கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...

 


புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 029/ எப்/ இ2/ 2021, நாள்: 12-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 029/ எப்/ இ2/ 2021, நாள்: 12-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021 : பன்னிரண்டாம் வகுப்பு (HSC) பொதுத்தேர்வு - கால அட்டவணை வெளியீடு...

  • பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

  • +2 தேர்வு மே. 3லிருந்து மே - 23 வரை தேர்வு.

  • மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு.

  • மே 3 முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

  • "மே 3 - மொழித்தாள், மே 5 - ஆங்கிலம், மே 7 - கணினி அறிவியல், மே 11 - இயற்பியல் தேர்வு"

  • மே 17 - கணிதம், மே 19 - உயிரியல், மே 21 - வேதியியல் தேர்வு.

  • காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு 

  • காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.15 மணி வரை தேர்வர்கள் விவரங்கள் சரிபார்ப்பு 

  • தேர்வு சரியாக 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுபெறும்.




இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.02.2021 (புதன்)...

 


🌹அறிவை விட புரிதல் தான் மிகவும் ஆழமானது.

நம்மை அறிந்தவர் பலர் இருப்பர் 

ஆனால் நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்.! 

🌹🌹காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம்,

ஆனால் காயப்பட்டவர்கள் என்றும் மறப்பதில்லை,

ஏற்பட்ட காயங்களையும் அதன் வலிகளையும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                        🎀🎀அரசு ஊழியர்கள் கார் வாங்குவதற்கான முன் பணத்தொகை உச்சவரம்பை அதிகப்படுத்தி அரசாணை.

6 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை உதவி கிடைக்கும்! இதுவே பழைய கார்களை வாங்குவதற்கு முன் பணத்தொகை கிடையாது.

🎀🎀முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

🎀🎀செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கு 21-02-2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🎀🎀கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு - அரசு உத்தரவு.

🎀🎀சென்னையில் மார்ச் 1 வரை போராட்டங்கள் நடத்த தடை - பெருநகர காவல் ஆணையாளர் ஆணை.

🎀🎀NMMS தேர்வு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு DGE Proceedings வெளியீடு 

🎀🎀CBSE தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

🎀🎀'பசு அறிவியல்' தேர்வு: மாணவர்கள் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

🎀🎀ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி

🎀🎀டிஆர்பி தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்ப்பு?- மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🎀🎀உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2ஆகப் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பு --பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.                                                                      🎀🎀M.Tech படிப்புக்கு நடப்பாண்டில் மட்டும் 69% இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் ஆலோசனை                                                                 🎀🎀பிப்ரவரி 21ம் தேதி NMMS தேர்வுகள் – ஏற்பாடுகள் தீவிரம்       

🎀🎀6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்.,22 முதல் பள்ளிகள் திறப்பு – கர்நாடகா மாநில அரசு அறிவிப்பு

🎀🎀தமிழகத்தில் நேரடியாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு இனசுழற்சி உள் ஒதுக்கீடு முறை செல்லாது.

🎀🎀ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உடனே திறக்க வேண்டும் தனியார் பள்ளிகள் கோரிக்கை

🎀🎀பாடத்திட்டம் முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் ஈடுகொடுக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

🎀🎀நிஸ்தா திட்டத்தின்கீழ் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சி பெறவேண்டும்.                                                           

 🎀🎀45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம்- அமைச்சர் செங்கோட்டையன்

🎀🎀புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடி நீக்கம்:தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

🎀🎀தேர்தல் பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி பட்டியலில் முன்னுரிமை-சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

🎀🎀சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை

🎀🎀”நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குக் கடைசி முறையாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் பிப்ரவரி 22 – 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🎀🎀மேலாண்மைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'மேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🎀🎀அனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் அனைத்து வேலை   நாட்களிலும்  அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பணியாளா் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது 

🎀🎀அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு ஒருசிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் பணியாற்றும் இடத்தையும், கடந்த 48 மணிநேரத்தில் அவர் சென்ற இடங்களையும் மட்டும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

🎀🎀NMMS தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளது.  திங்கள் பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்ய வசதி தரப்பட்டுள்ளது. 

🎀🎀பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்களை உடனடியாக அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 

🎀🎀வேதியியல் மற்றும் இயற்பியல்  முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியலுடன்  பள்ளிக்கல்வித்துறை  இயக்குநரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🎀🎀1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு, தனியார் பள்ளி கூட்டமைப்பு தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றது.

🎀🎀7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரிடம் முதல்வர் ஜனவரி 29-ம் தேதி அளித்த கடிதத்தின் நகல் கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல்வரின் கடித்த நகலை கேட்டு  பேரறிவாளன் விண்ணப்பித்துள்ளார்.

🎀🎀குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.200-ஐ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மார்ச் 15-ந் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

🎀🎀தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்

தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல்.

🎀🎀மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28-ம் தேதி விழுப்புரம் வருகிறார்.

விழுப்புரத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

🎀🎀நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் என்பது அமலுக்கு வந்தது.

சுங்கச் சாவடிகளில்  பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல்.

பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் திங்கள் நள்ளிரவுடன் முடிந்தது.

🎀🎀அதிமுகவினர் சசிகலா தலைமையை ஏற்று தேர்தலை சந்தித்தால் ஓரிரு இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இல்லாவிட்டால் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல நேரிடும்

அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன்

🎀🎀2009ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

🎀🎀சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் 

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்சி செளந்தரராஜன்

🎀🎀பெண் அரசு ஊழியர்களுக்கு பின்பற்றப்படும் விதிமுறைகள்  அடிப்படையில் தங்களுக்கும் தேர்தல் பணி வழங்க வேண்டும். அருகாமை வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கும் வகையில் விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என பெண் போலீசார் கோரியுள்ளனர்.

🎀🎀10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்  - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🎀🎀சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.

🎀🎀தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்.

🎀🎀கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார் அமைச்சர் காமராஜ்.

🎀🎀ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்

🎀🎀உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு.

🎀🎀நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் கட்டாய பாஸ் டேக் முறை  அமலுக்கு வந்துள்ள நிலையில், பாஸ்டேக் இணைக்காத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது.

🎀🎀தமிழ்நாடு புதிய தொழில் கொள்கை 2021யை வெளியிட்டார் தமிழக முதல்வர் பழனிச்சாமி.

அடுத்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட திட்டம்.

🎀🎀மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் காவ்வாயில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

🎀🎀இந்திய மண்ணில்  21  போட்டிகளில் வென்று முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.

🎀🎀புதுச்சேரி செல்ல இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி.

🎀🎀இன்று காலை 9:30 மணி விமானத்தில் தேர்தல் பரப்புரைக்காக மதுரை செல்கிறார் ஸ்டாலின்

இந்நிலையில் திமுகவின் புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் ஸ்டாலினுடன் சந்திப்பு.

🎀🎀பொதுமக்கள் மாற்று எரிபொருள் பயன்படுத்த வேண்டும் - பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதில்

🎀🎀பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் 

துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை 

படிப்படியாக அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்.

🎀🎀உலகிலேயே இந்தியாவில்தான் மிக எளிதாக வாகன ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது, இது நாட்டுக்கு நல்லதல்ல; 2025க்குள் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு  50% ஆக குறையும் என நம்புகிறேன். 

-சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு.

🎀🎀 மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 84வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

🎀🎀50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்.

🎀🎀இன்னும் 3 மாதங்களில் திமுக அரசு

அமையும்; அதிமுக அரசு சொல்லி

செய்யாததை, செய்வோம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

🎀🎀மக்களின் பிரைவசியை பாதுகாப்பது நமது கடமை; புதிய கொள்கை தொடர்பாக பதிலளிக்க வாட்ஸ் அப், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

🎀🎀சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தல்.

🎀🎀அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் COVISHEILD தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

🎀🎀உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவை சேர்ந்த நிகோசி ஒகோஞ்சோ இவேலா நியமனம்.

🎀🎀மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

🎀🎀கட்டமைப்பை முன்னேற்றியதால்தான் இந்தியா உலகின் டாப் கிரிக்கெட் அணியாக உள்ளது; பாகிஸ்தான் பிரதமர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

அரசு ஊழியர்களின் ஊதியம், PF தொகையில் மாற்றம் – Take Home Salary குறைகிறதா? - புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல்...



 மத்திய அரசு புதிய ஊதிய கொள்கையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி முதலானவற்றில் மாற்றங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய ஊதிய கொள்கை 2021:

2019 ஆம் ஆண்டு ‘The Wage Code 2021’ என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை செய்து வருகிறது. இதன் மூலமாக அரசு பணியில் உள்ளவர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் வேலை, கூடுதல் பணி நேரம் போன்றவை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய ஊதிய சட்டத்தின் படி, சிடிசி யில் மாற்றங்கள் கொண்டுவர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. பொதுவாக சம்பளம் என்பது சம்பளம், அகவிலைப்படி மற்றும் பிற சலுகைகள் உள்ளடக்கி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொள்கை மூலம் மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும்.


இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக 50% மேலாக பிற சலுகைகள் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடம் வேலை செய்தால் அது கூடுதல் நேரம் ஓவர் டைம் ஆக கருதப்பட்டு அதற்கான ஊதியம் வழங்கப்படும். இதன் காரணமாக சம்பள தொகை குறைவாகவும், பிஎப் பணம் அதிகமாகவும் இருக்கும்.


இந்த திட்டம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் மாதந்தோறும் வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மாத கடைசியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்து பின்னர் விதிகளை அமல்படுத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2ஆகப் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...

 


உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2ஆகப் பதவி உயர்வு கலந்தாய்வு 19.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 16050/ சி4/ இ2/ 2020, நாள்: 15-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 16050/ சி4/ இ2/ 2020, நாள்: 15-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23ஆம் தேதி தாக்கல்...

 


இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


இயற்பியல் மற்றும் வேதியியல் பாட  முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது  - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2803/ டபிள்யு2/ இ1/ 2020, நாள்: 16-02-2021

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2803/ டபிள்யு2/ இ1/ 2020, நாள்: 16-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...