கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி கல்வி தலைமை பொறுப்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இயக்குநரின் அதிகாரங்களில் அதிரடி மாற்றம்...

 பள்ளி கல்வி இயக்குநர் பணியிடத்தை பள்ளி கல்வி கமிஷனராக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 



பள்ளி கல்வி இயக்குநரின் பொறுப்புகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர்அல்லது முதன்மை செயலர் செயல்படுவர். அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குநர்கள் இயங்குவர். கடும் போட்டிஅவர்களில் பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது.



அரசு தரப்பில் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருந்தாலும், பள்ளி கல்வி இயக்குநரே அதிகாரம் மிக்கவராக இருப்பார். பெரும்பாலான நிர்வாக பணிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநரே முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு அரசின் செயலர் ஒப்புதல் வழங்குவார். அதனால், பள்ளி கல்வி இயக்குநர் பதவிக்கு வர, மற்ற இயக்குநர்களிடம் கடும் போட்டி உண்டு.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், பள்ளி கல்வி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பனின் அனைத்து அதிகாரங்களும், பள்ளி கல்வி கமிஷனர் என்ற பதவிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன. 



பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பில், டி.என்.பி.எஸ்.சி., செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.


சிலர் எதிர்ப்பு


இவர், டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். குரூப் தேர்வு முறைகேடுகளில் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டவர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில், 'டெட்' தேர்வு முறைகேடுகளையும் கண்டுபிடித்தவர்.இவரது நேரடி நிர்வாகத்தின் கீழ், பள்ளி கல்வியின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பணியாற்ற உள்ளனர். 



பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, தேர்வுத்துறை, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும், கமிஷனரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்.இந்த சீர்திருத்தம் ஒரு தரப்பில் வரவேற்பையும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் நிர்வாகத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மாற்றக் கூடாது என ஆசிரியர்கள் சங்கத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 



ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 200 ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதால், அதை மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.




பரிந்துரை கடிதம்


ஆசிரியர்கள் மற்றும்அதிகாரிகள், தங்களின் பணி நியமனம், பதவி உயர்வு, பென்ஷன், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு, பள்ளி கல்வி இயக்குநரை சந்தித்து, பரிந்துரை கடிதம் பெறுவர். இனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால், அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.





பள்ளிக் கல்வித் துறை பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்தபடவுள்ளது (ஆங்கில நாளிதழ் செய்தி)...

 School Education Dept to to undergo Major changes...



வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கியுள்ள சலுகை...



ஜியோ நிறுவனம் சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் டேட்டா நன்மையை தவிர பல்வேறு கூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

 

இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு  சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும். இப்போது அந்த இரண்டு சலுகைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

அதாவது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில், ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது..

 

அதன்படி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள முதல் சலுகை என்னவென்றால், இந்த கொரோனா பெருந்தொற்று காலம் நீடிக்கும் வரை ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

 

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது சலுகை என்னவென்றால், ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான திட்டம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜியோ அறிவித்துள்ள இரண்டாவது சலுகையைப் பற்றி விரிவாக கூறவேண்டும் என்றால், ரூ.75-க்கு ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது ஜியோ நிறுவனம். கண்டிப்பாக இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.


தமிழகத்தில் இன்று முதல் "இ - பதிவு" முறை கட்டாயம்...

 


புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு...

 மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து இயக்கங்களை நடத்தியது.



3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும், மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதிலிருந்து பின்வாங்குவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என எதிர்த்தனர். அதேபோன்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதையும் எதிர்த்தனர்.


தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.


திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, கரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.


இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தார். அமைச்சர்கள் நிலையில் கூட்டத்தை நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு பதிலேதும் அளிக்காமல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.


ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில், தற்போது மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்...

 புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.


கல்வித்துறை அமைச்சரை விட்டுவிட்டு, செயலாளருடன் மட்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டதால், கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.



புறக்கணிப்பு ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்


மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணிக்கிறது. கல்வி அமைச்சருடன் முதலில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்பதால் புறக்கணிப்பு. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம்.


- தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி





>>> புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி விளக்கம் (காணொளி)...


புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 



கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.



 புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...