கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) தமிழில் வெளியிட்டது மத்திய அமைச்சகம்...



 >>> தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  (National Education Policy 2020 in Tamil)...


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பணி - கல்வித் துறை அதிகாரிகள் தகவல் - ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணி...

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் தவிர்த்த பிற வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன நோய் பரவல் சூழல் சரியான பின்னர் +2வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்கிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதேநேரம் ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்நிலையில் தோற்று வராமல் தீவிரம் கருதி விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுழற்சி முறையில் பணி இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது எனவே அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய (27-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 27, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : விருப்பங்கள் நிறைவேறும்.


பரணி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 27, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடனிருப்பவர்கள் பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்கள் உண்டாகும். கடன் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.


ரோகிணி : மாற்றமான நாள். 


மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 27, 2021



நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பிறமொழி பேசும் கலைஞர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவாதிரை : கற்பனைத்திறன் அதிகரிக்கும். 


புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 27, 2021



தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாசனை திரவியம் மற்றும் அலங்காரப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 27, 2021



மனதில் புதிய செயல்பாடுகளும், முயற்சிகளும் செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 27, 2021



சுபகாரியங்கள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். ஏற்றுமதி சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 


அஸ்தம் : தடைகள் அகலும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 27, 2021



தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு மறையும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. சொந்த ஊர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : சிந்தனைகள் ஏற்படும்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 27, 2021



கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை சற்று கவனத்துடன் கையாள வேண்டும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : குழப்பங்கள் அகலும். 


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 27, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். சேமிப்பை அதிகப்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சில அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : புதுமையான நாள். 


பூராடம் : ஆதரவு கிடைக்கும். 


உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 27, 2021



சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதற்கான முயற்சிகளை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிறு சிறு புதுமைகளை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 27, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வாகனங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களை பற்றிய புரிதலும், தெளிவும் கிடைக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் பிறமொழி நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். 


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 27, 2021



புதிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைவரிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் குழப்பங்களும், காலதாமதமும் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------


வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்...

 கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




தமிழகத்தில் மூன்று வாரங்களாக கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வருகிறது.நாள்தோறும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி மாநிலம் முழுதும் 1.05 லட்சம் பேர் சிகிச்சையில்உள்ளனர்.இந்த எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் இரு மடங்காகும் எனஅஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.



இதனால் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்தாண்டை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் ஐந்தில் நால்வருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.இதனால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். 



சளி காய்ச்சல் குறைவாக உள்ளவர்களும் அறிகுறிகளே இல்லாமல் உள்ளவர்களும் மருத்துவ மனைகளை நாடத் தேவையில்லை.அதே நேரம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவர்கள் டாக்டர்களின் அறிவுரை பெற்றுதான் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.அதற்கும் வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருத்தல் அவசியம்.


 


நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் எய்ட்ஸ் நோயாளிகள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.



முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பல்ஸ் ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள்; இரண்டு முக கவசங்கம் அணிவது அவசியம். நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் பெற தனி உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்ப்பு - அரசின் தடை நாளை முடிவடைகிறது...

 


18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்...

 நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. 



தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.




நாட்டில் ஏற்கனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே, முதல் டோஸ் போட்டவர்களுக்கு இன்னும் 2வது டோஸ் கிடைக்கவில்லை. 18-45 வயதுகாரர்களுக்கும் தடுப்பூசி போடத் தொடங்கினால், தடுப்பூசியின் சப்ளையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆல்லைனில் முன்பதிவு செய்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கோ, மருந்துவமனைகளுக்கோ இவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி போட மாட்டார்கள்.



>>> Cowin தளத்தில் பதிவு செய்ய...


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாரத்திற்கு எடுக்க வேண்டிய பாடவேளைகள் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் வருகை பதிவேடு எழுதுதல், EMIS தகவல் உள்ளீடு செய்தல், பணிவரன்முறை கருத்துரு தயாரித்தல் யாருடைய பணி...? - RTI பதில்...



 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாரத்திற்கு எடுக்க வேண்டிய பாடவேளைகள் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் வருகை பதிவேடு எழுதுதல், EMIS தகவல் உள்ளீடு செய்தல், பணிவரன்முறை கருத்துரு தயாரித்தல் யாருடைய பணி...? - வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் பொது தகவல் அலுவலரின் RTI பதில் கடிதம் ஓ.மு.எண்: 1277/ அ1/ 2021, நாள்: 01-04-2021...


>>> வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் பொது தகவல் அலுவலரின் RTI பதில் கடிதம் ஓ.மு.எண்: 1277/ அ1/ 2021, நாள்: 01-04-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...