கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு - ரிசர்வ் வங்கி...

பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுகிறதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் ரூ .100, ரூ .10, மற்றும் ரூ .5 உள்ளிட்ட பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.மகேஷ் கூறியுள்ளார்.

மங்களூருவில் மாவட்ட வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு (District Level Security Committee (DLSC)) மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு (District Level Currency Management Committee (DLMC) கூட்டத்தில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி மகேஷ் பேசும் போது, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் ரிசர்வ் வங்கி பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதால், அவை புழக்கத்தில் இருக்காது என்று கூறினார்.

அக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், “10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும் வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், இது மற்ற வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் குவிந்துள்ளன.

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது ஒரு வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும், ரூ .10 நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டுவருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மகேஷ் கூறினார். புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை சில வருடங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டு இளம் ஊதா நிறத்தில் இருந்தது. ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி ( RANI KI VAV) படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் அதில் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், ஸ்லோகனும் இடம்பெற்றிருக்கும். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட விவரங்களும் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தன. பழைய 500 ரூபாய் நோட்டில் காந்தியின் தண்டி யாத்திரை படம் இடம்பெற்றிருக்கும். புதிய 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

பிங்க் நிறத்தில் வெளிவந்த 2,000 ரூபாய் நோட்டு தான் அவற்றில் ஹைலைட். இந்த வரிசையில் 100 ரூபாய் நோட்டும் புதுப்பொலிவு பெற்றிருந்தது. அதேபோல், புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி 2018 ஜன. 5ஆம் தேதி வெளியிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2017ல் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. புதிய நோட்டில் அப்போதைய RBI கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது. சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படம், பின்புறத்தில் கோனார்க் சூரியக் கோயில் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

63 மிமீ×123மிமீ என்ற அளவில் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. 10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது. புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என RBI முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது பழைய 10 ரூபாய் நோட்டுகள் நம்மிடமிருந்து விடைபெறவுள்ளது. 

2019 ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ரிசர்வ் வங்கி) கேட்கப்பட்ட கேள்விக்கு (RTI query) பதிலளித்த RBI, அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை - உளவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...

 தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லம்(ஆண்கள்) மற்றும் சத்யா அரசினர் குழந்தைகள் இல்லம்(பெண்கள்) இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மத்திப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: சமூகப் பாதுகாப்புத்துறை 

பணியிடம்: தஞ்சாவூர் 

பணி: ஆற்றுப்படுத்துதல் (Counsellor) 

காலியிடங்கள்: 06 (3+3) 

தகுதி: உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.thanjavur.nic.in மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக தங்களது விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

1. கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம்(ஆண்கள்), வ.ஊ.சி. நகர், தஞ்சாவூர் - 613 007 

2. கண்காணிப்பாளர், அன்னை சத்யா குழந்தைகள் இல்லம்(பெண்கள்), மேம்பாலம், தஞ்சாவூர் - 613 001 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2021 

மேலும் விவரங்கள் அறிய www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் - மருத்துவக்கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கான பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் காது, மூக்கு, தொண்டை டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி, தேனி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் தங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. காது, மூக்கு, தொண்டை பிரிவில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், மேலும் 5 கல்லூரிகளில் அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. 14 கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும், 9 கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தன்னிச்சையானது. எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், நாளை (திங்கட்கிழமை) பதில் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

விடைத்தாளை திருத்த மறுத்ததால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

 


மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  


 பணியிடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தேவசாந்தினி என்பவர் பணியாற்றியபோது, 1997-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நாட்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து ரோமன் கத்தோலிக்க பள்ளிகளின் மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் ஆசிரியை அளித்த விளக்கத்தை ஏற்று, தண்டனை எதுவும் வழங்காமல், பணியில் சேர அனுமதித்தது. பணியிடைநீக்க காலத்தை விடுப்பாக கருதுவதாகக் கூறி, விடுப்பு கடிதம் கேட்டு தேவசாந்தினிக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர் விடுப்பு கடிதம் வழங்க மறுத்துவிட்டார். இதனால், ஊதிய உயர்வும், பணியிடைநீக்க காலத்துக்குரிய ஊதியமும் வழங்கப்படவில்லை.  


 மறுநியமனம் ரத்து

இதன்பின்னர், அதே மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளிக்கு 1998-ம் ஆண்டு தேவசாந்தினி மாற்றப்பட்டார். அங்கு 31-7-2013 அன்று அவர் ஓய்வுபெற்றார். தமிழக அரசின் அரசாணையின்படி, அவர் அந்த கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற மறுநியமனம் செய்யப்பட்டார். அப்போது, பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்குச் செல்ல தேவசாந்தினி மறுத்ததால், அவரது மறுநியமனத்தை ரத்து செய்து, 2014-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 1997-ம் ஆண்டு பணியிடைநீக்க காலத்துக்கு விடுப்பு கடிதம் வழங்கப்படாததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் 2 வழக்குகளை தேவசாந்தினி தொடர்ந்தார்.  


 வழங்கவேண்டும்

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாதது, அதனால் மனுதாரரை பணியிடைநீக்கம் செய்தது ஆகிய விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் கூறும் காரணங்களை ஏற்கமுடியாது. அந்தக் காலத்தை அவர் பணியில் இருந்ததாக கருதவேண்டும். அவருக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வையும், ஓய்வூதியத்தையும் 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.  


 புனித பணி

அதேநேரம், மனுதாரர் விடைத்தாள் திருத்தச் செல்லவில்லை என்பதால், அவரது மறு நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியப் பணி என்பது புனிதமான பணி. கற்பித்தல் மட்டுமல்லாமல், பிழையைத் திருத்துவதும் அவர்களது பணிதான். அதாவது, மாணவர்கள் செய்யும் பிழையைத் திருத்துவது கற்பித்தலில் ஒரு அங்கம் ஆகும். மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர்.  


 ரத்து சரிதான்

எனவே, விடைத்தாளை திருத்த மறுத்த மனுதாரரின் மறு பணிநியமன உத்தரவை ரத்து செய்தது சரிதான். இதில் தவறு இல்லை என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

பள்ளி வேலை நாட்கள் மற்றும் பொதுத்தேர்வு கால அட்டவணை - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- 

கொரோனா வைரஸ் உள்ள காலத்தில்கூட துணிந்து, பள்ளிகள்திறக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் நாளே 92 சதவீத மாணவர்கள் வந்துள்ளனர். ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் பள்ளிகள் நடைபெறும். அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாளும் பொதுத்தேர்வும் இருக்கும் என்றார்

IBPS வேலைவாய்ப்பு 2021 - சம்பளம் ரூ .54,126...

 IBPS காலிப்பணியிடங்கள்:

Analyst Programmer — Windows 1

Analyst Programmer — Frontend 2

IT Systems Support Engineer 1

IT Engineer (Data Centre) 2


வயது வரம்பு:

01.01.2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


வங்கி பணிகளுக்கான கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் B.E / B.Tech / MCA / M.Sc (IT) / M.Sc (Comp.Sc.) முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


 மாத ஊதியம்:

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.54,126/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16.01.2021 முதல் 08.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

>>> அறிவிப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> விண்ணப்பிக்க வலைதள முகவரி...



மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்தல் கமிஷன்...

 மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

 வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்கப்படும். இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . புதிய வாக்காளர் அட்டை நாளை முதல் 31ஆம் தேதி வரை Voter Help Line மொபைல் ஆப்  https://nvsp.in மற்றும் https://voterporta.eci.gov.in 

என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 இதில் வாக்காளர் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து "இ-எபிக்" பதிவிறக்கம் என்ற பட்டனை அழுத்தி வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் 6 என்று பதிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக தங்களுடைய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தற்போது வாக்காளர் அட்டை பெறுவது மிகவும் எளிமையாக பட்டுள்ளது. ஆதாரத்தை பதிவிறக்கம் செய்வது போல வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

    இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.  வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...