கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (16-12-2020) முதல் நடைபெறவுள்ள Safety and Security Training-ல் கலந்து கொள்ளும் வழிமுறைகள் (PDF FILE)...

 










>>>இன்று(16-12-2020) முதல் நடைபெறவுள்ள Safety and Security Training-ல் கலந்து கொள்ளும் வழிமுறைகள் (PDF FILE) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS WEBSITE:

https://emis.tnschools.gov.in/


TNTP WEBSITE:

https://tntp.tnschools.gov.in/lms/



நாளை(16-12-2020) முதல் நடைபெறவுள்ள Safety and Security Training-ல் எவ்வாறு கலந்து கொள்ளும் வழிமுறைகள்...

 

EMIS Website ➡ https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard

 Login ➡ Username: DISE Code, Password: Ask HM


Dashboard ( click ) ➡ Staff details. ( click )  ➡ Staff login details ( click ) செய்து ஒவ்வொரு ஆசிரியரின் User Name and Password குறித்து கொள்ளவும்.


2. TNTP Login செய்வது எப்படி ?’

கீழே உள்ள Link ஐ click செய்து Teacher Username  and Password கொடுத்து உள்ளே செல்லவும்.

https://tntp.tnschools.gov.in/lms/login/index.php


 Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை Click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து Training services Click செய்யவும்.



பின்பு Safety and Security Training click செய்து Training ல் கலந்து கொள்ளவும்.



Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online.

All HMs     16.12.20

All PGs.      17.12.20

All B.Ts.     18 &19.12.20

All SGTs        21&22.12.20

All are must attend the Training..

>>>CLICK HERE TO VIEW THE DIRECTOR PROCEEDINGS....

அனைத்து ஆசிரியர்களுக்கும் இணைய வழி பயிற்சி (Online training for all HM, PGT, BT and SGT) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

 


அனைத்து ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security) தொடர்பாக ஒருநாள் இணைய வழி பயிற்சி  (Online training for all HM, PGT, BT and SGT) - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 539/ C6/ SS/ 2020, நாள்: 15-12-2020...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 539/ C6/ SS/ 2020, நாள்: 15-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






PGTRB – தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை - முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு...

 


சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் வேதியியல் பிரிவில் தேர்வானவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களிடம் 2 ஆசிரியர்கள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

 


2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020...


2018-19 ஆம் ஆண்டு UDISE தரவின் அடிப்படையில் திட்ட ஒப்புதல் குழு அறிக்கையில் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை . ஆனால் அப்பள்ளிகளுக்கும் பள்ளி மானியம் வழங்குவது அவசியமாகிறது . ஏனவே மாவட்டங்களுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரம்பு விளிம்பில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

 

  அனுமதிக்கப்படும் தொகையினை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்தப்படும் . இத்தொகையினை சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு 5 நாள்களுக்குள் அனுப்பிட வேண்டும் . 

 

அதன் விவரத்தினை படிவம் 1 - ல் பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி மானியத்தினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழிகாட்டுதல் ( Frame work for implementation of Samagra Shiksha ) வழிமுறைகளின்படி ( Norms ) கீழ்க்கண்டவாறு செலவினம் மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது காணப்படும் கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட ஏற்பளிப்பு குழுவின் கூட்ட அறிக்கை பக்கம் 13 - ல் பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

 

மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி ( Hand washing facility ) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் . பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் Hand Sanitizer , கிருமி நாசினி , துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் , 


* பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் . 

 

* பள்ளிகளுக்கு தேவையான வெப்ப அளவீட்டுக் கருவியினை ( Thermal screening ) வாங்குவதற்கு பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் . மேலும் 2018-19 - ஆம் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி மானியத்தில் குறைந்த பட்சம் 10 % சதவிதம் முழுச் சுகாதார திட்டத்திற்குப் ( Swachhta Action Plan ) பயன்படுத்தப்பட்டு வருகிறது .


மாணவர்கள் கை கழுவும் வசதிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவையின் அடிப்படையில் முடிவு செய்து அதற்கான தொகையினை முழு சுகாதார திட்டத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் .

 

பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கல்வி கற்க உகந்த சூழலை வழங்கும் விதமாக அரசு பள்ளிக் கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கை கழுவும் மேடை , சுத்தமான குடிநீர் , மின்சார வசதி , கழிவறை ஆகியவற்றினை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதியை பயன்படுத்த வேண்டும் .  

 

பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும் , பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான விளையாட்டு உபகரணங்கள் , நாளிதழ்கள் , மின்கட்டணம் , இணையதள வசதி , குடிநீர் , கற்றல் கற்பித்தல் பொருள்கள் , போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்த வேண்டும் . பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள் :

 

* பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் ( வ.எண் . பெற்ற தொகை , வங்கி பெயர் மற்றும் நாள் ) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும் . 

 

* மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும் . பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும் . 

 

* ஒரு செலவினம் ரூ .25,000 / -க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 ( Financial Management and Procurement Manual ) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் . General Financial Rules ( GFR ) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file- ல் இணைக்க வேண்டும் . 

 

* கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் ( Consumable ) பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் . 31.12.2020 ( டிசம்பர் 2020 ) க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் . 

 

• பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் . 

 

* நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும்


* பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும் . 

 

* ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு எதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம் , ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு களாக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும் . 

 

* பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate - படிவம் -4 ) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021 - க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும் மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் , உதவி திட்ட அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின் போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் , பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும் , அதற்கான பற்றுச் சீட்டுகள் , ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டத்தில் ( Review meeting ) பள்ளி மானிய செயல்பாட்டு அறிக்கையை ஆய்வு செய்திடல் ( படிவம்- 2 மற்றும் 3 ) வேண்டும் , 

 

* ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும் . 

 

* உதவி மாவட்டத் கிட்ட ஒருங்கிணைப்பாளர் , கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை 31.03.2021 - க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் கள ஆய்வு செய்யும் போது இதனை ஆய்வு செய்ய வேண்டும் . 

பள்ளிக் தலைமையாசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும் . இச்செயல்முறை ஆணையினை பெறப்பட்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் தவறாது மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


CBSE அமைப்பு, மாணவா்களை எதிரிகளைப் போன்று நடத்துகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம்...

 


பள்ளி மாணவா்களை எதிரிகளைப் போன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தோ்வுகளுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், அந்த நடைமுறை 2019-20-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களை விடக் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி கடந்த கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பொருந்தாது என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கு எதிராக மாணவா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதை விசாரித்த தனி நீதிபதி, சிபிஎஸ்இ-யின் முடிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டாா். ரத்து செய்யப்பட்ட தோ்வுகளுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்திலேயே சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதை தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாணவா்களுக்கு எதிராக சிபிஎஸ்இ நடந்து கொள்வதை நீதிமன்றம் விரும்பவில்லை. சிபிஎஸ்இ-யின் முடிவுகளுக்கு எதிராக மாணவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடிக் கொண்டிருந்தால், அவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவாா்களா? வழக்கில் கவனம் செலுத்துவாா்களா?

மதிப்பெண் வழங்கும் நடைமுறை அனைத்து மாணவா்களுக்கும் செல்லுபடியாகும் என்றால், சிபிஎஸ்இ-க்கு என்ன பிரச்னை? தனி நீதிபதி அமா்வு வழங்கிய தீா்ப்பு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

வழக்கு தொடுத்த மாணவரும் புதிய மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் கல்லூரியில் சோ்ந்துவிட்டாா். தற்போது அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவா்களை எதிரிகளைப் போன்று சிபிஎஸ்இ நடத்துகிறது’’ என்றனா்.

எனினும், மனு தொடா்பாக விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்து 1500 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - முதல்வரிடம் கோரிக்கை மனு...

பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பபட உள்ள 1500 காலியிடங்களை, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 10 மாதங்களாக பணி நியமனம் பெறாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மினி கிளினிக் திட்டம் துவக்க விழாவின் போது ராயபுரத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

பள்ளி கல்வி துறையில் 1500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாலும், ஆசிரியர் தேவை அதிகரித்துள்ளதாலும் அப்பணியிடங்களை சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருப்போரை வைத்து நிரப்ப வேண்டும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...