கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதிய நிர்ணயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊதிய நிர்ணயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CPSல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம்


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம், நாள் : 08-04-2025


Re-appointment Pay Fixation to CPS Scheme Teachers


Teachers retiring under the Contributory Pension Scheme - Fixation of pay for the period of reappointment - Clarification - Letter from the Joint Director, Treasury and Accounts Department, Date: 08-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...

 

 துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...








தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், மனுதாரர்கள் 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. 

இதை எதிர்த்து 1995ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு தலைமை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும். இந்த காலவரம்பு இல்லாமல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 1995ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த காலவரம்புக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. அதனால் 1995 ஆம் ஆண்டுக்கு பின் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்


 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம் எண்: 11100/ தொ.க.1(1)/ 2023-1, நாள்: 15-12-2023


Fixation of grade pay for Primary School Headmaster Selection Grade / Special Grade at Rs.5400 / Rs.5700 respectively - Fixation of pay at the time of promotion of Middle School Headmaster - Letter from the Deputy Secretary to the Government, School Education Department No.: 11100/ EE 1(1)/ 2023-1, Dated: 15-12-2023


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெறும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்...


இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் Elementary School HM பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது...



>>> தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்...


தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgment - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)...


>>> தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgement - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)...


மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 'பஞ்சாப் மாநிலம் Vs. ரஃபிக் மாசிஹ்''(2015) 4 SCC 334' இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக துறையின் தவறு காரணமாக, வழங்கப்பட்ட அதிகப்படியான ஊதியத்தை திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. பிரதிவாதிகள் ஆகஸ்ட் 2010 முதல் மீட்டெடுக்க முற்பட்டதால், அது சட்டத்தில் அனுமதிக்கப்படாது (Hon'ble Supreme Court in the case of 'State of Punjab Vs. Rafiq Masih (White Washer)' reported in '(2015) 4 SCC 334', has held that recovery of any excess payment made, owing to the mistake of the Department for over a period of 5 years, cannot be made. Since the respondents have sought to make recovery from August 2010 onwards, the same is impermissible in law)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்...



 01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்...


>>> உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குனர் கடிதம்...


>>> ஓட்டுனர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி - தெளிவுரை...


01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு...

 


01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி  வேளாண்மைத் துறை இயக்குநரின் செயல்முறைகள் FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021 அலுவலர்களின் பெயர்பட்டியலுடன் வெளியீடு...

>>> Click here to Download Proceedings of the Director of Agriculture FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021...


ஓய்வு பெற்ற பிறகும், எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess Payment பெற்றிருந்தால் அத்தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group III, Group IV பணியாளர்களுக்கு அவர்களது Excess Paymentஐ ஊதிய நிரணயம் செய்த அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் தீர்ப்பு...



 ஓய்வு பெற்ற பிறகும், எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess Payment பெற்றிருந்தால் அத்தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group III, Group IV பணியாளர்களுக்கு, அவர்களது Excess Paymentஐ ஊதிய நிரணயம் செய்த அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

>>> Click here to Download Judgement Copy W.P.(MD) No.23541 of 2015, DATED.19.06.2019...


🍁🍁🍁 ஊதிய உயர்வு பேச்சு நடத்த 12 சங்கங்களுக்கு அழைப்பு...

 சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்பனையாளர், எடையாளராக பணிபுரிவோருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், இம்மாதம் முடிகிறது.

 இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. கூட்டுறவு கூடுதல் பதிவாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனருமான சக்தி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அரசின் நிதித்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் கூட்டம், சென்னை, பாரிமுனையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கியில், வரும், 6ம் தேதி, காலை, 10:15 மணிக்கு நடக்கிறது.அதில் பங்கேற்க, குழு சார்பில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஊதிய உயர்வு வழங்க முடியாது.எனவே, விரைந்து பேச்சு நடத்தி, டிச., மாதத்திற்குள் ஊதிய உயர்வை அறிவித்து, உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...