கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல், அதற்கு சிகிச்சை அளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல், அதற்கு சிகிச்சை அளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும்"


அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்


தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய்...



கருப்பு பூஞ்சை தொற்று (Black Fungus Infection - Mucormycosis) என்பது என்ன? - மருத்துவர்கள் விளக்கம்...

 கருப்பு பூஞ்சை தொற்று (Black Fungus Infection - Mucormycosis) என்பது என்ன? - மருத்துவர்கள் விளக்கம்...




>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால், புது தகவல்கள், நிகழ்வுகள் வரும் வரை ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா குறித்து பேசமாட்டேன் - அமைச்சர் தியாகராஜன்...

 ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்களோ நிகழ்வுகளோ எழும் வரையில் அதைப் பற்றி தான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப் போவதில்லை என - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...















தமிழக முதலமைச்சர் அலுவலகத்திற்கு புதிதாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு...

Chief Minister's Office Proceedings No.942, Dated: 18-05-2021...



 தமிழக முதலமைச்சர் அலுவலகத்திற்கு புதிதாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு...


>>> Click here to Download Chief Minister's Office Proceedings No.942, Dated: 18-05-2021...



அதிகாரிகள் மீதான விதிமீறல் புகார் : பள்ளிக்கல்வி துறையில் விசாரணை (நாளிதழ் செய்தி)...

 


தமிழக பள்ளிக்கல்வி துறையில் நடந்துள்ள விதிமீறல்கள் குறித்து, அதிகாரிகள் மீது, 500 புகார்கள் வரை பதிவாகியுள்ளன. இவை தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.




முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. பள்ளிக்கல்வி துறையில் இயக்குனர் பணியிடத்தில், கமிஷனர் அந்தஸ்தில் நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள் என்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாற்றங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.



 



புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் நந்தகுமார், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, பள்ளிக்கல்வியில் பணியாற்றும் இயக்குனர்கள் முதல் டி.இ.ஓ.,க்கள் வரையில் உள்ள அதிகாரிகளின் மீதான, ஒழுங்கு நடவடிக்கை புகார்கள், பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளன. அரசின் இலவச திட்டங்களை சரியாக நிறைவேற்றாதது; நிதியை சரியாக கையாளாதது; உரிய அனுமதியின்றி, நீண்ட விடுப்பு எடுத்தது... 




தலைமை ஆசிரியர், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவி உயர்வில் விதிமீறல்; தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கி, இடமாறுதல் செய்தல் போன்ற பல பிரச்னைகள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஓய்வூதியம், பதவி உயர்வு, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைத்தல்; மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதியை பயன்படுத்தாமை என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.




இந்த பட்டியலில், பள்ளிக்கல்வி துறையின், பல்வேறு பிரிவுகளில் உயர் பொறுப்பில் உள்ள இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு, பல ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற உத்தரவு, புகார் மீதான குற்றச்சாட்டு பதிவு போன்றவை நிலுவையில் உள்ளன. இந்த காரணங்களால், பதவி உயர்வு, இடமாறுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 




இந்த பிரச்சனை, புதிய அரசின் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நிர்வாகத்தை சீரமைக்கும் முன், அதிகாரிகளின் மீது துறை ரீதியாக பதிவு செய்யப்பட்ட புகார்களை, முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைந்து விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக் கல்வி செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசிரியர் கூட்டணி முறையீடு...



 முதல்வர் அவர்களின்   தனிப்பிரிவு முதன்மைச் செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து முறையீடு



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் *டாக்டர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி  மாநிலத்தலைவர்     *திரு.சு. பக்தவச்சலம் அவர்கள்* சென்னை மாவட்ட தலைவர் *திரு. சாந்தகுமார் அவர்கள்* மாவட்ட செயலாளர் *திரு.சீனிவாசன் அவர்கள்*  உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு முதன்மைச்செயலாளர் *மதிப்புமிகு.முனைவர் உதயசந்திரன் அவர்களை* சந்தித்து  கோரிக்கைகளை முன்வைத்தனர்.


 *கோரிக்கைகள் விபரம்* 


 *1* . நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் *பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து* செய்து அதற்கு பதிலாக ஆணையர் என்ற பதவியை உருவாக்கி அதில் ஒரு *IAS அதிகாரியை* நியமித்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம். 


 *2* .புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்து விட்டு *மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு ஒரு ஆணையம்* அமைக்க வேண்டுகிறோம்


 *3* .மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு *ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை இந்த மாதமே* பிடித்தம் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.


 *4* கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த *ஜாக்டோ-ஜியோ* போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டும், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை எனவும் அதோடு *பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யவில்லை எனவும் கோரிக்கை* வைத்தோம்.அதனை ஏற்ற *மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளர் *மதிப்புமிகு. முனைவர். உதயசந்திரன் அவர்கள்* உடனடியாக பள்ளிக் கல்வி துறையிடம்  தொடர்புகொண்டு விசாரித்தார். அவைகளை உடனடியாக சரி செய்வதாக நம்மிடம் தெரிவித்துள்ளார்


5. 2011க்கு பிறகு பணியில் நியமனம் செய்யப்பட்டு  *TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு* பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உட்பட எந்த பலன்களும்  பெறாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு *புதிய அரசு* விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தகவல்


திண்டுக்கல் மு.முருகேசன்

மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

கல்வித்துறையில் ஊழல் தடுக்கும் புதிய சீர்திருத்த முறை (நாளிதழ் செய்தி)...



பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் குவிந்துள்ள அதிகாரங்களை, கமிஷனர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கி, மேற்கொள்ளப் பட்ட புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.




தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கமிஷனர் பணியிடம் உருவாக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு, ஆசிரியர்கள் சங்கத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பினாலும், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.குறிப்பாக, குரூப் 1 தேர்வெழுதி, மாவட்ட கல்வி அலுவலராக நேரடியாக நியமனம் செய்யப்படுபவரே, முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குனர்களாக பணிப்புரிந்த பின், இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.




இயக்குனருக்கு நிர்வாக ரீதியிலான அனுபவம் உள்ளதால் இப் பணியிடத்தின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்க கூடாது என்பதே, ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.ஆனால், இந்நடைமுறை தான், ஊழலுக்கு துணை நிற்பதாகவும், எவ்வித அதிரடி முடிவுகளும் எடுக்க முடியாத நிலைக்கு, சில நேர்மையான அதிகாரிகள் தள்ளப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.




பெயர் வெளியிட விரும்பாத முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில்,' மாவட்ட அளவில் முறையாக பணிபுரியாத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், சில சங்க உறுப்பினர்கள், மேலதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.கமிஷனர் பணியிடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. கமிஷனர் பதவியில் உள்ள அதிகாரி, இயக்குனர், இணை இயக்குனர்களுடன் மட்டுமல்லாமல், முதன்மை கல்வி அலுவலர்களுடனும், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இருந்தால் தான், பள்ளிக்கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும், பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட், முறையாக செல வழிக்கப்படும்' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

  உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold உலக கேரம் ச...