கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாலசக்தி புரஸ்கார் விருது - குழந்தைகள் வாழ்வில் பின்பற்ற பிரதமர் மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்...

 பாலசக்தி புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் குழந்தைகள் வாழ்வில் பின்பற்றுவதற்கு மனதில் எடுத்துக்கொள்ள வேண்டிய 3 உறுதிமொழிகளை அறிவுறுத்தினார். பாலசக்தி புரஸ்கார் விருது இந்தியாவில் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி போன்ற துறைகளில் சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்டிர பாலபுரஸ்காரின் கீழ் பால சக்தி புரஸ்கார் விருது வழங்கி ஆண்டுதோறும் சிறப்பு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தின் பிரசித்தி சிங் உள்ளிட்ட 32 பேர் இவ்விருதை பெறுகின்றனர். குழந்தைகள் பங்களிப்புக்கு பாராட்டு இந்த 32 குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவின் கடினமான காலகட்டத்தில், இந்த விருதை நீங்கள் பெறுவது சிறப்பு ஆகும். கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் குழந்தைகளின் பங்களிப்பு சிறப்பானது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை வெற்றி பெறச்செய்தீர்கள். ஒரு சிறிய யோசனைகூட சரியான செயலால் ஆதரிக்கப்படுகிறபோது, அதன் முடிவு சுவாரசியமாக அமையும். கடினமாக உழைக்கவேண்டும்.... நாட்டுக்காக கடினமாக உழைக்க வேண்டும். நாடு 75-வது சுதந்திர தினத்தை நெருங்கும் வேளையில், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். நீங்கள் சுய சரிதைகளை வாசிக்க வேண்டும். அவை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். நீங்கள் புகழ்ச்சிகளால் ஓய்வு எடுத்து விடக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை அடைய தொடர்ந்து பாடுபட வேண்டும். 

3 உறுதிமொழிகள் 

குழந்தைகளாகிய நீங்கள் 3 உறுதிமொழிகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

  1. தொடர்ந்து நிலைத்து இருக்கவேண்டும் என்பதே முதல் உறுதிமொழி. செயல் வேகத்தை குறைக்கவே கூடாது. 
  2. இரண்டாவது, நாட்டுக்கான உறுதிமொழி. நாம் நாட்டுக்காக உழைத்தால், ஒவ்வொரு வேலையையும் நாட்டுக்காக செய்தால், அந்த வேலை சுயத்தை விட பெரிதாகும். 
  3. மூன்றாவது, பணிவு ஆகும். ஒவ்வொரு வெற்றியும் நம்மை மிகவும் கண்ணியமாக இருக்க தூண்ட வேண்டும். ஏனென்றால் நம்முடையை பணிவு, மற்றவர்களுடன் நம் வெற்றியை கொண்டாட உதவும். 

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்...

 ''ஒன்பது, 11ஆம் வகுப்பு மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது: 


பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகளை துவங்குவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து, கருத்து கேட்டு, அதன் பின் முடிவு அறிவிக்கப்படும்.பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், மாணவியர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று வந்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. இரண்டு ஆசிரியர்களுக்கு தொற்று சந்தேகம் ஏற்பட்டு பரிசோதித்த போது, இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 இந்த விஷயத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரின் மனநிலையை புரிந்து தகவல் வெளியிட வேண்டும்.தமிழகத்தில், 82 ஆயிரம் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, ஆசிரியர்கள் தேவையின் அடிப்படையில், அப்போது, தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிக்கவும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

அரசாணை எண்:15 - கௌரவ விரிவுரையாளர்களுக்கு நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது...

அரசாணை எண்: 15, நாள் 25-01-2021 - கௌரவ விரிவுரையாளர்களுக்கு நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை எண்: 15, நாள் 25-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அரசு ஊழியருக்கு தன்னைச் சார்ந்துள்ள ( Dependent) கணவரோ/ மனைவியோ/ பெற்றோர்களோ/ அல்லது பிள்ளைகளோ மாற்றுத்திறனாளி நபராக இருந்தால், அவருக்கு மூன்று வருடகால பொதுமாறுதல் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கான அரசாணை எண்:107, நாள்: 03-09-2020...

 


Transfer of Government Servants - Once in three years - Exemption to the Government Servants, Who are the Caregiver of Differently Abled Person - Orders issued...

G.O.(Ms.)No.107, Dated: 03-09-2020... 

>>> அரசாணை எண்:107, நாள்: 03-09-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...

 


மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அழகப்பா பல்கலைக்கழக Summer Sequential Programme M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பதிவாளர்...

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு...

>>> பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு...

 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளும் ஆன்லைனில் நடந்து வருகிறது.


இந்த நிலையில், தொலைதூர கல்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடக்கும் என்றும், இதற்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் தேர்வு எழுத பதிவு செய்து வந்தனர்.


இதனையடுத்து, தற்போது பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:


* ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.


* தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.


* லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம்.


* 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...