கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.04.2021 (வியாழன்)...

 


🌹நம்ம மனசுக்கு பிடிச்சவங்களால மட்டுமே தான் நம்மல சந்தோஷமாக பார்த்துக்க முடியும்.

அதே சமயம் அவங்களால மட்டுமே தான் நம்மல காயப்படுத்தவும் முடியும்.!

🌹🌹தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுவது நல்லது.

அதைவிடுத்து புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம் ஆகும்.!!

🌹🌹🌹கண்களில் தென்பட்ட அனைத்துமே இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. 

இதயத்தில் இடம்பெற்ற அனைத்துமே அருகில் இருப்பதில்லை அதுதான் வாழ்க்கை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை.                                                           10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

🌈🌈கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளி: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட பயிற்சி கட்டகம், புத்தகம் தயார்; கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு.

🌈🌈இன்று ஏப்ரல் 22 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை –  ஹரியானா கல்வித்துறை அமைச்சர் தகவல்.

🌈🌈ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல் - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு

🌈🌈1 முதல் 9ம் வகுப்பு வரை பயிற்சி கையேடு, குறிப்பேடுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🌈🌈Bridge Course & Work Book - கல்வித் தொலைக்காட்சி மூலமாக அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு.

🌈🌈Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு...வகுப்பு,பாடம்,நேரம், குறித்த அட்டவணை வெளியீடு.

🌈🌈இந்தியாவில் அதிகரித்த கொரோனா பரவலின் போக்கை நாங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் !

- அமெரிக்க அரசு

🌈🌈தமிழக அரசிற்கு தெரிவிக்காமலே தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 45  மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு மாற்றிக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்து சுகாதாரத்துறையிடம் முறையிடுவோம்.

 -அமைச்சர் விஜயபாஸ்கர்.

🌈🌈ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: 

கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.

🌈🌈10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்  செய்தி நிறுவனத்திற்கு பேட்டி

இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.

-இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை

🌈🌈பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் சுகாவும் இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக இருந்த பயணத்தை ரத்து செய்தார்.

🌈🌈தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது எனவே இடை காலமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல்

🌈🌈சென்னையில் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன 

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன 

- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🌈🌈ஏப்.24 முதல் 30ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து 

 - ஏர் இந்தியா

🌈🌈பல்வேறு மாறுபட்ட கொரோனா தொற்று வகைகளுக்கு எதிராக COVAXIN தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது !

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617 வகை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் பாதுகாப்பை தருகிறது.

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

🌈🌈கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600ரூபாய்க்கும் விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவிப்பு

🌈🌈தகவல் வழங்குவதில் கால தாமதம் கூடாது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் ( RTI ), கீழ் யார் தகவல் கோரினாலும், கால தாமதம் செய்யாமல், உரிய காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவு.

🌈🌈உருமாறிய கொரோனாவை குணப்படுத்தும் திறன் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என்று ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு.

🌈🌈வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை 

-தமிழக தேர்தல் ஆணையர்

🌈🌈அடுத்த 15 நாட்களில் ரஷ்யாவின் 'Sputnik V' தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்.

Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் Dr.ரெட்டி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

🌈🌈நாட்டின் 2வது கொரோனா தொற்றின் அலை, மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு !

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

🌈🌈மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்-க்கு கொரோனா தொற்று உறுதி

🌈🌈பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

🌈🌈டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது

இதற்கான மத்திய அரசுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்

- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

🌈🌈இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஓமன் நாடு தடை.

🌈🌈தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என தகவல். முடிந்தவரை புகார்களை ஆன்லைன் மூலம் அனுப்ப அறிவுறுத்தல்.

🌈🌈தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

🌈🌈நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

🌈🌈கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

🌈🌈அமெரிக்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற உள்ள காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்திய காலநிலை ஆர்வலர் அர்ச்சனாவும் (@SorengArchana) உரையாற்ற உள்ளார் !

🌈🌈எம்.எஸ் தோனி ஐ.பி.எல் வரலாற்றில் சுனில் நரைனுக்கு எதிராக தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

🌈🌈ஆந்திரா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

🌈🌈19 மாநிலங்களுக்கு தேவையான Remdesivir மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுக்கு 58,900 Remdesivir மருந்துகள் ஒதுக்கீடு.

🌈🌈டெல்லி ரதி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் முற்றிலும் தீர்ந்தது. தற்போது, நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம்.

- ரதி மருத்துவமனையின் மார்கெட்டிங் மேலாளர் தகவல்.

🌈🌈ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து நீங்கள் ஆராயவில்லை. 

- டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை சாடல். 

🌈🌈புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

🌈🌈கோவை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அஸ்ரப்,செய்யது சுல்தான்  ஆகியோரை கேரள போலீசார் கோவை கரும்புகடை பகுதியில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து1.80 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகளாக கள்ளநோட்டு்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

🌈🌈திருப்பதியில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலைதான் அனுமரின் பிறப்பிடம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

🌈🌈சென்னையில் வீடுகளுக்கு பரிசோதனை செய்ய வருவோருக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🌈🌈மேற்குவங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த கோரிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே முடித்து விட்டதால் அதில் மாற்றங்களை செய்வது மிகவும் சிரமமான காரியம் என விளக்கம்

🌈🌈வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகள் எண்ணிக்கை குறைப்பு இல்லை;

அதற்கு பதிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க முடிவு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், முகவர்கள் என அனைவருக்கும் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

🌈🌈இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

🌈🌈இரவு நேர ஊரடங்கில் சிக்குவோரிடம் கண்ணியமாக பேசுங்கள்: 

போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை

🌈🌈மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் 

பிரியாங்கா காந்தி

🌈🌈தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது, மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.*

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

🌈🌈மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற 1 கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும்

திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு.

🌈🌈நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 

பிரதமர் மோடி.

🌈🌈நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன்?

தட்டுப்பாடு நிலவும் சூழலில் 93,000 மெட்ரின் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? 

👉கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது .

👉45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🌈🌈கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ஜேஇஇ முதல் முதுநிலை நீட் வரை – ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் முழு பட்டியல்...

 நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஜேஇஇ Mains, முதுநிலை நீட் மற்றும் பல்கலை அளவிலான நுழைவுத் தேர்வுகள் போன்ற தேசிய அளவிலான பல தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய தேர்வுகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.



முதுகலை நீட் 2021:

ஏப்ரல் 18 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வுகள் நடைபெற இருந்தது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், இளம் மருத்துவ மாணவர்களின் நல்வாழ்வை மனதில் வைத்து தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை வெளியிட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தேர்வு நடக்கும் புதிய தேதிகள் natboard.edu.in மற்றும் nbe.edu.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜே.இ.இ (Mains) ஏப்ரல் தேர்வு:

ஜே.இ.இ (Mains) ஏப்ரல் மாத தேர்வுகள் 27 முதல் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து உள்ளதால் ஜே.இ.இ (Mains) தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தேர்வுகள்:

உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகரித்து உள்ளதால் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) ஜூன் 20 முதல் ஜூலை 11 வரை திட்டமிடப்பட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. தேர்வுக்கான புதிய அட்டவணை சரியான நேரத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை amucontrollerexams.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.



UPCET 2021:

என்.டி.ஏ நிறுவனம் உத்தரபிரதேச ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அல்லது யுபிசெட் 2021 தேர்வுகளை மே 16 முதல் ஜூன் 15ம் தேதி வரை தள்ளிவைத்துள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க மே 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்:

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) சட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி (HRDE)க்கான ஆராய்ச்சி நுழைவு தேர்வை ஏப்ரல் 18ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் நாடு முழுவதும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கட்டும்.


ஜே.எம்.ஐ பி.எச்.டி நுழைவுத்தேர்வு:

ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பிஎச்.டி நுழைவுத் தேர்வுகள், டெல்லியில் கோவிட்-19 தொற்று அதிகரித்து உள்ள காரணத்தால் ஏப்ரல் 20, 22, 24 மற்றும் 26ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அடுத்த உத்தரவு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


CLAT தேர்வுகள்:

பொதுவான சட்ட சேர்க்கை தேர்வு (CLAT) 2021 இந்த வருடம் ஜூன் 13ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்வுகளை மே மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தேர்வு வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு – புதிய ஊதிய விதி அமலில் சிக்கல்...

 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய ஊதிய விதியை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது.  தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இந்த விதியை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும். எனவே சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய ஊதிய கொள்கை:



2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமல்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமயத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது கொரோனா தாக்கத்தின் போது அனைத்து நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.


பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த நேரத்தில் புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது கடினம். மேலும் இந்த புதிய ஊதிய விதிப்படி, ஊழியர்களுக்கு கிராசுட்டி, பிஎஃப் போன்றவை அதிகரித்து ஊதியம் குறைவாக இருக்கும். எனவே ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.


இன்னும் சில காலத்திற்கு புதிய ஊதிய விதி அமலுக்கு வருவது சிக்கல் தான். மேலும் நிறுவனங்கள் தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ...

 


>>> PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் (PDF File)...

TNPSC தேர்வுக்குத் தயாராவது எப்படி? - திலிப்குமார்...

 TNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது மற்றும் இல்லாதது), மற்றும் குரூப் 4 (VAO உட்பட) இந்த இரண்டு தேர்வுகளை பற்றி மட்டும்.




 

இந்த இரு TNPSC தேர்வுகளுக்கும் நீங்கள் தயாராகும் முன்பு முக்கியமாக உங்களை விட TNPSC வாரியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துக்கொண்டு உங்களின் பயிற்சியை ஆரம்பியுங்கள்.நான் இதை சொல்லுவதற்கு காரணம் நாம் எந்த ஒரு தேர்வை அணுகும்போதும் நம்முடைய படிக்கும் திறன்,முயற்சி இதையெல்லாம் விட நம் மனநிலையை பொறுத்தே நம்முடைய வெற்றி, தோல்வி அமையும்.




எந்த சூழ்நிலையிலும் உங்களின் TNPSC தேர்வு முறை (TNPSC உட்பட) நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லாமல் TNPSC க்கு தயாராகுங்கள்.


விஷயத்துக்கு வரலாம்.


‌இதற்கு முன்பு போல் இல்லாமல்,தற்போது TNPSC ல் GROUP 2க்கு தனியாகவும், Group 4 க்கு என்று தனியாகவும் நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.அதாவது இதுவரை நீங்கள்  பொதுத்தமிழையோ அல்லது பொதுஆங்கிலத்தையோ மட்டும் தேர்ந்து எடுத்து படித்து Gr 2 ,Gr 4 யை எழுதியிருப்பீர்கள். இனி அப்படி நீங்கள் எழுத முடியாது.


 


உங்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒன்று மட்டுமே வரும் இரண்டும் படிக்க கஷ்டம் என்று எண்ணினால் உங்களால் Gr 2 எழுதமுடியாது புதுத்தேர்வு முறைப்படி Group2க்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால் தமிழை தவிர ஆங்கிலமும் கண்டிப்பாக கற்று அறியவேண்டும்.




நம்மில் பலர் பொதுதமிழை மட்டும் நம்பிதான் பொதுவாக TNPSC தேர்வை அணுகுவார்கள்.பொதுதமிழில் அவர்களை அடித்துக்கொள்ளமுடியாது,ஆனால் இனி அவர்கள் அடிப்படை ஆங்கிலத்தையும் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும்.


 

நீங்கள் Gr 4 மட்டும் எழுதபோகிறீர்கள் என்றால் கவலைப்படாமல் ஏதாவது ஒன்றை (தமிழ்,ஆங்கிலம்) தேர்ந்தெடுத்து உங்களின் கணக்கை தொடங்கலாம்.



என்னை பொறுத்தவரை பொதுஆங்கிலத்தை எழுதிப்பழகுங்கள், தமிழை விட எளிதாகவும்,படிக்க மிகச்சுலபமாகவும்(தேர்வுக்கு) இருக்கும். அதே சமயம் உங்களின் ஆங்கில இலக்கண அறிவு உங்களை TNPSC தவிர மற்ற போட்டி (SSC) தேர்வுகளிலும் போட்டியிட உதவும்.


 


‌Group 2 க்கு நீங்கள் தயாரானால் அது gr 4 க்கும் உதவும்.Group 2க்கு முன்பைவிட தற்போதைய தேர்வுமுறை சற்று கடினமானது என்று எண்ணி இதில் உள்ள வாய்ப்புகளை வீணாக்கிவிடாதீர்கள். முன்பைவிட



கண்டிப்பாக Group 2 தேர்வுக்கான போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக வரும்காலங்களில் குறைய வாய்ப்புண்டு. வரும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.


 


‌Group 2 பொறுத்தவரை முதலில் (Prelimary) பொதுபாடத்தில் 175 மதிப்பெண்ணுக்கு (General Studies) அதிகப்படியான கவனம் செலுத்தி உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.கண்டிப்பாக வெறும் பள்ளிப்பாட புத்தகத்தில் இருந்துமட்டும் இனி கேள்விகளை நாம் எதிர்ப்பார்க்க முடியாது.


 


பொது அறிவியல், பொருளாதாரம், தற்போதைய நாட்டுநடப்புகள், இந்திய, தமிழக வரலாறு, இந்திய குடிமையியல் முக்கியமாக மாநில சரத்துகள்,இன்னும் இதைத்தவிர தமிழ்நாட்டின் அரசியல், சட்டங்கள், கலை, விளையாட்டு, புதியதாக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,மாவட்டங்கள், இப்படி நம் மாநிலச்செய்திகளை தமிழ்நாடு வரலாறு புத்தகத்தில் இருந்தும், இணையதளத்தில் இருந்தும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.




இதை தவிர திருவள்ளுவரையும் திருக்குறளையும் இனி சாதாரணமாக நினைக்கவேண்டாம்.


25 மதிப்பெண்ணையும் நீங்கள் கணிதத்தில்(Aptitude) முழுவதும் பெற முயற்சி செய்யுங்கள்.LCM, HCF, P/L, SI,CI, WORK AND TIME, MENSURATION,போன்ற பிரிவுகளில் நன்கு பயிற்சிச்செய்து பழகுங்கள் முடிந்தளவு 25யையும் உங்களுக்குரிய தாக்கி கொள்ளுங்கள்.




இவை அனைத்தும் முதன்மை தேர்வில் மட்டும் வரும் OBJECTIVE type கேள்விகள்.


 


6. அடுத்த Main தேர்வு உங்கள் கதைக்கான (Descriptive type) நேரம்.இதில் தனித்தனியாக இரண்டு பிரிவு (Paper 1 & 2) உண்டு.


 


முதலில் தமிழில் இருந்து ஆங்கிலமும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு (Translation) செய்ய வேண்டும்.கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான உங்களின் பதிலை (Paper 2) கணக்கில் கொண்டு திருத்த முடியும்.




தினசரி ஆங்கில செய்தித்தாளை படித்தாலே போதுமானது.கேள்வியில் கொடுத்து இருக்கும் மொழிபெயர்ப்பு எந்த காலத்தை(கடந்த, நிகழ், எதிர்) சேர்ந்தது என்று கண்டுபிடித்தல்,இலக்கணத்தை புரிந்துக்கொள்ளுதல்,தினசரி Vocabulary யை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் தினசரி பயிற்சியின் மூலம் இந்த பிரிவை எதிர்கொள்ளலாம்.



இந்த பிரிவில் தேர்ச்சி அடைந்தபின் அடுத்த பிரிவை (Paper 2) தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ முழுவதுமாக ஒரே மொழியில் அனைத்து உட்பிரிவையும் எழுத வேண்டும்.




இந்த Paper 2 ல் உள்ள உட்பிரிவை எழுத கட்டாயம் நமக்கு தமிழ்நாட்டின் சங்க வரலாறு,நாட்டியம்,இசை,கலை,பண்டமாற்றுமுறை,சமூக பொருளாதாரம் போன்றவற்றை பற்றி குறைந்தபட்சம் முடிந்தால் அதிகமாக தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. காரணம் நீங்கள் இதற்கு முன்பு எழுதிய Preliminaryy, Main Paper 1 ம் உங்களின் வெற்றியை தீர்மானிக்கப்போவது இல்லை. Main தேர்வில் எழுதும் Descriptive Paper 2 மட்டுமே முழுக்க முழுக்க உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.



TNPSC க்கு என்று இனி தனியாக சமச்சீர் புத்தகம், Local Branded புத்தகம்,இவற்றை தவிர Standrad ஆங்கில புத்தகங்கள்,NCERT,முக்கியமாக உங்களுக்கு கடினமாக நினைக்கும் தலைப்புகள்,அல்லது அதிக தகவல்கள் பெற கஷ்டமாக உள்ள தலைப்புகளை இணையத்தில் இருந்து தனியாக எடுத்துவைத்துக்கொண்டால் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்.



மற்ற தேர்வுகளை போல இல்லாமல் Tnpsc தேர்வுயன்று தேர்வுஅறைக்குள் மிக அதிக நேரம் யோசிக்க கிடைக்கும்,அதனால் நீங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் (முக்கியமாக திருக்குறள் சம்பந்தமாக) எவ்வளவு தகவல்களை தெரிந்துவைத்துஉள்ளீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் தேர்வும்,அதைத்தொடர்ந்து இறுதியில் வரும் தேர்வு முடிவும் அமையும்.




என்னை பொறுத்தவரை முன்பைவிட தற்போது உள்ள பாடமுறையில் மிக எளிதாக வெற்றியை அடையலாம்.


 

 வாழ்த்துகள்...


நன்றி


திலிப்குமார் துரைப்பாண்டி


தென்னக ரயில்வேயில் நிலை அதிகாரி

தடுப்பூசி - தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – மேலாண் இயக்குனர் அறிவிப்பு...

 தமிழக அரசின் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.



கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களும் செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. முழு ஊரடங்கு அறிவிப்பு பின்னர் தொற்றின் பாதிப்பு குறைந்து வந்தது.



இரண்டாம் அலை:

இந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெல்ல செயல்பட தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மார்ச் மாதத்தில் இருந்து பரவத் தொடங்கியது. திடீரென்று கடந்த 10 நாட்களில் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.



கட்டாயம் தடுப்பூசி:

இந்நிலையில் மாநகர மற்றும் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நலம் அடையும் வரை சம்பள பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இன்றைய (22-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 22, 2021



பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். தாய்மாமன் வழி உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.


பரணி : கீர்த்தி உண்டாகும்.


கிருத்திகை : மேன்மையான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 22, 2021



உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 22, 2021



துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கவனமாக இருக்கவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். புதிய மனை வாங்குவதற்கு சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.


திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 22, 2021



மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் வசூலாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : பணவரவுகள் மேம்படும்.


பூசம் : நற்பெயர் கிடைக்கும்.


ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 22, 2021



பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். அக்கம்-பக்கத்து வீட்டார்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : லாபம் உண்டாகும்.


உத்திரம் : திருப்தியான நாள்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 22, 2021



தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடக்கவும். தொழில் அலைச்சல்களால் லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


அஸ்தம் : நிதானம் வேண்டும்.


சித்திரை : சுபவிரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 22, 2021



விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : வெற்றி கிடைக்கும்.


சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 22, 2021



தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.


கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 22, 2021



ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் தொடர்பான தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூராடம் : லாபம் உண்டாகும்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 22, 2021



உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மந்தமான நாள்.


திருவோணம் : எச்சரிக்கையுடன் இருக்கவும்.


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 22, 2021



முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : அமைதி வேண்டும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 22, 2021



சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை



பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : ஆசிகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...