கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...




5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு


கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்


இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்


நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்


35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.


மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.


கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்


- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்கு எண்ணிக்கை - மாவட்ட வாரியாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகள், மேசைகள் மற்றும் மதிப்பிடப்பட்டுள்ள சுற்றுகள்...



>>> Click here to Download Tamil Nadu Assembly Election 2021 - Counting of Votes - District wise Assembly Constituency wise Polling Stations, Tables and Rounds Estimated Details...


உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி.அபூர்வா அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமனம் - அரசாணை வெளியீடு...



 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விடுப்பில் உள்ளதால், உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி. அபூர்வா அவர்கள்  பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமித்து அரசாணை (G.O.Rt.No.1846, Dated: 30-04-2021 ) வெளியீடு...


>>> Click here to Download G.O.Rt.No.1846, Dated: 30-04-2021...



கரோனா வைரஸை தடுக்க மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் மரணம்...

 கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை விரட்ட‌ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய புரளிகள் அன்றாடம் கிளப்பி விடப்படுகின்றன. அதுபோல் 'எலுமிச்சை தெரபி' என்ற பெயரில் வீடியோ ஒன்று வைரலானது. பாஜக முன்னாள் 



எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்க‌த்தில் பகிர்ந்து, '' நானும் இதை முயற்சித்திருக்கிறேன். மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.


இந்நிலையில், ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் (42) நேற்று முன் தினம் வீடியோவில் கூறியவாறு தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தி காரணமாக ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு (G.O.No.389, Dated:24.05.2018) ஏப்ரல் - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...



 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியிடங்களுக்கு (G.O.No.389, Dated:24.05.2018) ஏப்ரல் - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8250/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...


>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8250/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...


DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - முதன்மைச் செயலாளர் கடிதம்...



DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...

>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...



இன்றைய (01-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 01, 2021



உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.


பரணி : மாற்றங்கள் ஏற்படும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

மே 01, 2021



புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 01, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.


திருவாதிரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

மே 01, 2021



உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய வியூகங்களை கற்றுக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

மே 01, 2021



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சிலருக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




கன்னி

மே 01, 2021



தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.


சித்திரை : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




துலாம்

மே 01, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 01, 2021



மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


கேட்டை : மேன்மை ஏற்படும்.

---------------------------------------




தனுசு

மே 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஆசைகள் தோன்றும்.

---------------------------------------




மகரம்

மே 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியில் லாபம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : திட்டங்கள் நிறைவேறும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மே 01, 2021



தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : தாமதங்கள் அகலும்.


சதயம் : இன்னல்கள் குறையும்.


பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மே 01, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். மனைவிவழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்தி பரிசும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...