கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

 ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?



தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.


💥 PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.


💥 PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


💥 NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.


💥 NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.


💥 NPHH-NC: ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

NEET தேர்வு OMR விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, NTAக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


நீட் தேர்வு ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவைச் சேர்ந்த மாணவர் மனோஜ் தாக்கல் செய்த வழக்கில், அக்டோபர் 11 ஆம் தேதி இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தாம் 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ம் தேதி திடீரென 248 மதிப்பெண் பெற்றதாக காட்டப்பட்டது என புகார் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, எப்படி என விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை இனி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர்...

 


பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்ட ஆராய்ச்சி உதவித்தொகை இனி மாதந்தோறும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புதிய வழிமுறைகளின்படி அக்டோபர் மாதம் வரைக்கான உதவித்தொகை மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து தாமதத்தைத் தவிர்க்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு...

 பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு. செய்தி வெளியீடு எண்: 944, நாள்: 10-12-2020...



>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக 161 MBBS இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின - மருத்துவக் கல்வி இயக்ககம்...

 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக 161 MBBS இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு...



அடுத்த வருடத்திலிருந்து JEE தேர்வுகள் வருடத்திற்கு 4 முறை நடத்தப்படும் - மத்திய கல்வி அமைச்சர்...

 அடுத்த வருடத்திலிருந்து JEE தேர்வுகள் வருடத்திற்கு 4 முறை நடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சர் தகவல்...



தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

 தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...