர்வு வாரியம்...

படம்
>>> Click here to Download TRB Announcement...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...