கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண்.27, நாள்: 20-01-2021 - கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான பண வரம்பை மேம்படுத்துதல் - தகுதி அளவுகோல்களை திருத்துதல் - அரசாணை வெளியீடு...

G.O.Ms.No.27, Dated: 20-01-2021 - Loans and Advances – Conveyance Advance – Enhancement of monetary limit for purchase of motor cars and motorized two wheelers – Revision of eligibility criteria – Orders Issued...

>>> Click here to Download G.O.Ms.No.27, Dated: 20-01-2021...



அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28 வரை காலஅவகாசம்: ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம்...

 தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அங்கீகாரம் பெறாதமனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைவாங்கியவர்களின் நலனைக் காக்கவும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும், கடந்த 2017-ம் ஆண்டு மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே 4-ம் தேதி இதற்கான விதிகளை வீட்டுவசதித் துறை வெளியிட்டது.


இந்த விதிகள்படி, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க, 2017, நவ.3 வரை 6 மாதம்காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு நவ.3-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.


இந்நிலையில், வரன்முறை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மீண்டும் வரன்முறைக்கான வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதிலும் கால நீட்டிப்பு கோரப்பட்டது.


இதையடுத்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் தற்போது வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:


வரன்முறை திட்டத்துக்கான கால அவகாசம் முடிவுறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என தவறாக கருதியதாலும் பலர் விண்ணப்பிக்க தவறிவிட்டனர். இவ்வாறு விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் வரன்முறைப்படுத்த முடியாமல் விடுபட்ட மனைகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாக, விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கலாம் என நகர் ஊரமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.


அதேபோல், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர், ஆன்லைன் மூலம் மனை மற்றும் மனைப்பிரிவுக்கு வரன்முறைப்படுத்த மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.


இதை பரிசீலித்த தமிழக அரசு,மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டிருப்பின், அந்த மனைபிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் வரும் பிப்.28-ம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டுமா? பணிவரன்முறை செய்ய வேண்டுமெனில் மேற்கண்ட ஆணை வழங்கும் அலுவலர் யார்? தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்...


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்கக் கல்வித் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 15.09.2010 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் பணிவரன்முறை செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு  தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதில் கடிதம் - ஒரு தகவலுக்காக... (ஏனெனில் நிறைய ஆசிரியர்கள் இந்த பணிவரன்முறை ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் )...

>>> தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை - தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்...

 


TRB - BEO Exam Result And Final Key Answer Published

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

 

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019

          

Publication of Computer Based Examination Result

              As per Notification No. 13/2019, dated 27.11.2019, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for the Direct Recruitment for the post of Block Educational Officer from 14.02.2020 to 16.0.2020.

             42686 candidates appeared for Block Educational Officer Examinations. The Tentative Answer Keys were published on 20.02.2020 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc., were invited from the candidates up to 05.30 p.m on 26.02.2020. All the representations received within the stipulated time have been thoroughly examined by Subject Experts. After thorough scrutiny, revised and Final Answer Key has been arrived. Based on the revised key, candidate’s Computer Based Exam answer data has been valued and the normalized marks are published herewith.

            The normalized marks are calculated by following the procedure as mentioned in Notification Para 7 (iii), as examinations were conducted in multiple sessions for the same recruitment. Now, normalized marks obtained by all the candidates who have appeared for examination are hereby released along with the Final Answer Key.

            Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

 

Dated: 27.01.2021

 

Chairman

Publication of Result

Final Key - 14-02-2020 FN

Final Key - 14-02-2020 AN

Final Key - 15-02-2020 FN

Final Key - 15-02-2020 AN

Final Key - 16-02-2020 FN

Final Key - 16-02-2020 AN


>>> Click here to Download BEO Result Mark List...


பொதுத் தேர்வு - மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் சலுகை கோரும் விண்ணப்பப் படிவம்...

 


>>> பொதுத் தேர்வு - மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் சலுகை கோரும் விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிலை / மேல்நிலை - முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம்...

 


Relaxations Given to Differently Abled in SSLC/ Higher Secondary Examinations...

>>> இடைநிலை / மேல்நிலை - முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> பொதுத் தேர்வு - மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் சலுகை கோரும் விண்ணப்பப் படிவம்...


பத்தாம் வகுப்பு / மேல்நிலை -முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் -2021, மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல்...


SSLC / HSE-FIRST YEAR/ SECOND YEAR EXAMINATIONS, MARCH-2021, DISTRICT WISE CO-ORDINATORS LIST...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...