கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

 ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது . புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசிரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . மத்திய அரசு ரூ . 500 கோடி வழங்கி உள்ளது . அந்த நிதியில் அரசு மகளிர் பள்ளிகளில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டப்படும் . பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது . இந்தப் பணிகள் விரைவில் துவங்கும் என்றார் .



அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பு...

 யுஜிசி நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணையால், அதிகபட்சமாக இணைப் பேராசிரியர்  பதவியுடன் ஓய்வு பெற்று வந்த அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களாகப் பதவி உயர்வு  பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

’’தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகள் 2018-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கழகம் வலியுறுத்தி வந்தது. இந்நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில், உயர் கல்வித்துறை ஓர் அரசாணையை (எண். 5) அண்மையில் வெளியிட்டுள்ளது.


இதன்மூலம், கல்லூரி ஆசிரியர்களுக்கான தர ஊதிய உயர்வு ஊதிய அட்டவணை 10-11-க்கு ரூ.6,000 - ரூ.7,000, ஊதிய அட்டவணை 11-12-க்கு ரூ.7,000 - ரூ.8,000 இணைப் பேராசிரியர்களுக்கான ஊதிய அட்டவணை 12-13ஏ-க்கு ரூ.8,000 - ரூ.9,000, ஊதிய அட்டவணை 13ஏ-14-க்கு ரூ. 9,000 - ரூ.10,000 ஆகிய பணி மேம்பாடுகள் கிடைக்கும். இத்துடன் எம்.ஃபில்., பிஎச்.டி. ஊக்க ஊதிய உயர்வும் இந்த ஆணையின் மூலமாகக் கிடைக்கும்.


கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆயிரக்கணக்கான அரசு மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பல்வேறு நிலைகளுக்கான பணி மேம்பாடு 1.4.2015 முதல் பணிப்பயனாகவும், 1.8.2018 முதல் பணப்பயனாகவும் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு பெறுவார்கள்.


மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றினால், இணைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முடியும். இந்த ஆணையால் இணைப் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றுபவர்கள், பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முடியும். இதன்மூலம் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பயனடைவர்.


மேலும், கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி, தேர்வு, பணி மேம்பாடு, கல்லூரி முதல்வர்களுக்கான தகுதி, பணி ஓய்வு வயது வரம்பு போன்றவை குறித்த நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர், முதல்வர் பணி நியமன நெறிமுறைகள், கல்லூரியின் வேலை நேரம், ஆசிரியர் மாணவர் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவை குறித்த நெறிமுறைகளும் இந்த ஆணையில் வகுக்கப்பட்டுள்ளன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இதற்குத் தமிழக முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறைச் செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது’’.

இவ்வாறு த.வீரமணி கூறினார்.

>>> அரசாணை எண்: 5, நாள்: 11-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


G.O.(Ms.)No.:5 - Dated: 11-01-2021- UGC Regulation on Minimum Qualifications for Appointment of Teachers and Other Academic Staff in Universities and Colleges - Orders issued...

 UGC Regulation on Minimum Qualifications for Appointment of Teachers and Other Academic Staff in Universities and Colleges - Orders issued...

>>> Click here to Download G.O.(Ms.)No.:5 - Dated: 11-01-2021...


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவு...



 கல்வி தொலைக்காட்சியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' வழி தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 10 மாதங்களாக, பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும், பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 10 மற்றும்பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன; நேற்று முதல் பாடங்கள் நடத்தப்படும் நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' தேர்வை, இன்று முதல் நடத்த உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசு பள்ளிகளில் உள்ள, 'ஹைடெக் லேப்' வழியாக, இந்த தேர்வை நடத்த வேண்டும். 'இந்த மதிப்பீட்டின்படி, மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து, வரும் நாட்களில் பாடங்கள் நடத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.


பொது தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 15ம் தேதிக்கு பின், பொதுத்தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.புதிய கல்வி ஆண்டு பிறந்து, ஏழு மாதங்களுக்கு பின், தற்போது தான் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, பாடங்களை முழுமையாக முடிக்காத நிலையில், மார்ச்சில் பொதுத்தேர்வை நடத்தினால், மாணவர்களால் சரியாக எழுத முடியாது.

எனவே, இரண்டு மாதங்களுக்கு பின், தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில், வாரம், ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே, 15க்கு பின் அல்லது ஜூனில், பொது தேர்வு நடத்தலாம் என, முடிவு செய்துள்ளனர்.

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,  வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் Group Code ANNEXURE தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளிக்கு மீண்டும் வராத மாணவர் நிலை என்ன ஆகும்?

 கொரோனா ஊரடங்கிற்கு பின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 70 சதவீத மாணவர்கள் மட்டுமே, பள்ளிக்கு வரத் துவங்கி உள்ளனர்.

இதனால், படிப்பை தொடர முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனரா என, கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பள்ளிகள், 19ம் தேதி முதல் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளன. இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி பள்ளிகளை பொருத்தவரையில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன.இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 70 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். பள்ளிக்கு வராத மற்ற மாணவர்களின் நிலை குறித்து, கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி துவங்க உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சராசரியாக ஓராண்டு, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாணவர்கள், குடும்ப பொருளாதாரம் காரணமாக, வேலைக்கு சென்றிருக்கலாம். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.சொந்த ஊர், உறவினர்களின் ஊர்களுக்கு சென்றவர்கள், திரும்பி வர சில நாட்கள் தேவைப்படும். 

அவர்கள், மீண்டும் பள்ளியில் சேர்ந்து விடுவர். ஆனால், வேலைக்கு சென்ற மாணவர்கள், பள்ளிப்படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களை கணக்கெடுத்து, தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், மீண்டும் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களின் குடும்ப பின்னணிக்கு ஏற்ப, கல்வி உதவி தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி...

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


🛑 பள்ளி ஆசிரியருக்கு கொரோனா:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள், கிட்டத்தட்ட 300 நாட்கள் கழித்து ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறி இருந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.

🛑இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம் தேதி காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் தனியார் ஆய்வகத்தில் ஆசிரியைக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

🛑சோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த ஆசிரியை 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பவர் என்றும் தற்போது மாணவர்களை ஒழுங்குபடுத்த பணிக்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-01-2021...

 ஆசிரியை தேவை நிரந்தரப்பணியிடம் ( அரசு நிர்ணய ஊதியம் ) 

விபரம்:  வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியை

 கல்வித்தகுதி  : M.Sc.,( Chemistry )  B.Ed. , 

தகுதியுள்ள ஆசிரியை தங்களது கல்விச்சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கவும் . 

கடைசி தேதி : 27.1.2021

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயலர் , பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் - 625706 .




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...