கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உடல் நலம் இயலாமை காரணமாக அரசு பணியிலிருந்து மருத்துவ சான்றின் அடிப்படையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்... [அரசாணை (நிலை) எண்:10 , நாள் : 13.02.2009] (G.O.Ms.No:10, Dated:13-02-2009 - Grant of appointment on compassionate basis to successors of Government servants who retire from Government service on medical grounds due to physical disability)...


இன்று ஒரு அரசாணை... 

(கல்வி அஞ்சல் Exclusive...)

💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50-லிருந்து 53 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

💥இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடையாணையானது அரசாணை(நிலை) எண்:6, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள்:21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு, அரசாணை(நிலை) எண்:61, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள்:19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது .

💥உச்சநீதிமன்றத்தீர்ப்பு மற்றும் பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை(நிலை) எண்:42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள்:12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமனம் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


>>> Click here to Download G.O.Ms.No:10, Dated:13-02-2009...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🍁🍁🍁 மகாத்மா காந்தி - 150 வது பிறந்த நாள் கொண்டாடியது - மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் அனுப்புவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் & பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்...

 











🍁🍁🍁 TNPSC அறிவிப்பு - கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 5-ம் தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளானது, ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



🍁🍁🍁 தீபாவளிப் பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம் மற்றும் முகப்புக் கடிதம்...(Festival Advance Covering Letter & Application)

 

>>> Click here to Download Festival Advance Covering Letter & Application

>>> அகில இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வுக்குத் (Mains) தயாராகும் மாணவர்களுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு...

 


>>> சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திய ஆசிரியர்கள்...

 


சிவகங்கை மாவட்டம் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு ஆசிரியர்கள் கவுரவப்படுத்தினர்.

திருப்பத்தூர் அருகே சேவினிப்பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி முருகேசன், ராதிகா. இவர்களது மகள் சத்யபிரியா அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.

இவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் நடந்த தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எழுதினார்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவி சத்யபிரியா மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.

மேலும் இச்சாதனையை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களின் முயற்சியால் மாணவி சத்தியபிரியாவின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல்தலையை அஞ்சல்துறை வெளியிட்டது.


மேலும் அந்த மாணவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டினர்.

இதுகுறித்து சத்யபிரியா கூறுகையில்,‘‘ நான் இதுவரை தேசத்தலைவர்களின் அஞ்சல்தலையை தான் பார்த்துள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படமே அஞ்சல் தலையில் வெளியிட்டுள்ளது எனக்கு மிகுந்த கவுரமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற ஊக்குவித்த பெற்றோருக்கும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,’’ என்று கூறினார்.

>>> நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல்... (மாநிலம் முழுவதும்)

 

>>> Click here to Download DSE- Proposed Upgraded High Schools List(From Middle Schools)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6,967 crore worth of Rs 2,000 notes are yet to be returned to RBI

 6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை  6,967 crore worth of Rs 2,000 notes are yet to be ...