கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியா்கள் அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது - கல்வித் துறை எச்சரிக்கை...


 கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் அரசியல் கட்சி சாா்பில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா் முதல் அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் மத்திய அரசின் தோ்தல் ஆணையம் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவா்கள்


சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிா்த்தோ வாக்குச் சேகரிப்பு மற்றும் விமா்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியா்கள் ஈடுபடுவது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.


கல்வித்துறை சாா்ந்த பணியாளா்கள் அனைவரும் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடுநிலைமையாக பள்ளிகளில், அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும்.


கல்வித்துறை சாா்ந்த பணியாளா்கள் எந்தவிதத்திலும் அரசியல் கட்சி சாா்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது தோ்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது. மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


 >>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை எண்:326 வெளியீடு...


G.O.Ms.No.326, Dated: 20-03-2021,  கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழல் காரணமாக 22-03-2021 முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...

>>> Click here to Download G.O.Ms.No.326, Dated: 20-03-2021...



கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு திங்கள் கிழமை முதல் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிப்பு...

 


>>> செய்தி வெளியீடு எண்:196, நாள்: 20-03-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை...



>>> Click here to Download Chief Electoral Officer Letter No.761/ Ele-II/ 2021-11, Dated: 17-03-2021...


அஞ்சல் வாக்குச்சீட்டு (Postal Vote ) அளிக்கும் முறை - முழு விவரம்...



 >>> அஞ்சல் வாக்குச்சீட்டு (Postal Vote ) அளிக்கும் முறை - முழு விவரம்...


2010-11ஆம் ஆண்டில் கணித பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை...

 2010-2011ஆம் ஆண்டில் கணித பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை ( Mathematics B.T. Regularisation Order) - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 110736/ சி3/ இ2/2011, நாள்: 22-03-2013...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 110736/ சி3/ இ2/2011, நாள்: 22-03-2013...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group IV - Question Paper - 12-07-2025

  TNPSC குரூப் 4 - வினாத்தாள் - 12-07-2025 TNPSC Group IV - Question Paper - 12-07-2025 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...