கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.10.2020 (சனி)...

நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. வாழ்ந்து முடித்தபின் நம்மை யாரும் மறக்கக்கூடாது. அதுதான் நம் வாழ்வின் வெற்றி.!

🌹🌹ஆகாயமும், பூமியும் நமக்கு சொந்தமில்லை.

படைத்த உயிரும்,உடலும் நமக்கு சொந்தமில்லை.

சேமித்த பணமும்,பொருளும் நமக்கு சொந்தமில்லை.

நாம் செய்த தர்மமும்,கருணையும் மட்டுமே கடைசி வரை நிலைத்து நிற்கும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை

🍒🍒அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு

🍒🍒அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்

🍒🍒அண்ணாமலை பல்கலைக்கழகம் மே-2020 தேர்வு முடிவுகள் வெளியீடு.

🍒🍒 போலி ஆவணங்கள் மூலம் பணி நியமனம் - ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- திருவையாறு கோர்ட் தீர்ப்பு.

🍒🍒ஆசிரியர் பணி நியமனம் - வயது வரம்பு 40ஆக குறைப்பு - ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🍒🍒துருக்கியில் நேற்று சுனாமி

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உருவான சுனாமி:

ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு.

ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடங்கள்.

கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம்.

🍒🍒திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும், எனத் தெரிவித்துள்ளார்.

🍒🍒உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதே ஆளுநர் நோக்கமாக இருந்திருக்கும்; அது தகர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

🍒🍒விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதென்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரைமீது முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவது சரியல்ல என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தும் ஆளுநர் முடிவெடுக்காததால், முடிவெடுக்கும்வரை அவர்களை பரோலில் விடுவிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

🍒🍒குற்றப்பரம்பரை என்று

குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக்

கொற்றப்பரம்பரை என்று

முற்றும் விடுதலை பெற்றுத்தந்த

வெற்றித் தலைவர் தேவர் திருமகனார்.

அவர் பிறந்த மண்ணைக்

கசிந்த கண்ணோடும்

கனத்த நெஞ்சோடும்

கைகூப்பித் தொழுகிறேன்.

கவிஞர் வைரமுத்து

🍒🍒ஆரோக்கிய சேது செயலியை ஜே.என்.யு மாணவர்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து ஜே.என்.யு பதிவாளர் உத்தரவு

🍒🍒மெரினா கடற்கரையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🍒🍒வானில் 'புளூ மூன்’ தோன்றும் அரிதான நிகழ்வு இன்று நடக்க உள்ளது.

👉புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 

இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.

இதற்கு அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1ந்தேதி பவுர்ணமி வந்த நிலையில் இன்று இரண்டாவது பவுர்ணமி தோன்றுகிறது. 

அடுத்த நீல நிலா, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஏற்படும்.

🍒🍒இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழுவில் தென்னிந்தியாவை சார்ந்தவர்கள் ஒருவர்கூட இல்லை; வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்து, தென்னிந்தியாவை புறக்கணித்து இந்தியாவின் வரலாற்றை ஒருவர் எழுத முடியுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

🍒🍒குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைன் மூலம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

🍒🍒ஓவிய கல்லுாரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு

🍒🍒கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு

🍒🍒இந்தியாவில் நேற்று முதல் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை

அனைத்து விதமான சேவைகளையும் நேற்று முதல் நிறுத்திக்கொள்வதாக PUBG அறிவிப்பு.

🍒🍒கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் 5.11.20 அன்று காணொளி வாயிலானா கூட்டம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில்,திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

🍒🍒குஜராத், நர்மதா மாவட்டம் கெவாடியாவில்

உள்ள சர்தார் படேல் உயிரியல் பூங்காவை

நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர்

மோடி.

🍒🍒ரஜினியின் அறிவிப்பை அடுத்து, அவரது

இல்லத்தில் ரசிகர்கள் திரண்டனர்;

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம்

திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் கருத்து.

🍒🍒முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து  நீக்கியது தேர்தல் ஆணையம். மத்தியபிரதேச இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

🍒🍒50 ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் - ஜனவரி முதல் அமல்.

🍒🍒நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகளை ஒருங்கிணைக்க குழுக்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🍒🍒தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🍒🍒ஐபிஎல் தொடர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

🍒🍒ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில்...

 


🍁🍁🍁 இ.பி.எஃப் (EPF - Employee Provident Fund) பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு?

 இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு? (நன்றி : விகடன்.com )

ஓய்வுபெறும் ஓர் ஊழியர் இ.பி.எஃப்  பென்ஷன் பெறுபவராக இருந்தால், அவரின் கடைசிச் சம்பளம் லட்சம் ரூபாயாகவே இருந்தாலும், பொதுவாக அவருக்கான பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். இந்த 15,000 ரூபாய்க்கும் பென்ஷன் கணக்கிடப்படுமா எனக் கேட்டல், கிடையாது. பணியாளர் கடைசியாக வாங்கும் சம்பளம் ரூ.15,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி) என்று வைத்துக் கொண்டால், 12,511 ரூபாய்க்குத்தான் பென்ஷன் கணக்கிடப்படும். அதாவது, கடைசி சம்பளத்தை அடிப்படையாக வைத்து பென்ஷனைக் கணக்கிடாமல், அந்த ஊழியரின் கடைசி ஐந்து வருடங்களில் பெற்றிருந்த சம்பளத்தின் சராசரிக்கே பென்ஷன் கணக்கிடப்படும். 

இந்தக் கணக்கீட்டு முறை தன்னிச்சையானது  என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது இ.பி.எஃப் அமைப்பு. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பினால் இ.பி.எஃப் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு இனி கிடைக்கப்போகும் பணப்பலன் என்னென்ன என்று பார்ப்போம்.

* நாற்பது ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்து, ஒரு லட்சம் ரூபாய் கடைசி சம்பளத்துடன்  ஓய்வுபெறும் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் பென்ஷன் ரூ.50,000-ஆக இருக்கும்.

இதே கடைசி  சம்பளத்துடன் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெறப்போகும் இ.பி.எஃப் ஊழியரின் இ.பி.எஸ் பென்ஷனும் 50,000 ரூபாயாகவே இருக்கும். இந்தத் தீர்ப்புக்கு முந்தைய கணக்கீட்டின்படி பெற்ற இ.பி.எஸ் பென்ஷன் வெறும் 7,500 ரூபாயாகவே இருந்திருக்கும்.

அதுமட்டுமல்ல, அரசுப் பணியினரின் அதிகபட்ச மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம். எனவே, அதிகபட்ச அரசு பென்ஷன் ரூ.1.25 லட்சம்தான். இ.பி.எஸ்-ல் அதிகபட்ச சம்பள வரம்பு எதுவும் இல்லாததால், அரசு ஊழியரைவிடவும் கூடுதல் பென்ஷன் பெறவும் வாய்ப்புண்டு.

அதேநேரத்தில், உறுப்பினர் இ.பி.எஃப் கணக்கில் சேரும் தொகை குறைவாக இருக்கும். அதனால், அவர் இடையிடையே கடனாகப் பெறும் தொகையும் குறைவாக இருக்கும். மேலும், இறுதியாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையும் மிகக் குறைவாக இருக்கும்.

தீர்ப்பின் தொடர் விளைவுகள்

மத்திய அரசுப் பணியினரின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9,000-ஆகவும், தமிழக அரசின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850-ஆகவும் உள்ளபோது, இ.பி.எஸ் தரும் குறைந்தபட்ச பென்ஷன் 1,000 ரூபாய் மட்டுமே என்பதால், பல்வேறு நிறுவனங்களில் சிறிது சிறிது காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள், தனது பணிக்காலத்தை ஒருங்கிணைத்து பென்ஷன் பெறும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம்.

இந்தத் தீர்ப்பின் பலனாக, அசல் சம்பளத்துக்கே பென்ஷன் கணக்கீடு என்றானதால், துண்டு துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் தனது பணிக் காலத்துக்கு சான்றிதழ்களைப் பணி செய்த நிறுவனங்களில் பெற்று, பென்ஷனுக்கு முயற்சி  செய்யலாம். இதனால் பென்ஷன் பெற இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

பி.எஃப் டிரஸ்ட்

இ.பி.எஃப் அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர் களுக்கு மட்டும் பென்ஷன் வழங்கவில்லை. இந்த அமைப்பில் இணையாத 1,552 நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் சந்தாவை இ.பி.எஃப் அமைப்புக்குச் செலுத்துவதில்லை. ஊழியர்களின் பி.எஃப் கணக்கை தாமே பராமரித்துக் கொள்கின்றன.

தனது பி.எஃப் கணக்கை தானே நிர்வகித்துக் கொள்ளும் பிற நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை சுமார் 80 லட்சம். இந்த நிறுவனங் களுக்கும் பென்ஷன் வழங்கும் பொறுப்பு இ.பி.எஃப் அமைப்புக்குத்தான் உள்ளது.

அதாவது, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இனி மொத்தம் ஏழு கோடியினருக்குக் கூடுதலான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

நிதி ஆதாரம்

* ரூ.15,000 என்ற உச்சவரம்புக்கு 8.33% பணம் செலுத்திவிட்டு, அசல் சம்பளத்துக்கு பென்ஷன் பெற இயலாத நிலையே உள்ளது. ஆனாலும், பென்ஷன் பங்களிப்பை உயர்த்தி வசூலிக்க தற்போதைய விதிமுறைகளில் இடமில்லை என்பதும் முக்கியமான விஷயம்.

*  அசல் சம்பளத்துக்கு ஏற்றவாறு அதிகமான சந்தா செலுத்தியவர்களுக்கும், 15,000 பணவரம்பைக் கணக்கிட்டு சந்தா செலுத்தியவர் களுக்கும் தனித்தனியாக கணக்கு வைத்துப் பராமரிப்பது இதுவரையில் நடைமுறையில் இல்லாத ஒன்று.

* உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்தப்பட்ட பென்ஷனை வழங்கத் தேவையான நிதியானது ஊழியரின் பி.எஃப் கணக்கிலிருந்து பெற வேண்டியிருக்கலாம். ஆனால், சுமார் 1552 நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் பணத்தைத் தாமே நிர்வகித்து வரும்போது, இந்த நிறுவனங்களிடமிருந்து பி.எஃப் பணத்தைப் பெறுவதில் நிர்வாக ரீதியான சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

தீர்ப்பு தீர்க்கமானது

ஆனாலும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தீர்க்கமானது என்பதால், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படலாம்.

அப்படி வகுக்கப்படும்போது இ.பி.எஸ் பயனாளிகள் மூன்று வகைகளாக இருக்கக்கூடும்.

1. ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்கள்

இவர்கள் கூடுதல் பென்ஷன் பெற கையிருப்பிலுள்ள பி.எஃப் தொகையை, தேவையான அளவுக்குத் திரும்பச் செலுத்தலாம். அல்லது பி.எஃப் தொகையை லாபகரமான முறையில் முதலீடு செய்துவிட்டு, பழைய நடைமுறைப்படி பென்ஷன் பெறலாம். இதில் எதை அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நடைமுறை மாறக்கூடும்.

2. ஓய்வு பெறப்போகிறவர்கள்

உயர்த்தப்பட்ட பென்ஷனைப் பெறத் தேவையான தொகையானது இவர்கள் தரும் அனுமதியைப் பொறுத்து, உறுப்பினரின் பி.எஃப் நிதியிலிருந்து பெறப்படலாம்.

3. புதிய ஊழியர்கள்

இவர்களைப் பொறுத்தவரை, பென்ஷன் கணக்கீட்டில் எந்தவொரு தடங்கலும் இருக்காது. ஏனென்றால், தொடக்கத்திலிருந்தே இவர்களது பென்ஷன் பங்களிப்புத்தொகை, அவர்களது அசல் சம்பளத்துக்கே பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

என்.பி.எஸ் முன்மாதிரி

என்.பி.எஸ் சந்தாதாரர்களாக உள்ள மத்திய அரசு ஊழியர்கள், தனது பென்ஷன் பங்களிப்பாக தனது சம்பளத்தில் 10% தொகையைச் செலுத்து கிறார்கள். இதற்கு இணையான பணத்தை (10%) மத்திய அரசும் செலுத்திவந்தது.

01.04.2019 முதல், என்.பி.எஸ்-க்கான மத்திய அரசின் பங்களிப்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆக, தற்போது   என்.பி.எஸ்-ல் சேரும் தொகை அதாவது 10 + 14 = 24%

இப்படிச் சேர்க்கும் பணம் மொத்தத்தையும் கடைசிவரை விட்டுவைத்தால், கடைசியாகப் பெறும் சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக பென்ஷனை ஓய்வுக்காலத்தில் பெற வாய்ப்புண்டு. 

அப்படிப் பார்த்தால், இ.பி.எஃப் சந்தாவும் (12+12) 24 சதவிகிதம்தான். பென்ஷனுக்கான முதலீடு போக, நிகரத்தொகை பி.எஃப் தொகைக்கு நிகரானதாகவே அமையக்கூடும்.

எனவே, கடைசிச் சம்பளத்தில் சரிபாதியான 50 சதவிகிதத் தொகையை பென்ஷனாகப் பெறுவதிலும், பி.எஃப்-க்கு இணையான தொகையைப் பெறுவதிலும் தடையேதும் இருக்காது.

எனவே, இனிவரும் காலத்திலாவது  இ.பி.எஃப் பயனாளிகளுக்குக் கூடுதலான பென்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

ப.முகைதீன் சேக்தாவூது

🍁🍁🍁 TNPSC - EQUIVALENCE OF QUALIFICATION - G.O.s - 30 Pages...

 >>> CLICK HERE TO DOWNLOAD TNPSC - EQUIVALENCE OF QUALIFICATION - G.O.s List - 30 Pages


🍁🍁🍁 ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரம் / மாலை நேரம் / அஞ்சல் வழியில் உயர் கல்வி பயில சார்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே (AEEO) துறை அனுமதி வழங்கலாம் என்ற தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 023458/இ1/2014, நாள்: .11.2014...

 


🍁🍁🍁 கற்போம் கற்பிப்போம் - படிவங்கள் (FORMATS)...

 >>> கற்போம் கற்பிப்போம் - படிவங்கள் (FORMATS) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 உடற்கல்வி ஆசிரியர் (PET) அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்கள் விவரம்...

 >>> Click here to Download PET Vacant Places List...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...