கரும்பூஞ்சை தொற்றுக்கு மருந்து விலையை குறைத்தது Genetics Life Science நிறுவனம்
▪️ ரூ.7000க்கு விற்கப்பட்ட அம்போ டெரிசின் - பி மருந்தை ரூ.1200 க்கு விற்க ஒப்புதல்...
கரும்பூஞ்சை தொற்றுக்கு மருந்து விலையை குறைத்தது Genetics Life Science நிறுவனம்
▪️ ரூ.7000க்கு விற்கப்பட்ட அம்போ டெரிசின் - பி மருந்தை ரூ.1200 க்கு விற்க ஒப்புதல்...
அதிகமாக நீராவி பிடித்தால், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது,” என, பிரபல மருத்துவர் தீபக் ஹால்திபூர் எச்சரித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடையும் நோயாளிகள் கறுப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
சிகிச்சை
கர்நாடக தலைநகர் பெங்களூரில், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரபல காது, மூக்கு மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கான மருத்துவர் தீபக் ஹால்திபூர் கூறியதாவது:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தான், கறுப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். அவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி மாத்திரை மருந்துகளை மட்டும் எடுத்து வருகின்றனர்.
அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.கறுப்பு பூஞ்சை பரவலுக்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது என்னவென்றால், மரமணு மாறிய கொரோனா வைரஸ்.
இரண்டாவது, மக்களில் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாமல் இருப்பது.மூன்றாவது காரணம், மக்கள் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து நீராவி பிடிப்பது.நீராவி பிடித்தால் கொரோனாவில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என, மக்கள் நினைக்கின்றனர்; அது முற்றிலும் தவறு. அதிகப்படியாக நீராவி பிடிப்பதால், மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். கறுப்பு பூஞ்சை நோய்க்கிருமி காற்றில் கலந்து உள்ளது. இதை நம் மூக்கு தடுக்கும். ஆனால், நீராவி பிடிப்பதால் மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு திறன் குறைந்து விடும். இதை மக்கள் உணரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு (ம்யூகர்) பூஞ்சை கொரோனாவின் இரண்டாவது அலையில் கொள்ளை நோயாக ஏற்படுவதற்கு காரணங்கள்...
அறிவியல் பூர்வமான தர்க்கங்கள்
டாக்டர்.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
முதல் அலையின் முடிவில் கூட மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ம்யூகார் தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டறியப்பட்டது
ஆனால் இப்போது இரண்டாம் அலையின் உச்சத்தில் மிக அதிகமான அளவு இந்த ம்யூகார் பூஞ்சை கண்டறியப்படுகிறது
இதற்கான சில தர்க்க ரீதியான காரணங்களை முன் வைக்கிறேன்
ஒரு தொற்று நோய் கொள்ளை நோயாக பரவுவதற்கு
மூன்று விசயங்கள் தேவை
முதல் தேவை
தீவிரத்துடன் தாக்கும் தொற்றுக்கிருமி
( AGENT or PATHOGEN)
இரண்டாவது தேவை
அந்த கிருமி தொற்றுவதற்கேற்ற உயிரி
( HOST)
மூன்றாவது
தொற்றை ஏற்படுத்துவதற்கேற்ற சூழ்நிலை
( ENVIRONMENT)
இவை மூன்றும் ஒன்றாக அமையும் போது தான் ஒரு தொற்று நோய் கொள்ளை நோயாக மாறும்
உதாரணம்
டெங்கு பரப்பும் கொசு (agent)
மனிதர்கள் (host)
மழைக்காலம்( environment)
இவை மூன்றும் ஒன்றாக சேரும் போது தான் டெங்கு வேகமெடுக்கும்
அது போல இந்த ம்யூகார் பூஞ்சைக்கும் மூன்று விசயம் தேவை
1. வீரியமிக்க தொற்றுக்கிருமி (PATHOGEN)
இங்கு ம்யூகார் பூஞ்சை
2. அந்த கிருமி தொற்றுவதற்கேற்ற உயிரி(HOST)
இங்கு எதிர்ப்பு சக்தி குன்றிய நிலையில் இருக்கும் மனிதர்கள்
( கட்டுக்கடங்காத நீரிழிவு நோயாளிகள் / உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை / புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள்/ எய்ட்ஸ் நோயாளிகள்/ இவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை வழங்கப்படும் போது எதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும்)
3. தொற்றுப் பரவலை ஊக்குவிக்கும் சூழல் ( Environment)
இந்தியாவில் வெயில் காலங்களில் ம்யூகார் பூஞ்சையின் வித்துகள் (SPORES) மிக அதிகமாக பொதுவெளியில் காணப்படும்
இந்தியாவில் உருவான கொரோனாவின் இரண்டாவது அலை.
அதிலும் மிதமான மற்றும் தீவிர கொரோனா நிலையில் 20% நோயாளிகள் பாதிக்கப்படுவதால் கோவிட் நோய் தன்மையே எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கிறது.
மேலும் இந்தியாவில் 13கோடி நீரிழிவு நோயாளிகள் தற்போது இருக்கின்றனர்
இவர்களிடையே சரியான கண்ட்ரோல் இல்லாதவர்கள் அதிகம் பேர் இருக்க வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது இன்னும் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
இரண்டாம் அலையில்
கொரோனா தொற்றுக்குள்ளாகும் 100பேரில் 20% பேர் குறை தீவிர (moderate) மற்றும் அதி தீவிர (Severe) நோய் நிலையை அடைவதால் இவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச்செய்யும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இது ஐசிஎம்ஆர் ப்ரோடாகாலில் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஸ்டீராய்டு உபயோகித்தால் தான் நோய் நிலை தீவிர தன்மைக்கு செல்லாமல் இருக்கும்.
ஆனாலும் இந்த ஸ்டீராய்டு உபயோகம் என்பதை சாதாரண நோய் நிலையிலும் பலரும் பரிந்துரை செய்வது அல்லது நோயாளியே மருந்தகங்களில் வாங்கி உண்பது என்று இருப்பது இது போன்ற ஆபத்தை வரவழைக்கிறது
இன்னும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் அதிகமானதாலும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவுகளும் அதிகமாகின. இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து வெளியே வரும் இடத்தில் தண்ணீருக்குள் ஈரப்பதத்தை வாங்கிக்கொண்டு ஆக்சிஜன் வெளியே வரும். இதை HUMDIFIER என்பார்கள்
அந்த ஹூமிடிஃபையர்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலோ
அதில் நிரப்பப்படும் நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான நீராக இருக்க வேண்டும்.
ஆனால் மருத்துவமனைகளில் நிறைந்த கூட்டத்தாலும் வார்டுகளை பராமரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் இதை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்திருக்கலாம். அங்கு இந்த பூஞ்சை வளர்ந்திருக்கலாம்.
ஏற்கனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் இதை
உள்ளே நுகர்ந்திருக்கலாம். இதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
இதற்கடுத்தபடியாக கூறப்படும் தியரி
இந்த ம்யூகர் பூஞ்சை நன்றாக வளர்வதற்கு துத்தநாகம் தேவை என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்த பெருந்தொற்று காலத்தில் சிகிச்சையில் இருக்கும் அனைவருக்கும் துத்தநாகம் மாத்திரை (ZINC)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படுகின்றது.
இது போன்ற எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுள் பூஞ்சை நுழைந்தால் ரத்தத்தில் இருக்கும் துத்தநாகம் நன்றாக வேர் பிடித்து வளர ஏதுவாக அமைகிறதோ என்ற எண்ணமும் இருக்கிறது.
இனி இந்த பூஞ்சை வராமல் தடுக்க சில யுக்திகளை நாம் கடைபிடிக்கலாம்
நம்மால் நம்மை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் படர்ந்திருக்கும் இந்த பூஞ்சையை அழிக்க முடியாது எனவே Agent ஐ அழிக்கும் யுக்தி இங்கு பலனளிக்காது
தொற்றுப்பரவ தேவையாக இருக்கும் முக்கிய காரணி - HOST
எனவே இந்த தொற்றைப் பெற வாய்ப்புள்ள மக்களான கட்டுக்கடங்காத நீரிழிவு உள்ளவர்கள்- உடனடியாக சிகிச்சை எடுத்து நீரிழிவை கண்ட்ரோல் செய்ய வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து / புற்று நோய் சிகிச்சைக்காக எதிர்ப்பு சக்தி குன்றச்செய்யும் மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் கட்டாயம் வெளியிடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் எப்போதும் வரக்கூடாது.
தோட்ட வேலைகள் மற்றும் தூசு படிந்த கட்டிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
மூன்றாவது- சூழ்நிலையை மாற்றுவது
கோவிட் நோய் வராமல் பாதுகாத்துக்கொள்வது.
தடுப்பூசிகள் பெற்று குறை தீவிர மற்றும் அதி தீவிர கோவிட் நோய் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது
ஸ்டீராய்டு மருந்துகளை தேவையானோருக்கு, தேவையான அளவில், தேவையான காலம் மட்டும் உபயோகித்தல் நன்று
ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு ஹூமிடிஃபயர்களில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட sterile தண்ணீர் மட்டும் உபயோகிக்க வேண்டும். அது இல்லாத இடத்தில் நார்மல் சலைன் உபயோகிக்கலாம். அது தொற்று நீக்கம் செய்யப்பட்ட குடுவைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு ஒரு முறை ஹூமிடிஃபையரை நன்றாக தேய்த்து கழுவி உபயோகிக்க வேண்டும்.
ம்யூகர் தொற்று நன்றாக வளர உதவும் என்ற நிலையில் இருக்கும் துத்தநாகத்தை மாத்திரை வடிவில் நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றும் ரிஸ்க் உள்ளவர்களுக்கு வழங்காமல் இருக்கலாம்
ம்யூகர் தொற்று மேற்சொன்ன பல காரணிகள் ஒன்றானதால் தான் இன்று கொள்ளை நோயாக மாறியிருக்கிறது
நிச்சயம் மேற்சொன்ன விசயங்களில் நாம் மாற்றம் செய்தால் ம்யூகர் நம்மிடம் இருந்து விடைபெறும்
கவலை வேண்டாம்
இன்றும் ம்யூகர் பூஞ்சை அரிதினும் அரிதான தொற்றாகவே இருக்கிறது
கொரோனா சிகிச்சை பெற்ற அனைத்து நீரிழிவு நோயாளிகளும் பீதி நிலைக்கு செல்லத் தேவையில்லை
எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது
விரைந்து நோயைக் கண்டறிந்தால்
விரைவில் சிகிச்சை அளித்து காக்க முடியும்
டாக்டர்.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
ஆதாரங்கள்
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6496101/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4433550/
https://pubmed.ncbi.nlm.nih.gov/24005091/
https://acsjournals.onlinelibrary.wiley.com/doi/pdf/10.1002/1097-0142%28195903/04%2912%3A2%3C330%3A%3AAID-CNCR2820120217%3E3.0.CO%3B2-F
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை (G.O.Ms.No.249, Dated: 20-05-2021) வெளியீடு.
யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான்.
பொது மக்கள் கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது
ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி, ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம்.
மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு...
G.O.Ms.No.249, Dated: 20-05-2021...
"இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரே மாஸ்க் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்" - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசும் இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "பூஞ்சை தொற்று பாதிப்புகள் புதிதல்ல. இருப்பினும் தொற்று நோய் என கூறக்கூடிய அளவிற்கு பூஞ்சை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை.
ஆனால் அதுபோல் வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். கட்டுப்பாடற்ற நீரிழிவு, டோசிலிசுமாப் மருந்துடன் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு, வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள் கூடுதல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வது ஆகிய காரணிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் கருப்பு பூஞ்சை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது" என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "சிலிண்டரிலிருந்து நேரடியாக குளிர்ந்த ஆக்சிஜனைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதேபோல் 2-3 வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிவது கருப்பு பூஞ்சை ஏற்பட வழிவகுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை தொற்று நோயின் அறிகுறிகள் என்ன?
👉🏻 கொரோனா நோய் தொற்று காலத்தில் கருப்பு பூஞ்சை என்ற மற்றொரு நோய் மக்களை பயமுறுத்திவருகிறது.
கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன? அதனுடைய அறிகுறிகள் என்ன? யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்? என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் நீண்ட காலமாக நம் பூமியில் உள்ள நோயாகும்.*
👉🏻 *வீட்டில் காற்று புகாத பகுதிகளில் இந்த கருப்பு பூஞ்சை காணப்படும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் எல்லோருக்கும் வராது.*
👉🏻 *பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காது, தாடை பகுதிகளில் வலி, வீக்கம் காணப்படும். பல் வலி போல் தாடையில் வலி இருக்கும்.*
👉🏻 *ஒத்தை தலைவலி, மூக்கில் ரத்தம் வருவது கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை தாக்கிய பகுதியை பரிசோதனை செய்து பார்த்தால் அங்கு கருப்பு நிறத்தில் இந்த பூஞ்சைகள் காணப்படும். இதன்காரணமாக இந்நோய்க்கு கருப்பு பூஞ்சை என பெயரிடப்பட்டுள்ளது.*
👉🏻 *கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்கும்.*
👉🏻 *ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும் மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, ஆர்த்ரைட்டிஸ் நோய் பாதிப்பு, சிறுநீரக போன்ற மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.*
👉🏻 *நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ‘immuno suppression’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.*
👉🏻 *ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ச்சியாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துகொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதன்காரணமாக கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரிக்கும்.*
👉🏻 *கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சு திணறல் அதிகரிக்கும். மூச்சு திணறலை குறைக்க ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.*
👉🏻 *கொரோனா சிகிச்சையின் போது எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய் அதிகளவு இருந்தால் கொரோனா சிகிச்சைக்கு பிறகு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் படிப்படியாக கண் பார்வையை பாதிக்கும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் நோயில் இருந்து மீண்டு விடலாம்*
👉🏻 *நீரிழிவு (சர்க்கரை ) நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் தாக்கிய பிறகு அதற்கு முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால் இந்நோய் மூளையை தாக்கும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய்க்கு ‘Amphotericin-B’ மருந்தை மத்திய சுகாதாரத் துறை பரிந்துரைச் செய்துள்ளது.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் தொடக்கத்திலேயே சரி செய்துவிடமுடியும்.*
👉🏻 *கருப்பு பூஞ்சை நோய்க்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.*
கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு Amphotericin - B என்னும் மருந்தைப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை...
கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல், அதற்கு சிகிச்சை அளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும்"
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய்...
கருப்பு பூஞ்சை தொற்று (Black Fungus Infection - Mucormycosis) என்பது என்ன? - மருத்துவர்கள் விளக்கம்...
01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...