கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசாணை (நிலை) எண்: 98, நாள்: 25-06-2023 - தொழிலாளர் நலன் - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வீதம் அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது (G.O. (Ms) No: 98, Dated: 25-06-2023 - Labor Welfare - Tamil Nadu Construction Workers Welfare Board - Provision of welfare allowance of Rs.12,000/- per annum for a maximum period of three years to construction workers suffering from serious illnesses and unable to work - Ordinance Publishing)...
புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 5 ஐபிஎஸ் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் செயல்முறைகள் (Vigilance Committee Consisting of 5 IPS Officers - Tamil Nadu DGP Sylendra Babu's Proceedings in the Migrant Workers Safety and Security Rumours)...
14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...
14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...
தடுப்பூசி - தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – மேலாண் இயக்குனர் அறிவிப்பு...
தமிழக அரசின் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களும் செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. முழு ஊரடங்கு அறிவிப்பு பின்னர் தொற்றின் பாதிப்பு குறைந்து வந்தது.
இரண்டாம் அலை:
இந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெல்ல செயல்பட தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மார்ச் மாதத்தில் இருந்து பரவத் தொடங்கியது. திடீரென்று கடந்த 10 நாட்களில் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கட்டாயம் தடுப்பூசி:
இந்நிலையில் மாநகர மற்றும் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நலம் அடையும் வரை சம்பள பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...
ஊதிய உயர்வு, தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
முன்னதாக, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் கால தாமதத்தை சரி செய்ய வேண்டும், தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, பிப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளன.
தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் வேளையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தொழிற்சங்கங்களின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...