கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முகக்கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகக்கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்...

 ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்... இந்தியாவில் கொரோனா வைரசின்  இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது . தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது . மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர் . இந்நிலையில், 18 வயதுக்கு  உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில் , 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம் . 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை . தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது .





கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு...



 கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை ( G.O.(D) No.:695, Dated: 04-06-2021 ) வெளியீடு...


கிருமிநாசினி, சர்ஜிகல் மாஸ்க், பிபிஇ கிட், N95 மாஸ்க் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்ச (MRP) விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. அதாவது N95 மாஸ்க் 22 ரூபாய், சர்ஜிக்கல் மாஸ்க் 4.50 ரூபாய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும், அதற்கான உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது.


விலை விவரங்கள்:

கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110

N95 முககவசம் 22 ரூபாய்

கையுறை 15 ரூபாய்

பிபிஇ கிட் 273 ரூபாய்

இரண்டு அடுக்கு முககவசம் 3 ரூபாய்

மூன்று அடுக்கு முககவசத்தின் விலை 4 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.


>>> Click here to Download G.O.(D) No.:695, Dated: 04-06-2021...


இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரே மாஸ்க் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை...



"இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரே மாஸ்க் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்" - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை! 

 

 


இந்தியாவில் கரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசும் இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


 


இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "பூஞ்சை தொற்று பாதிப்புகள் புதிதல்ல. இருப்பினும் தொற்று நோய் என கூறக்கூடிய அளவிற்கு பூஞ்சை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. 




ஆனால் அதுபோல் வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். கட்டுப்பாடற்ற நீரிழிவு, டோசிலிசுமாப் மருந்துடன் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு, வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள் கூடுதல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வது ஆகிய காரணிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் கருப்பு பூஞ்சை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது" என கூறியுள்ளார். 


 


தொடர்ந்து அவர், "சிலிண்டரிலிருந்து நேரடியாக குளிர்ந்த ஆக்சிஜனைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதேபோல் 2-3 வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிவது கருப்பு பூஞ்சை ஏற்பட வழிவகுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.



முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது...

 


ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகாரத்து வரும் நிலையில் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடைப்பயிற்சியின் பொழுது முகக்கவசம் (Mask) அணிவது நல்லதா?

 பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வது ஒவ்வொருவருடைய உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால், கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அடர்த்தியான முகக்கவசங்கள் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான செயலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



உடல் நலனைக் கவனத்தில்கொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருபகுதியினர்தான் என்றாலும் அவர்களை இந்தக் கரோனா காலத்திலும் யாராலும் தடுக்கமுடியவில்லை. பூங்காக்கள் பூட்டப்பட்டிருந்தாலும் கடற்கரையில் அனுமதி மறுக்கப்பட்டாலும் காலை அல்லது மாலை வேளைகளில் சாலைகளில் நடைப்பயிற்சி, ஜாகிங் மேற்கொள்பவர்களை இப்போதும் பார்க்கமுடிகிறது.


‘N95’ முகக்கவசம் நல்லதா?

இவர்களில் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஒருசிலர் என்றால் தினமும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அதிகரித்துக்கொண்டே ஜாகிங்கில் ஈடுபடுபவர்கள் மற்றொரு பிரிவினர். பொதுவாக உடல்நலனைக் கவனத்தில் கொள்பவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றாலும் பாதுகாப்புக்காக அணியும் முகக்கவசமே பலருக்குப் பிரச்சினையாக உள்ளது. நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதன் பிரதான நோக்கமே உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்கும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும்தான்.


ஆனால், நடைப்பயிற்சின்போது அடர்த்தி அதிகமுள்ள N95 போன்ற முகக்கவசங்களை அணிவதால் மூச்சு இரைப்பு அதிகரிப்பதுடன் நுரையீரல் பாதிக்கப்படும் என்கிறார் ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் இயக்குநர், மருத்துவர் ஜி.மனோகரன்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “வீட்டில் உள்ள நடைப்பயிற்சி மிஷினில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அல்லது மொட்டை மாடி, கனரக வாகனங்களை நிறுத்துமிடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். ஆனால் வீட்டிற்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் அடர்த்தி குறைவாக உள்ள முகக்கவசம் அணிந்துகொண்டு, 10 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.


பொதுவாக நாம் நடக்கும்போது ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முதல் பதினாறு முறை சாதாரணமாக மூச்சுவிடுவோம். இதுவே நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் அதிகளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். இதனால் அதிக அளவு மூச்சுவிடத் தொடங்குவோம். அதேபோல் சாதாரணமாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு எழுபத்து இரண்டு முறை இதயத் துடிப்பின் அளவு இருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும் அளவைப் பொறுத்து இதயத் துடிப்பின் அளவும் ஒரு நிமிடத்திற்கு தொண்ணூறு முதல் நூறு முறை துடிக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது ஹீமோகுளோபின் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும். பொதுவாக குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடு நூறு சதவீதம் இருக்கும். பெரியவர்களுக்கு சற்று குறைவாக 96, 97 என்ற அளவில் இருக்கும். இது சாதாரணமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய அளவுதான்.


நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள் அணியும் நான்கு, ஐந்து லேயர்களைக் கொண்ட N95 முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை. அடர்த்தி அதிகமுள்ள இந்த வகை முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உடல் திசுக்களுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். இந்தச் செயல் காரணமாக நுரையீரல் தேவையில்லாத சிரமத்திற்கு உள்ளாகும். நாம் எந்த நோக்கத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோமே அந்த நோக்கத்தையே இந்த முகக்கவசம் கெடுத்துவிடுகிறது.


தண்ணீரின் அடியில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூச்சை அடக்க முடியாமல் திணறி வெளியே வருவதுபோல் அடர்த்தி அதிகமுள்ள முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருகட்டத்திற்கு மேல் மூச்சு இரைப்பு அதிகமாகி மூச்சுவிட முடியாமல் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும். மேலும் N95 முகக்கவசம் அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உண்டாகும் வியார்வைத் துளிகள் எல்லாம் அந்த முகக்கவசத்தில் ஊறி முகக்கவசத்தை மற்றொரு முறை பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். வியர்வையுடன் உள்ள முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மூச்சுக்குழாயில் வேறு சில பிரச்சினைகள் உண்டாகும். சாதாரண முகக்கவசங்களை அணிந்துகொண்டு மக்கள் கூட்டம் அதிகமில்லாத காலை வேளைகளில் ஒருவர் நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இந்தக் கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்” என வலியுறுத்துகிறார் மருத்துவர் ஜி.மனோகரன்.

முகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைகட்டுப்படுத்தும் நோக்கில் குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் சுகாதாரத் துறைஉத்தரவையும் மீறி சிலர் பொதுவெளியில் முகக்கவசம் இன்றிநடமாடி வருகின்றனர். இவ்வாறுபொது இடங்களில் முகக்கவசம் இன்றி அதிகம் பேர் நடமாடுவதை சுட்டிக்காட்டி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி விக்ரம்நாத். நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கியஅமர்வு தாமாக முன்வந்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது.

அப்போது எச்சரிக்கை மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்யுமாறு தண்டனை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கமல் திரிவேதி, "உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சிரமம். இதுதொடர்பாக பரிசீலிக்க ஒரு வாரம் அவகாசம் தேவை" என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். முகக்கவசம் அணியாமல் வெளியே திரியும் நபர்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற தண்டனை விதிப்பது சரியே என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்று பவர்கள் ரூ.1,000 அபராதம்செலுத்துவதுடன் கரோனா சிகிச்சை மையத்தில், 5 முதல்14 நாட்கள் வரை பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பணியானது தினசரி குறைந்தபட்சம் 4 மணி முதல் 6 மணி நேரங்கள் வரை நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகளில் மருத்துவம் தொடர்பு இல்லாமல் இடத்தை சுத்தப்படுத்துதல், பாத்திரங்களை தூய்மை செய்தல், சமையல் செய்வதில் உதவுதல், உணவு பரிமாறுதல், தகவல் சேகரிப்பு போன்றவையாக அமையலாம் என்றும் நீதிபதிகள்தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

>>> சரியான முறையில் முகக்கவசம் அணியும் வழிமுறைகள்....

 உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் # COVID19லிருந்து பாதுகாக்க, பருத்தி துணியினால் ஆன முகக்கவசத்தை சரியாக அணிய எட்டு எளிய படிநிலைகள் உள்ளன.


உங்கள் முகக்கவசத்தை அணிந்ததற்கு நன்றி.

#TogetherAgainstCOVID19

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Information about e_EPIC

e_EPIC பற்றிய தகவல்  1. e_EPIC என்பது தேர்தலின் நோக்கத்திற்கான அடையாளச் சான்றாகும். 2. EPICஐ வைத்திருப்பது வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்ப...