கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SGT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SGT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்



இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்


Stay on the Surplus Counseling of Secondary Grade Teachers – Madras High Court


ஒரு ஒன்றியத்தில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 


விசாரணையில் அரசு தரப்பில் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடை செய்ய முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஜி.சங்கரன் மாநிலங்கள் முழுவதும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதனால் கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்ய கூடாது என வாதிட்டத்தின் அடிப்படையில், கலந்தாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கக்கூடாது.


செப்டம்பர் மாதம் மீண்டும் 01.08.2026 மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது நடைபெறும் சிறப்பு தகுதி தேர்வு முடிந்த பின்னர் பதவி உயர்வு வழங்கி, அதன் பின் பணி நிரவல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் மற்றும் இடைக்காலத்தடை பிறப்பித்துள்ளது.


TRB - Direct Recruitment of SGTs - Reserve List

 

 

TRB - Direct Recruitment of SGTs - Reserve List


ஆசிரியர் தேர்வு வாரியம் - இடைநிலை ஆசிரியர் நேரடி பணி நியமனம் 2024


TEACHERS RECRUITMENT BOARD 


DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024


RESERVE LIST



TEACHERS RECRUITMENT BOARD DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024

Notification No.01/2024 on 09.02.2024, Addendum 01-A/2024 Dated:16.07.2024 and 26.03.2025 

RESERVE LIST

In obedience with the order passed by the Hon’ble Madurai Bench of Madras High Court

in W.P.(MD). No.29657 of 2025 and Tamil Nadu Government Servants (Conditions of Service) Act 2016 Section 3(U), the Board here by releases the list of candidates who have been placed in the reserve list for the Post of Secondary Grade Teachers in the Special Rules for the Tamil Nadu Elementary Education Subordinate services. This release is subject to the outcome of the final orders in the Appeal to be filed by this Board on the aforesaid Judgment. The position of the candidates in the reserve list is furnished in the brackets against their Roll number:



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Interview of School Education Minister on the protest of SG Teachers

 

 

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பேட்டி


Interview with School Education Minister Mr. Anbil Mahesh on the protest of Secondary Grade Teachers



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...



"சமவேலைக்கு சமஊதி​யம்" வழங்​கக்​கோரி சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது



 சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்​பட்​டனர். சாலை​யில் அமர்ந்து போராடிய​தால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டது. ஆசிரியை ஒரு​வர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்​பட்​டது.


அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009க்கு முன்னர் பணி​யில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதற்கு பின்னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வருகின்​றனர்.


இந்​நிலை​யில், டிசம்பர் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்​டம் நடத்​தப்​ போவதாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வளாகத்​தின் அனைத்து வாயில்​களும் மூடப்​பட்டு போலீ​ஸார் குவிக்கப்​பட்​டனர்.


போராட்​டத்​துக்​காக வெளியூர்​களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்​களை நுங்கம்பாக்கம், எழும்​பூர் ரயில்​நிலை​யங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வழிமறித்து போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றிச்​சென்​றனர். இந்நிலையில், காலை 11.30 மணி​யள​வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மை​யில் 50-க்கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகை​யிட முயன்​றனர்.


மற்​றொரு​புறம் ஏராள​மானோர் குவி​யத்​தொடங்​கினர். அதில் ஒரு பிரி​வினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்​டனர். அவர்களை காவல் துறையினர் குண்​டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்றினர்.


திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டம் கூட்​ட​மாக வரு​வதும் சாலை​யில் அமர்ந்து கோஷமிடு​வதும், அவர்​களை போலீஸார் வாக​னங்​களில் ஏற்​றிச் செல்வதும் என கல்​லூரிச்சாலை​யில் போக்குவரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாகனங்கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பப்​பட்​டன. இதற்​கிடையே, போராட்டத்தில் ஈடு​பட்ட நாமக்​கல் ஆசிரியை மகேஸ்​வரி என்​பவர் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.


போராட்​டம் தொடரும்: போராட்​டம் சற்று தணிந்த நிலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை ஒய்​எம்​சிஏ கல்​லூரி அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் அவர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் போலீஸ் வாக​னத்​தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்​டனர்.


முன்​ன​தாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செயலாளர் ஜே.​ராபர்ட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக தேர்​தல் வாக்​குறு​தியை இது​வரை நிறைவேற்​ற​வில்​லை, தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை, குழு அமைப்​பது என தள்ளிக்​கொண்டு செல்​கிறார்​கள்.


முன்​கூட்​டியே கைதுசெய்​வது, வலுக்கட்டாயமாக அப்​புறப்​படுத்​து​வது என எங்​கள் போராட்​டத்தை ஒடுக்க நினைத்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடு​வோம்.  போராடக்​கூட அனு​மதி மறுக்​கிறார்​கள். அறவழி​யில் போராடும் எங்​களை தீவிரவாதிகளைப் போல நடத்துகிறார்கள்” என்​றார்.


அரசியல் தலை​வர்​கள் கண்​டனம்: சமவேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக்கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டதற்கு அரசியல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:


அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை காவல்​துறையினர் கைது செய்​திருப்​பது கடும் கண்டனத்​துக்​குரியது. முதல்​வர் ஸ்டா​லின் தான் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற முடிய​வில்லை எனில், அதனை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்​டும்.


பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்திரன்: சமவேலைக்கு சம ஊதி​யம் கேட்​டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்​களின் மீது அடக்​கு​முறையை ஏவி அவர்​களை வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​துள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.


ஆசிரியர்கள் முதல் செவிலியர்​கள் வரை அனை​வரை​யும் போராடும் அவல நிலைக்கு தள்​ளுவது​தான் நல்​லாட்​சி​யின் அம்​ச​மா? காலி பணி​யிடங்​களை நிரப்​பாமல், பணி​யில் இருப்​பவர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​காமல், ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்களுக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை விடுவிக்​காமல் ஒட்​டுமொத்த அரசு இயந்திரத்தையே பழு​தாக்​கியது​தான் திமுக அரசின் நான்​காண்டு சாதனை.


பாமக தலை​வர் அன்​புமணி: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று போராட்​டம் நடத்​திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆசிரியர்களின் போராட்​டத்தை அடக்​கு​முறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்​ணத்தை திமுக அரசு கைவிட்​டு, அவர்​களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.


தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: திமுக அறி​வித்த தேர்தல் வாக்​குறு​தி​களை இடைநிலை ஆசிரியர்​களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இன்​னும் நிறைவேற்​றப்​ப​டாதது ஏற்​புடையதல்ல. போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்​தது அடக்குமுறையான செயல். தொடர்ந்து அடக்கு​முறை​களைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.




Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb



B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி : DEO சுற்றறிக்கை




B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி  : பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEO சுற்றறிக்கை பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


5 Days Training to SGTs : SCERT Proceedings


புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி : SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-07-2025


5 Days Training to newly appointed Secondary Grade Teachers : SCERT Director Proceedings, Dated : 29-07-2025


காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயணப்படி (Actual Travelling Expenditure) வழங்கப்படும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு SGT EMIS ID Create செய்யும் முறை

 

புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID Create செய்யும் முறை 


புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID CREATE செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஏற்கனவே அவர்கள் TEMPORARY STAFF ஆக பணிபுரிந்து இருப்பின்‌ அதே ID யில் REGULAR STAFF என்று திருத்தம் மேற்கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.


SCHOOL LOGIN

STAFF 

STAFF LIST

ADD


Category

Teaching 


* Designation

Secondary Grade Teacher 


* Nature of appointment

Regular


இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை




இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


இன்று (24/7/25) பணிநியமன ஆணை பெற்று  பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களை  வாழ்த்தி வரவேற்கிறோம்

💐💐💐💐💐💐💐💐💐


பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


அசல் மற்றும் நகல் ஒரு செட்


1) பணி நியமன ஆணை 

2) அனுமதி கடிதம் 

3) 10 & +2 சான்றிதழ்

4) D T Ed சான்றிதழ் 

5) TET சான்றிதழ் 

6) சாதிச் சான்றிதழ் 

7) வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் 

8) ஆதார் அட்டை 

9) PAN CARD

10) BANK PASSBOOK FIRST PAGE

11) Physical fitness certificate


SGT Appointment Order Ceremony - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Appointment Order Ceremony for Secondary Grade Teachers to be held in Chennai on 24.07.2025 - Proceedings of the Director of Elementary Education


TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து DEE செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி / நகராட்சி /மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம். 24.07.2025 வியாழன் அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பணிநியமன ஆணை வழங்கும் பணி மாவட்டங்களில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டியாக பணிபுரியம் பணிக்காக - பணி ஒதுக்கீடு வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 | Director Proceedings


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Nodal DEOs & BEOs விவரம்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TET தேர்ச்சி பெற்று TRB மூலம் பணி நியமனம் பெற்று அரசுப் பணியில் இருக்கும் SGT மற்றும் B.T. Assistants எண்ணிக்கை



ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக பணி நியமனம் பெற்று தமிழ்நாட்டில் அரசுப் பணியில் இருக்கும் ஒட்டுமொத்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை


இன்றைய தேதி (நாள்: 20-07-2025/ ஞாயிறு ) வரையில்



SGT :-


2012-2013➖9️⃣6️⃣6️⃣6️⃣

2013-2014➖ *NIL*

2014-2015➖2️⃣2️⃣9️⃣6️⃣

2015-2016➖ 3️⃣2️⃣

2016-2017➖ 2️⃣6️⃣5️⃣

2017-2018➖ *NIL*

2018-2019➖ *NIL*

2019-2020➖ *NIL*

2020-2021➖ *NIL*

2021-2022➖ *NIL*

2022-2023➖ *NIL*

2023-2024➖ *NIL*

2024-2025➖ *NIL*

2025-2026

(*WAITING 2768*)

➖➖➖➖➖➖➖➖

     *TOTAL* 1️⃣2️⃣2️⃣5️⃣9️⃣

➖➖➖➖➖➖➖➖



⏭️⏭️⏭️🟢⏮️⏮️⏮️


* B.T. Assistant :-


2012-2013➖ 8️⃣7️⃣6️⃣3️⃣

2013-2014➖ *NIL*

2014-2015➖1️⃣1️⃣1️⃣5️⃣9️⃣

2015-2016➖ *NIL*

2016-2017➖ *NIL*

2017-2018➖ 2️⃣5️⃣5️⃣

2018-2019➖ *NIL*

2019-2020➖ *NIL*

2020-2021➖ *NIL*

2021-2022➖ *NIL*

2022-2023➖ *NIL*

2023-2024➖ *NIL*

2024-2025➖ *NIL*

2025-2026➖

( *WAITING 3192*)

➖➖➖➖➖➖➖➖

     *TOTAL* 2️⃣0️⃣1️⃣7️⃣7️⃣

➖➖➖➖➖➖➖➖


Karur District Secondary Grade Teacher Vacancies

 


   இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள் 4334.


Karur District Secondary Grade Teacher Vacancies


Final Vacant : கரூர் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

             

Aravakurichi 33140300603 P.U.E.SCHOOL, PARAPATTI-KARUR 1

Aravakurichi 33140300701 P.U.E.SCHOOL, NANDANUR-KARUR 1

Aravakurichi 33140300802 P.U.E.SCHOOL, SANTHAPPADI-KARUR 1

Aravakurichi 33140300804 P.U.E.SCHOOL, SENGALAIVALASU-KARUR 1

Aravakurichi 33140301004 P.U.E.SCHOOL,MODAKKUR-KARUR 1

Aravakurichi 33140301203 P.U.E.SCHOOL, KUMARAPALAYAM-KARUR 1

Aravakurichi 33140301303 P.U.E.SCHOOL,ERAMANAYAKKANUR-KARUR 1



K.Paramathi 33140401602 P.U.E..SCHOOL, ICHIKKATTUR-KARUR 1



Krishnarayapuram 33140502101 PUMS,POTHURAVUTHANPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502103 PUPS, SEMPARAIPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502104 PUPS, AYYAMPALAYAM-KARUR 1

Krishnarayapuram 33140502107 PUPS, AKKARAKKAMPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502603 PUMS, KUPPAMETTUPATTI-KARUR 3

Krishnarayapuram 33140502604 PUPS, KUPPANDIYUR-KARUR 2

Krishnarayapuram 33140502606 PUPS, NATHIPATTY-KARUR 2

Krishnarayapuram 33140502801 PUPS, THONDAMANGINAM-KARUR 1

Krishnarayapuram 33140502802 PUMS, GOUNDAMPATTY-KARUR 2

Krishnarayapuram 33140502803 PUPS, KARUNGALPATTY-KARUR 1




Kadavoor 33140602006 PUMS, D. IDAYAPATTY-KARUR 1




Kulithalai 33140701405 PUPS,THIMMACHIPURAM-KARUR 1

Kulithalai 33140701506 PUPS,KOMALIPARAI-KARUR 1




Thogaimalai 33140800107 P.U.P.SCHOOL, BOMMANAYAKKAMPATTI-KARUR 2

Thogaimalai 33140800902 P.U.P.SCHOOL, KALLAI-KARUR 1

Thogaimalai 33140801102 P.U.P.SCHOOL, PILLUR-KARUR


Secondary Grade Teachers Vacant List as on 11.7.2025


SG Teachers Final Vacancy List - All Districts


2342 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்கள் விவரம்


SGT Final Vacancies - All Districts


Secondary Grade Teachers Vacant List as on 11.7.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District-wise SGT posts to be appointed



மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்:


District-wise Secondary Grade Teacher posts to be appointed


Ariyalur - 24

Chengalpattu - 37

Chennai - 22

Coimbatore - 63

Cuddalore - 86

Dharmapuri - 113

Dindigul - 91

Erode - 107

Kallakurichi - 82

Kancheepuram - 34

Kanniyakumari - 24

Karur - 61

Krishnagiri - 64

Madurai - 122

Mayiladuthurai - 16

Nagapattinam - 53

Namakkal - 50

Perambalur - 23

Pudukottai - 60

Ramanathapuram - 67

Ranipet - 37

Salem - 134

Sivagangai - 59

Tenkasi - 66

Thanjavur - 78

The Nilgiris - 11

Theni - 67

Tuticorin - 64

Tiruchirappalli - 87

Tirunelveli - 35

Tirupathur - 35

Tiruppur - 65

Tiruvallur - 66

Tiruvannamalai - 93

Tiruvarur - 56

Vellore - 33

Villupuram - 60

Virudhunagar - 97


Total = 2342


Appointment of 2342 new Secondary Grade Teachers - DEE Proceedings

 

2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஆளறிச் சான்றிதழ் & அறிவுரைகள் - தெரிவுபெற்ற பணி நாடுநர்களின் தரவரிசை எண், கலந்தாய்வு நடைபெறும் நாட்கள், இடம் & நேரம் அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - Director Proceedings


Appointment of 2342 new Secondary Grade Teachers - Guidelines to be followed, Certificate of Identity & Instructions - Rank number of selected job seekers, dates, venue & time of counselling announced - Proceedings of the Director of Elementary Education


தொடக்கக் கல்வி- 2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - TRB- இடம் மற்றும் நேரம்- நாட்கள் அறிவிப்பு...


ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண்: 13466/ டி1/ 2025, நாள் : 09-07-2025 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SG Teachers' "Equal pay for Equal work" demand - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை - இன்று (24.06.2025) நடைபெற உள்ள 4வது கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க சங்கங்களுக்கு அழைப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Secondary Grade Teachers' demand for "equal pay for equal work" - Invitation to Federations to participate in the 4th consultation meeting to be held today (24.06.2025) - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1000 கூடுதல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இனவாரியான சுழற்சி விவரம் - TRB வெளியீடு



1000 கூடுதல் இடைநிலை ஆசிரியர்  SGT காலிப்பணியிடங்களுக்கு இனவாரியான சுழற்சி விவரம் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


Community Turn details for 1000 additional Secondary Grade Teacher vacancies - Teachers' Recruitment Board Addendum releases



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Negotiations on Demand for Equal Pay for Equal Work of SGTs on 04.02.2025 - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று நடைபெறுகிறது - தொடக்கக் கல்வி இயக்குநரின் DEE செயல்முறைகள்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of Secondary Grade Teachers on 04.02.2025 -  Directorate of Elementary Education - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - DSE Proceedings, Dated: 21-01-2025 - Attachment: G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024

 

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8% ஆகக் குறைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024


Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - Proceedings of the Director of School Education, Dated: 21-01-2025 - Attachment: Ordinance G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024


அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடு அடிப்படையில் முதுகலை ஆசிரியராக பணி வழங்கப்படும் நடைமுறையில் `விதித்திருத்தம் செய்யப்பட்ட விவரம்` - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


Secondary Grade Teachers Post Vacancy Details...



மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு  தமிழகம் முழுவதும் நிறைவு பெற்றது. மீதமுள்ள இடைநிலை ஆசிரியர் SGT Vacant Places காலிப் பணியிடங்கள் மாவட்டம் வாரியாக...


தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வட்டாரம், கல்வி மாவட்டம் என்று தனி தனியாக நடைபெற்று முடிவுற்றது. தற்போது மாவட்ட விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற்று முடிவற்றது. அனைத்து கலந்தாய்வு முடிவு பெற்றபின் உள்ள காலிப் பணியிடங்கள் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்