கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.03.2021 (திங்கள்)...

 


🌹எவரையும் எதிர்பார்த்து வாழவும் கூடாது எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது.

நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.!

🌹🌹கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான்.

ஆனால் நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.!!

🌹🌹🌹எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க 

நமக்குதான் எவ்வளவு

பட்டாலும் புரிவது இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈நேற்று நாகை மாவட்டம் திருமருகலில் ஆசிரியர் இனக் காவலர் ஐயா பாவலர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு வீரவணக்கம் செலுத்தினார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்  முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள்.

🌈🌈ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு -  கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு 

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்படும்

🌈🌈பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும்

🌈🌈பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது

🌈🌈கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 

🌈🌈1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பயிற்சித் தாள்கள் தயாரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈மார்ச் 27 முதல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🌈🌈வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது.

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.- GUIDELINES -pdf ல் வெளியீடு.

🌈🌈மாணவர்களுக்கு கரோனா அதிகரித்தால் பள்ளிகளை மூட ஆந்திர அரசு அனுமதி

🌈🌈தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் கொரோனா தீவிரம்: 5 வகை யுக்தியை கடைபிடிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

🌈🌈கொரோனா பரிசோதனை என்ற பெயரில் பிரசாரத்திற்கு போகவிடாமல் தடுத்தனர்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

🌈🌈பாஜக எம்.எல்.ஏ மீது விவசாயிகள் சரமாரி தாக்குதல்: எம்எல்ஏ மீதான தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்.

🌈🌈தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றார்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறிய ராதாகிருஷ்ணன், ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

🌈🌈திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த சதி

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் கே.என்.நேரு புகார்

காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.என். நேரு

🌈🌈திமுக-வை வீழ்த்த உங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் ; நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து திமுக ஆட்சி நடைபெறுவதை பார்க்கவேண்டும்...

முதல்வர் பழனிசாமி குறித்து காங்கேயம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🌈🌈டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு 

திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

- கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

🌈🌈சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

🌈🌈அமைச்சர் எம்.சி சம்பத்தின், சம்பந்தி இளங்கோவனுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மேலும் ₹3 கோடி பணம் பறிமுதல் - தற்போது வரை மொத்தம் ₹9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

🌈🌈நான் பிறப்பால் தமிழனல்ல; தமிழரின் மனது புரியும். தமிழை மெதுவாக கற்க முயற்சி செய்கிறேன் 

- ராகுல் காந்தி

🌈🌈தேசிய அளவிலான புதிய கூட்டணிக்கு ராகுல் தலைமை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு.

அதிமுக நிழலில் பாஜக

தமிழகத்தில் பாஜகவால் வேரூன்ற முடியாததால், அதிமுகவை அச்சுறுத்தி, மிரட்டி அவர்கள் நிழலில் காலூன்ற முயலுகின்றனர்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

🌈🌈இந்தியாவை காப்பாற்றுங்கள்

மதவாத கும்பலில் மாட்டி தவிக்கும் இந்தியாவை ராகுல்காந்தி காக்க வேண்டும் ; அதற்காக இப்போதே தமிழகத்தில் உள்ள கூட்டணிபோல இந்திய அளவில் ஒரு கூட்டணியை அவர் உருவாக்க வேண்டும்

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

🌈🌈இது  பழைய அதிமுக அல்ல ; இது  பாஜக முககவசம் அணிந்த அதிமுக.

ஏன்  மோடி  அமித்ஷா  காலில்  விழுந்து கிடக்கிறார்  எடப்பாடி. 

தமிழக மக்கள் அதை விரும்பவில்லை

ராகுல் காந்தி  கடும்  விமர்சனம்

👉தமிழகத்தில் முகக்கவசம் போன்றது அதிமுக அதனை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஆர் எஸ் எஸ் + பாஜக கூட்டணி முகமாக இருக்கிறது: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு

👉மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார்

தேர்தல் முடிவுகளை பார்க்காமலேயே என்னால் இதனை சொல்ல முடியும்

-  ராகுல் காந்தி

🌈🌈தமிழகத்தில் பா.ஜ.கவை பின்வாசல் வழியாக அழைத்து வரும் வேலையை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,தங்கமணி செய்கின்றனர்.

தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விழும் ஓவ்வொரு வாக்கும் பா.ஜ.க, மோடிக்கு விழும் வாக்குகள் .

கோவை சுகுணாபுரத்தில் எம்.பி.ஜோதிமணி பிரச்சாரம்.

🌈🌈வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 124வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

🌈🌈வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.

🌈🌈மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு ஒரு சில நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

🌈🌈புதுச்சேரியில் ஆதார் தகவல்களை பெற்று தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ள பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்.

🌈🌈நான் கேட்பது மக்களின் வாக்கை அல்ல; நம் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை; தேர்தல் பரப்புரையில் சீமான் பேச்சு.

🌈🌈இந்தியா, வங்கதேம் இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது

🌈🌈பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

🌈🌈ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுபவா்களுக்காக 2,00,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளதற்கு ஐ.நா. பாராட்டுத் தெரிவித்துள்ளது.

🌈🌈பாஜக இந்தியாவின் பெயரை மாற்ற முடிவெடுத்தால் ''நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன்'' என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை. நாங்கள் விடப் போவதுமில்லை என்றும் சீமான் கூறினார்.

பாஜகவுக்கு தைரியம் இல்லை

வடநாட்டில் இருந்து சுமார் 1 கோடி பேர் தமிழ்நாட்டில் வந்துவிட்டார்கள். வெளி மாநில மக்களுக்கும் தமிழகத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று பாஜக தலைவர் சொல்கிறார். பாஜக முதலில் வெல்லட்டும். அதன்பிறகு திட்டத்தை பற்றி பேசட்டும். ஒரு உருப்படியான திட்டத்தை சொல்லியாவது ஓட்டுக் கேட்க பாஜகவுக்கு தைரியம் இல்லை. ஆனால் நாட்டின் பெயரை மாற்ற போவதாக கூறுகிறார்கள்.

வெறுமென வேடிக்கை பார்க்க மாட்டேன்

இதனை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அப்போ நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன். 20 சீட்டை வாங்கி விட்டு பாஜக இந்த ஆட்டம் போடுகிறது. அவர்களுக்கு துணையாக 2 முதலமைச்சர். ஒரு நிதி அமைச்சர், ஒருவர் உள்துறை அமைச்சர் உள்ளனர். பாஜக அந்த 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை. நாங்கள் விடப் போவதுமில்லை என்று சீமான் தெரிவித்தார்.

🌈🌈இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

கடைசி ஒரு மணி நேரம் - கொரோனா பீதியில் தேர்தல் அலுவலர்கள்...

 


உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு இதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்?

(நன்றி : விகடன்)

 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 621 கோடி ரூபாய். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாலும், நோய்த்தொற்றை தவிர்க்க வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,000-லிருந்து 95,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாலும் இம்முறை செலவினங்கள் அதிகரிக்கும் என்று கடந்த ஜனவரியிலேயே தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ குறிப்பிட்டிருந்தார்.


வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு வாக்குப்பதிவு பெட்டியை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுவரை இதன் செலவினங்களில் அடங்கும். தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம், இன்னபிற இத்யாதி செலவுகள் எல்லாம் இதில் அடங்கும்.




கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலை ஆணையம் நடத்தினாலும், அதை களத்தில் இருந்து நடத்திக்காட்டுவது அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும்தான். ஆனால் அவர்களுக்கான உணவு வசதியையோ, பாதுகாப்பு வசதியையோ, போக்குவரத்து வசதியையோ தேர்தல் ஆணையம் செய்து தருவதே இல்லை. `ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், போருக்குச் சென்று செத்துப் பிழைத்து வருவதுபோலத்தான் இருக்கிறது எங்களது நிலை' என்று ஆசிரியர் தரப்பு வெடித்துக் குரலெழுப்புகிறது.


`என்ன பிரச்னைகள்?' என்று கேட்டதுதான் தாமதம். கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் படபடவென பொரிந்து தள்ளிவிட்டார். அவர் சொன்னதை அப்படியே இங்கே தருகிறேன்.


அதற்கு முன்பு வாக்குப்பதிவு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறை குறித்த சிறு விளக்கத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். அவரது மேற்பார்வையில் அவரது மாவட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படும். தேர்தல் பணியை கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்களுக்கு `மெமோ’ வழங்கப்படும்.


ஒரு தொகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களும், பணியாளர்களும் அதே தொகுதிக்குள் தேர்தல் பணி செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. அதனால் அவர்கள் பழக்கப்படாத வேறொரு தொகுதிக்கு தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். அது நகரமாக இருக்கலாம். கிராமமாக இருக்கலாம். மலைப்பகுதியாகக்கூட இருக்கலாம்.


தேர்தலுக்கென்று 5 நாள்கள் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய முதல் மூன்று வாரங்களில் மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். எப்படி தேர்தலை நடத்த வேண்டும், வாக்குப்பதிவு பெட்டியை எப்படி இயக்க வேண்டும், பிரச்னை ஏற்பட்டால் எப்படி சரி செய்யவேண்டும், வாக்காளர் பட்டியலில் எப்படி வாக்காளர் பெயரை சரிபார்ப்பது. வாக்களிக்க அனுமதிப்பது, வாக்குப்பதிவு முடிந்ததும் எப்படி முத்திரையிடுவது என அனைத்தும் சொல்லித் தருவார்கள். வாக்களிக்கும் நாள், அதற்கு முந்தைய நாள் என இரு நாள்கள் களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.





தேர்தலுக்கு முதல் நாள் ஆட்சியாளர் அலுவலகத்தில் காத்திருந்து, தற்காலிகப் பணியாணை பெற்று வாக்குச்சாவடி இருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மறுநாள் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் எடுத்துச் செல்லும் வரை அங்கேயே காவல் இருக்க வேண்டும். அதன் பிறகே தேர்தல் பணி நிறைவடையும். கொரோனா பரவல் காரணமாக இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரித்திருக்கிறார்கள். இதுவும் ஆசிரியர்களிடமும் அரசு ஊழியர்களிடமும் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது.


இனி அந்த ஆசிரியை சொன்னது அப்படியே இங்கே...


``கொரோனா நோய்த்தொற்று பரவும் காலத்தில் பெண் ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்து, மூன்று நாள்கள் பயிற்சி முடித்து, ஏப்ரல் 5-ம் நாள் ஆணையினை பெற காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கிருந்து சொந்தப் பயண ஏற்பாட்டில் மதியம் 12 மணிக்குள் வாக்குச்சாவடியை அடையவேண்டும். வாக்குச்சாவடி அடைவதற்கு அன்று மாலை ஐந்து மணி ஆகிவிடும். ஆனால் போடுவார்கள் பாருங்களேன் ஒரு சட்டம்... மதியம் 12 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்க வேண்டும் என்று. அதனால் அவசர அவசரமாக எப்படியோ ஒருவழியாக வாக்குச்சாவடிக்கு வந்தடைவார்கள்.



உண்ண உணவில்லாமல், தங்க எவ்வித வசதியும் இல்லாமல், போதிய அளவிலான பாதுகாப்பில்லாமல், குடிக்க குடிநீர்கூட இல்லாமல், அன்று இரவு முழுதும் கொசுக்கடியில் தூக்கம் வருகிறதோ இல்லையோ தேர்தல் பொருள்களை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.


அடுத்த நாள் காலையில் 5.00 மணிக்கு எல்லாம் வாக்குச்சாவடியில் 100 மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஆரம்பிக்க வேண்டும். 100 ஓட்டுகள் பதிவுசெய்ய ஏஜென்ட்கள் யாரும் வராமல் எப்படித் துவங்குவது? அவர்களுக்கு யார் சொல்வது?” என்ற கேள்வியை முன்வைத்தார்.


மாதிரி வாக்குப்பதிவு என்பது, வேட்பாளர்களின் முகவர்களை வைத்துக்கொண்டு 100 வாக்குகளை பதிவு செய்து காண்பிக்க வேண்டும். வாக்கு அளிக்கும் சின்னத்தில் வாக்கு விழுகிறதா? இவருக்குத்தான் வாக்களித்தோம் என்ற உடனடி பதிவிறக்கச் சீட்டு வருகிறதா? பதிவுச் சீட்டுகளின் எண்ணிக்கையும் வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? இவற்றையெல்லாம் பரிசோதித்துக் காட்ட வேண்டும். முடிவுகளைச் சொல்லவும், மீண்டும் இயந்திரத்தை தயார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். இதற்குப் பெயர்தான் மாதிரி வாக்குப்பதிவு.



மீண்டும் அந்த ஆசிரியை தொடர ஆரம்பித்தார்.


``தேர்தல் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. அதாவது 12 மணி நேரம். அதுவும் ஒருசில வாக்குச்சாவடிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருப்பார்கள். இடையில் இயற்கை உபாதைகளுக்குக்கூட செல்ல வழியில்லாமல் பணியாற்ற வேண்டும்.


அதிலும் காலை, மதியம் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எங்களுக்கான உணவை யார் தருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மண்டல அலுவலர்கள் மூலமாக, அல்லது உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக இதுவரை உணவு வழங்கியதாக சரித்திரம் இலலை.


நகர்ப்புறங்களில் ஒரு சில இடங்களில், ஒரு சில நல்ல நண்பர்கள், நல்ல வாக்குச்சாவடி முகவர்கள், கிராமங்களில் நம்மீது அக்கறை கொண்ட ஒரு சில நல்ல உள்ளங்கள், நமக்காக உணவு தருவார்கள். பெரும்பாலான இடங்களில் உணவுக்குப் பெரும்பாடுதான்.


வாக்காளர்களின் நலன் மட்டுமே கருதி அன்று பொது விடுமுறை விட்டும்கூட, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கவிருக்கிறது என்றதும், ஒரு சில வாக்காளர்கள் `நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், விரைவில் வாக்குப்பதிவை துவங்குங்கள்' என்று உரிமையுடன் வருவார்கள். ஏழு மணிக்கு வாக்குச்சாவடி வாக்குப் பணி துவங்கும் முன் நாம் எத்தனை சீர் முறைகளை செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது.


மாதிரி வாக்குப்பதிவு முடித்ததும் அதனை கிளியர் செய்வதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். பிறகு அதனை சீல் செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அத்தனையும் ஒரு விதமான படபடப்புடன் செய்ய வேண்டும். எந்த ஒரு தவறும் நேராத வண்ணம் செய்ய வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குச் சாவடிக்குள் வரும் ஒவ்வொரு பத்திரிகை, போலீஸ்காரர், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவான விவரங்களை வழங்குவது அவசியமாகிறது.



இந்த 2021 தேர்தலில், கடைசி ஒரு மணி நேரம் நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான நேரம் என்று சொல்கிறார்கள். வாக்காளர்களின் 100% வாக்கு, வாக்களிப்பவர்களின் நலன் மட்டுமே பார்க்கத் தெரிந்த தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் அலுவலர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தால் மாலை 5 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு நிறைவுபெறச் செய்து இருக்கும்.


எங்களுக்காக குரல் கொடுக்க எந்தக் கட்சிக்காரர்களும் வரப்போவதில்லை. அங்கு எந்த சங்கத்தின் பேச்சும் எடுபடப் போவதில்லை. தேர்தல் முடிந்து அத்தனை விபரங்களையும் 17சி-ல் பதிவு செய்து முகவர்களுக்கு அளித்துவிட்டு முத்திரைப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு மிகுந்த பசியுடன், எப்போது மண்டல அலுவலர் வருவார் என்று விடிய விடிய காத்திருந்து, அனைத்தையும் அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பும் இன்றி இரவு வேளைகளில் பெண் ஆசிரியர்கள் வீடு திரும்ப வேண்டும்.



அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இந்தப் பணியை ஐந்தாண்டுகளுக்கு மூன்று முறை போர்க்களத்திற்கு செல்வதுபோல், போர் வீரர்களைப்போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தாலும் எங்களது பரிதாபமான நிலையை, எங்களுக்கு உள்ள இடர்பாடுகள் பற்றி முன்னெடுத்துச் செல்ல, எங்களது சிரமங்களைக் குறைக்க எவரும் இல்லை” என்றார் காட்டமாக.


விருதுநகரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பகிர்ந்த கொண்ட தகவல் இன்னும் வருத்தமாக இருந்தது.


``அறிமுகமே இல்லாத இடத்தில் தேர்தல் பணி போடுவார்கள். அங்கு சென்றால் ஆண் ஆசிரியர்களும் இருப்பார்கள். பெண் ஆசிரியர்களும் இருப்போம். அரசுப் பள்ளிகளின் நிலை உலகறிந்ததாயிற்றே. அதிலும் கழிப்பிட வசதிகளைக் கேட்கவா வேண்டும். ஆண்கள் எனில் சமாளித்துக்கொள்வார்கள். பெண்கள் நாங்கள் எங்கே செல்வது?



விடிகாலையில் 4 மணிக்கு எழுந்து, அந்த இருட்டில் புழு, பூச்சி, பாம்பு, பல்லி இருக்குமோ என்று பயந்து பயந்து சென்றுவிட்டு வருவோம். ஆண்கள் எழுவதற்குள் குளித்து முடித்து பள்ளியிலேயே ஆடை மாற்றிக்கொள்வோம். இத்தனையையும் தாங்கிக்கொள்ளலாம் என்றாலும்கூட, மாதவிடாய் தினங்கள் என்றால் சிரமங்கள் இன்னும் அதிகரிக்கும்.


இவ்வளவு செலவு செய்யும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காக அப்பள்ளிகளில் கழிப்பிட வசதியை புதிதாக ஏற்படுத்த வேண்டாம். இருப்பதை சரிசெய்து கொடுத்தால் எங்களுக்கு மட்டுமல்ல, அப்பள்ளிகளில் படிக்கவரும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது மொபைல் டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


முதல் நாளே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவோம். வாக்குச் சாவடிக்குள் மதியமெல்லாம் சென்றுவிட வேண்டும். அங்கே ஒரு ஏற்படும் செய்து வைத்திருக்க மாட்டார்கள். நாம்தான், டேபிள் எடுத்துட்டு வாங்க... பேனை சரி செய்து கொடுங்க... வெளிச்சம் போதவில்லை, அது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாகப் பார்த்து செய்ய வேண்டும். முடிப்பதற்குள் இருட்டிவிடும்.


நகரமென்றால் கடைகளில் சொல்லி உணவு வாங்கிக்கொள்ளலாம். கிராமம் எனில் அதோ கதிதான். பல முறை நான் பட்டினியாகத்தான் இருந்திருக்கேன். தேர்தல் பணிகளின்போது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கெல்லாம் மிகவும் சிரமம்.


வாக்குப்பதிவு முடிந்து எல்லோரும் சென்ற பிறகு, பெட்டிக்கு சீல் வைத்து அந்தப் பெட்டியை எடுத்துச்செல்லும்வரை நள்ளிரவானாலும் நாய் போல காத்துக்கிடக்க வேண்டியதுதான். பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டால், `நீ இருந்தாலும் சரி, செத்தாலும் சரி எங்களுக்கென்ன...' என்பதுபோல தேர்தல் பணிக்குழு எங்களை அந்த இடத்திலேயே கழற்றிவிட்டுவிடும்.


அந்த நள்ளிரவில் எப்படி நாங்கள் எங்களது ஊருக்குப் பயணிப்பது, பத்திரமாக வந்து சேர்வது? வயதான அப்பா, அம்மா, பள்ளி செல்லும் பையன் என எனது குடும்பத்தையே இருநாள் தனியே விட்டுவிட்டுத்தான் இப்பணிக்கு வந்தாக வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஆனால்கூட எங்களால் செல்ல முடியாது. காரணம் இது தேர்தல் பணி. எங்களுக்குப் பிடிக்காத பணி என்றால் இந்தத் தேர்தல் பணிதான்” என்றார்.



நீலகிரியிலுள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்து சொன்னது யோசிக்க வைக்கக்கூடியதாக இருந்தது.


``சமவெளிப்பகுதிகள் எனில் ஆசிரியர்கள் ஏதாவதொரு வாகனத்தைப் பிடித்து சென்று விடுவார்கள். மலைப்பகுதியென்றால் யோசித்துப் பாருங்கள். மிருகங்களின் பயம் இருக்கும். வேறு வழியே இல்லை. நாங்கள் போய்த்தான் ஆகவேண்டும். என்னவோ செய், ஏதோ செய், ஆனால், நீ அங்கே இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சொல்லிவிடும்.



பட்டதாரி ஆசிரியரை, அங்கே தலைமை ஆசிரியருக்கு மேலதிகாரியாகப் போட்டுவைக்கும் அவலமெல்லாம் நடக்கும். இம்முறை சமையலர், அலுவலக உதவியாளர் போன்றவர்களை எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு சரியாக எழுத வராது. அவர்களைக்கொண்டு 17சி படிவத்தை நிரப்ப இருக்கிறார்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. இரண்டு நாள்களுக்கும் எங்களுக்கு சோறு, தண்ணி இருக்காது. எவ்வளவோ செலவு செய்யும் தேர்தல் ஆணையம், தனது பணியாளர்களுக்கு உணவைத் தரலாம். அடிப்படை வசதிகளை செய்து தரலாம்” என்றார்.


சோழிங்கநல்லூரிலுள்ள ஆசிரியரிடம் பேசியபோது, ``வாத்தியாருங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க. இந்த வேலைய செஞ்சா என்னவாம் என்று குரல் கொடுப்பவர்கள்தான் இங்கே அதிகம். எங்களுக்குத் தேர்தல் பணி சம்பளமே வேண்டாம். எத்தனையோ வேலையற்ற பட்டதாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணியை ஒதுக்கிக்கொடுத்தால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல, அரசுக்கு எந்தப் பணி என்றாலும் ஆசிரியர்கள்தான் இளைத்தவர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பா, ரேஷன் கடை கணக்கெடுப்பா, மக்கள் தொகை பதிவேடா, வாக்காளர் சேர்ப்பு முகாமா, தடுப்பூசி முகாமா... இழுத்துட்டு வா அந்த அரசுப்பள்ளி ஆசிரியரை... என்றுதான் சொல்வார்கள். கல்விப்பணி பாதிக்குமே ... மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்களே... அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை இவர்களுக்கு.


இம்முறை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் கடைசி ஒரு மணி நேரம், அதாவது 6 முதல் 7 மணி ஓட்டுபோடலாம் என்கிறார்கள். அப்போது நாங்கள் முழு கவசத்தோடு இருக்க வேண்டும். அவர்களும் முழு கவசத்தோடு வரவேண்டும் என்கிறார்கள். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு கொடுக்கலாமே. அவர்களால் நோய் பரவலும் கட்டுப்படும். காகிதத்தில் கொரோனா உயிரி 10 நாள்களுக்கு மேல் இருக்காது. தேர்தல் முடிவுகள் 25 நாள்கள் கழித்துத்தானே வெளிவரப்போகிறது" என்று வருத்தப்பட்டார்.


திருநெல்வேலியில் இருக்கும் அரசு ஊழியர் ஒருவரிடம் பேசியபோது, ``என்னோடு பணியாற்றும் ஊழியர் ஒருவர் 15 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவிற்காக சிகிச்சை மேற்கொண்டார். உடலும் மனமும் தயாராகவில்லை. அவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கி இருக்கிறார்கள். உடல்நிலை மோசமாக இருக்கும்போது பணிக்கு எப்படி செல்லமுடியும் என்று கேட்டதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ``அதெல்லாம் முடியாது நீங்க பணிக்கு போய்த்தான் ஆகவேண்டும்." என்று கோபமாக பேசி அனுப்பியிருக்கிறார்கள். அவருக்கு வந்த ஆணையை ரத்து செய்ய அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.



புதுக்கோட்டையிலுள்ள ஆசிரியர் ஒருவர், ``பல லட்சம் செலவு செய்து பள்ளிக்கு வர்ணம் அடித்து வைத்திருப்போம். தேர்தல் விழிப்புணர்வு வாசகம், வாக்காளர் விவரம் என்றெல்லாம் போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்துவிடுவார்கள். பணி முடிந்ததும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதை மறுபடியும் நாங்கள்தான் சரிசெய்தாக வேண்டும். இதற்காக தனியே மூங்கில் தட்டிகளை வைத்தால் என்ன? டிஜிட்டல் முறையில் கொடுத்தால்தான் என்ன?” என்றார்.


`தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும். பணியாற்ற மாட்டோம் என்று எப்போதும் ஆசிரிய சமூகம் சொன்னது இல்லை. அடிப்படை வசதிகளை, நள்ளிரவில் எங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுங்கள் என்றுதானே கேட்கிறோம். 600 கோடிக்கு மேல் செலவு செய்யும் தேர்தல் ஆணையம் இதையும் செய்து தருவதுதானே நியாயமாக இருக்கும்?' என்கிறார்கள் ஆசிரியர்கள்.


இம்முறையேனும் தமிழக தேர்தல் ஆணையம் இந்தச் பிரச்னையை சரிசெய்யுமா?


- மோ.கணேசன்

இன்றைய (29-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 29, 2021



புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நீங்கும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : நற்செய்தி கிடைக்கும்.


பரணி : மனக்குழப்பங்கள் நீங்கும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 29, 2021



குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணியில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பெரியோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். கடித போக்குவரத்துகளால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 29, 2021



உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 29, 2021



துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களால் கீர்த்தி உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 29, 2021



மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : மனக்கசப்புகள் நீங்கும்.


பூரம் : நன்மையான நாள்.


உத்திரம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 29, 2021



பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : உயர்வான நாள்.


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.


சித்திரை : முயற்சிகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 29, 2021



அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு ஆதரவும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். நீண்ட நாள் மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


சுவாதி : லாபகரமான நாள்.


விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 29, 2021



இணையதள பணியில் லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் திறமைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

மார்ச் 29, 2021



நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வேலை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : மனவருத்தங்கள் நீங்கும்.


உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 29, 2021



நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்



உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 29, 2021



தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உடைமைகளில் கவனம் வேண்டும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் மனதில் பதற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு



அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : பதற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 29, 2021



போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : பரிசுகளை பெறுவீர்கள்.


உத்திரட்டாதி : அபிவிருத்தி ஏற்படும்.


ரேவதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளில் தொடரும் குளறுபடிகள்...

 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது - Guidelines for Admissions...

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது



 >>> Click here to Download - Guidelines for Admissions...


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் (KVS) RTE - கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கை...

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.



இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.


இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின்படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.


🛑கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமாகப் படிக்க 1ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


⭕மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை


⭕இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.


⭕கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர்.  இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன.  தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர ஏப்ரல் 1ம் தேதிமுதல் 19ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்


🛑விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

⭕குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

⭕வருமான சான்றிதழ்

⭕சாதி சான்றிதழ்

⭕குழந்தையின் புகைபடம்


🛑ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: 

https://kvsonlineadmission.kvs.gov.in/


🛑விண்ணப்பிக்க கடைசி தேதி: 

19-04-2021


🛑மேலும் விவரங்களுக்கு:

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Schedule%202021-22_3.pdf

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.170, Dated: 22-09-2024 - Providing non-equivalent for various degree courses - Attachment: DSE Proceedings, Tamil Nadu State Council of Higher Education Letter and Ordinance

   பல்வேறு பல்கலைக்கழகங்கள் &  கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, D...