புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-12-2020...
>>> வேலைவாய்ப்பு அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-12-2020...
>>> வேலைவாய்ப்பு அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிப்பதாக இருந்த நிகழ்வு டிச.22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இதற்கு, ‘பொதுத் தேர்வை மே மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்’ என்று மாணவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர்களிடம் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் பொக்ரியால் அறிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிப்பதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,“சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன். இதையடுத்து டிச.22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேரலையில் கலந்து ஆலோசிக்க உள்ளேன்.
எனவே, பொதுத்தேர்வு தொடர்பான தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில்#Education Minister GoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு பிறகு விலகிய மாணவர்களுக்கு , அவர்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவிட்டுள்ளது . இது குறித்து யுஜிசி பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா தாக்கத்தால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை . ஊரடங்கால் பெற்றோர்களும் வருமானம் இன்றி உள்ளனர் . இந்த நிலையில் பெற்றோர்கள் , நீதிமன்ற உத்தரவுகள் , மக்கள் நல அமைப்புகளிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் என யுஜிசிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன . அதன் அடிப்படியில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப இயக்குநர் செயல்முறைகள்...
>>> தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – திருப்பூர் மாவட்டம் - பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-01-2020...
>>> Click here to Download Tiruppur District Overseer Job Notification and Application...
இதே போன்று மற்ற மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதளங்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட இணையதள முகவரிகள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு மீண்டும் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப் படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது. அதற்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது.
நிதி நெருக்கடிகளை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை, அந்த அகவிலைப்படி, 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டது.எனவே, பழையபடி, 17 சதவீத அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும், பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், அகவிலைப்படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...