கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு...

 தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வன காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினை கொண்டு 465 காலிப்பணியிடம் மலைவாழ் இனத்தவரை கொண்டு 99 காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.



தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போதிய அளவில் கையிருப்பு இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை...

 தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்படவில்லை.



கரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி  தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான இணையதள பதிவு கடந்த 28-ம் தேதி தொடங்கியது.


ஆனால், போதிய அளவில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்படவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறும் போது, ‘‘தற்போதைய நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வர வேண்டாம்’’ என்றார்.


டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறும் போது, ‘‘எங்களிடம் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. 1.34 கோடி தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். அதன்பிறகே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்’’ என்றார்.


 

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘‘எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லை. சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.


குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, ‘‘மே 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.


இதேபோல ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, ஒடிசா, பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநிலங்களிலும் இந்தத் திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.


தமிழகம்

தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


அவர் கூறும்போது, தமிழக அரசு 1.50 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆர்டர் செய்துள்ளது. இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்ற தகவல் வரவில்லை. தடுப்பூசி கிடைத்தால்தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

CBSE - பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு...

 சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



நாடு முழுவதும் 23 ஆயிரம் சிபிஎஸ்இ  பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே எதிர்கால தேவையை முன்வைத்து பாடத்திட்டம், தேர்வு வடிவங்களில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது.


அதன்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறைகளில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9, 10-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்களில் 30 சதவீதமும், 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் 20 சதவீதமும் இனி திறன் மதிப்பீடு கேள்விகள் கேட்கப்படும் என்றுசிபிஎஸ்இ கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாற்றங்கள் 2021-22-ம்கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். அதற்கேற்ப மாணவர்களை பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் எனவும் சிபிஎஸ்இ  அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;


தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வினாத்தாள்வடிவங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாகஎதிர்கொள்ளவும், உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும்.


திறன் மதிப்பீடு கேள்விகள் அன்றாட வாழ்க்கை தொடர்பானதாகவும் இருக்கும். எனவே, புத்தகங்கள் தவிர்த்து பொதுஅறிவு தொடர்பான பகுதிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படியே நடைபெறும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்

5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...




5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு


கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்


இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்


நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்


35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.


மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.


கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்


- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்கு எண்ணிக்கை - மாவட்ட வாரியாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகள், மேசைகள் மற்றும் மதிப்பிடப்பட்டுள்ள சுற்றுகள்...



>>> Click here to Download Tamil Nadu Assembly Election 2021 - Counting of Votes - District wise Assembly Constituency wise Polling Stations, Tables and Rounds Estimated Details...


உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி.அபூர்வா அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமனம் - அரசாணை வெளியீடு...



 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விடுப்பில் உள்ளதால், உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி. அபூர்வா அவர்கள்  பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமித்து அரசாணை (G.O.Rt.No.1846, Dated: 30-04-2021 ) வெளியீடு...


>>> Click here to Download G.O.Rt.No.1846, Dated: 30-04-2021...



கரோனா வைரஸை தடுக்க மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் மரணம்...

 கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை விரட்ட‌ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய புரளிகள் அன்றாடம் கிளப்பி விடப்படுகின்றன. அதுபோல் 'எலுமிச்சை தெரபி' என்ற பெயரில் வீடியோ ஒன்று வைரலானது. பாஜக முன்னாள் 



எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்க‌த்தில் பகிர்ந்து, '' நானும் இதை முயற்சித்திருக்கிறேன். மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.


இந்நிலையில், ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் (42) நேற்று முன் தினம் வீடியோவில் கூறியவாறு தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தி காரணமாக ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...