கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Matrix லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pay Matrix லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு திருந்திய ஊதிய விகித விதிகள் 2017 - ஒரு நபர் குழு 2019ன் படி கூடுதல் தளங்கள் தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Revised Pay Scale Rules 2017 - Additional Cells Created As per One Man Committee 2019 - Finance Department Govt Additional Chief Secretary letter regarding providing clarification) கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022...



>>> தமிழ்நாடு திருந்திய ஊதிய விகித விதிகள் 2017 - ஒரு நபர் குழு 2019ன் படி கூடுதல் தளங்கள் தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Revised Pay Scale Rules 2017 - Additional Cells Created As per One Man Committee 2019 - Finance Department Govt Additional Chief Secretary letter regarding providing clarification) கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






நிதித்‌ துறை,

தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை - 600 009.


கடித எண்‌.38665/ஊ.பி-2/2022, நாள்‌ 15.10.2022


அனுப்புநர்‌

திரு.நா.முருகானந்தம்‌, இ.ஆ,ப.,

அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌.


பெறுநர்‌

கருவூலக்‌ கணக்கு ஆணையர்‌,

கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை,

571, அண்ணாசாலை,

நந்தனம்‌,

சென்னை - 35.


ஐயா,


பொருள்‌:- தமிழ்நாடு திருத்திய ஊதிய விகித விதிகள்‌ 2017 - ஒரு நபர்‌ குழு 2019-ன்படி கூடுதல்‌ தளங்கள்‌ தோற்றுவித்தது - தெளிவுரை வழங்குதல்‌ - தொடர்பாக


பார்வை:- 1. அரசு ஆணை (நிலை) எண்‌.303, நிதி (ஊ.பி)த்‌ துறை, நாள்‌ 11.10.2017.

2. அரசு ஆணை (நிலை) எண்‌.90, நிதி (ஊ.பி)த்‌ துறை, நாள்‌ 26.02.2021.

3. கருவூலக்‌ கணக்கு ஆணையரின்‌ கடித எண்‌ ந.க.எண்‌.20134/டி2/2022, நாள்‌ 26.07.2022.


பார்வையில்‌ காணும்‌ கடிதம்‌ மற்றும்‌ அரசு ஆணையின்‌ மீது தங்கள்‌ கவனம்‌ ஈர்க்கப்படுகிறது. பார்வை - 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ வழங்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல்‌ தளங்கள்‌, பார்வை - 1-ல்‌ காணும்‌ அரசாணையின்‌ அட்டவணை - 1 மற்றும்‌ அட்டவணை-3-க்கு மாற்றீடாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, பார்வை - 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ வழங்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல்‌ தளங்கள்‌ வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கும்‌ பொருட்டு வழங்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


தங்கள்‌ நம்பிக்கையுள்ள,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்காக




இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)...

 


இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)...


நிதித்துறை அரசாணை எண்: 90 நாள்: 26.02.2021- ல் வெளிவந்த பின்னரும் இ.நி.ஆசிரியர்களின் Level of pay என்பதை 20600 - 65500 என்று சிலபல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் வழங்கும் ஆண்டு ஊதிய உயர்வினையும் வழங்க மறுக்கும் நிலையும் காணப்படுகிறது. அரசாணை 90 - ல் Schedule 1 and III containing the pay matrix for employees pay appended to this order shall be substituted for the schedule - 1 and III in the government order first read above என உள்ளது. 



அதாவது இந்த அரசாணையில் உள்ள schedule 1 and III ல் உள்ள Pay matrix அட்டவணை, மேலே முதலில் படிக்கப்பட்ட அரசாணையில் ( அதாவது பார்வை 1 - ல் உள்ள அரசாணை 303- ல் ) உள்ள schedule 1 and III க்கு மாற்றாக மாற்றப்படும் என்பதாக குறிப்பிடப்பட்டு, அட்டவணை 1 என்பது முந்தைய ஊதிய விகிதங்களுக்கு ( Existing Level of Pay ) இணையான Revised Levels of Pay குறிப்பிட்ட அட்டவணையாக உள்ளது.



எனவே Revised Levels of Pay அட்டவணைப்படி இ.நி்.ஆசிரியர்களின் ஊதிய நிலை 20600 - 75900 என்பதே சரியானது. 


 

இவ்வாறான நிலைகளில் ஆண்டு ஊதிய உயர்வு சிலபல இடங்களில் மறுக்கப்பட்டதால், கேட்கப்பட்டு பெறப்பட்ட RTI தகவலிலும், ஊதிய நிலை 10 - ல் ரூ.20600 - 75900 என அரசாணை நிலை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை (Level )10 - ல் தளம் ( Cell ) 40 - ஐ ( ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 இந்த RTI தகவலானது இ.நி.ஆசிரியர்களின் Level of Pay என்பது 20600 - 75900 என்பதையும், வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்பதையும் தெளிவாக்குகிறது. 



எனவே ஆசிரிய நண்பர்கள் Revised Levels of Pay அட்டவணைப்படி அனைவருக்கும், குறிப்பாக இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய நிலை குறிப்பிடப்படுவதை கவனிக்க வேண்டுகிறேன். அத்துடன் அரசாணைப்படி ஆண்டு ஊதிய உயர்வினை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து முயற்சிக்க அன்புடன் வேண்டுகிறேன். 



>>> Click here to download - RTI LETTER (RTI தகவல் கடித எண்.19861 / நிதி(சிஎம்பிசி)த்துறை/ 2022, நாள் : 05.05.2022)...


>>> இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய நிலையில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில், மேலும் 5 cells கூடுதலாக(40 என்பதை 45 ஆக அனுமதித்து) Pay Matrix உருவாக்கி (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை எண்: 90, நாள்: 26-02-2021 வெளியீடு...


>>> ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model)...


நன்றி. 

தகவல் தொகுப்பு:

C. THOMAS ROCKLAND

கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ.65500/- எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பள்ளிக்கல்வி ஆணையரக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் பதில் கடிதம், (Do Secondary Grade Teachers working in the SchoolbEducation Department get an annual salary Increment once their basic salary reaches Rs.65500 / -? - Reply Letter from the Public Information Officer and Deputy Director (e-Governance) of the Commisionerate of School Education under the Right to Information Act 2005) ஓ.மு.எண்: 19546/ சி5/ இ4/ 2022, நாள்: 19-04-2022...



>>> கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ.65500/- எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா?  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பள்ளிக்கல்வி ஆணையரக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் பதில் கடிதம், (Do Secondary Grade Teachers working in the SchoolbEducation Department get an annual salary Increment once their basic salary reaches Rs.65500 / -? - Reply Letter from the Public Information Officer and Deputy Director (e-Governance) of the Commisionerate of School Education under the Right to Information Act 2005) ஓ.மு.எண்: 19546/ சி5/ இ4/ 2022, நாள்: 19-04-2022...

இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய நிலையில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில், மேலும் 5 cells கூடுதலாக(40 என்பதை 45 ஆக அனுமதித்து) Pay Matrix உருவாக்கி (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை எண்: 90, நாள்: 26-02-2021 வெளியீடு...

 


இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய நிலையில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில், மேலும் 5 cells கூடுதலாக(40 என்பதை 45 ஆக அனுமதித்து) Pay Matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. Pay Matrix இல் உச்ச பட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 - ஒரு நபர் குழுவின்  பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை எண்: 90, நாள்: 26-02-2021 வெளியீடு...

G.O.Ms.No: 90, Dated: 26-02-2021...


>>> Click here to Download G.O.Ms.No: 90, Dated: 26-02-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...