கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய தேசிய கல்வி கொள்கை, இயக்குனர் பதவி ஒழிப்பு - பள்ளிக் கல்வியில் ஜெயிப்பாரா உதயச்சந்திரன்?

 


புதிய தேசிய கல்வி கொள்கை, இயக்குனர் பதவி ஒழிப்பு - பள்ளிக் கல்வியில் ஜெயிப்பாரா உதயச்சந்திரன்? - குமுதம் ரிப்போர்ட்டர்...


புதிய தேசிய கல்வி கொள்கை ஆலோசனைக் கூட்ட புறக்கணிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ஒழிப்பு என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்துறை வட்டாரம் கலகலத்து நிற்கிறது. 




 இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இடம் பேசினோம் .




பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவி அதிகாரம் சார்ந்த பணி அல்ல. ஆசிரியர் அனுபவம், மாணவர்களின் மனநிலை ஆகிய அனுபவங்களைப் பெற்று பணியாற்றக்கூடிய பதவி கடந்த அதிமுக ஆட்சியில் ஐஏஎஸ் தலைமையிலான பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டது 




திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்துச் செய்யப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை நீக்கிவிட்டு பள்ளிக்கல்வி ஆணையரிடம் எல்லா அதிகாரங்களையும் தாரைவார்க்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் என்ற ஐஎஎஸ் இருக்கிறார்.




பிறகு எதற்கு தனியாக பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவாக்கி தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் இந்த விஷயம் ஆசிரியரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.




பொதுப் பள்ளிக்கான மாநில மேடை யின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு


2019ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவானது மே பள்ளிக்கல்வி ஆணையர் இயக்குனர் என்ற இரு அதிகார மையங்கள் வேண்டாம் என்றும் திமுக ஆட்சியில் ஆணையர் பதவி நீக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ஒழித்துவிட்டு அந்த இடத்துக்கு பள்ளிக்கல்வி ஆணையர் என்ற ஐஐஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கல்விப்பணியில் அனுபவம் அனுபவம் உள்ளவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகி உள்ளனர். எதிர்காலத்தில் வடநாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை தமிழக பள்ளிக்கல்வி ஆணையராக நியமிக்கும் போது அவருக்கு தமிழக பள்ளிகளில் தரம் மற்றும் ஆசிரியர்களிடம் நிலை தெரியாது. அப்போது அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.




உதயச்சந்திரன் ஐஏஎஸ்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்தவர். அதனால் பள்ளிக் கல்வித் துறையில் எல்லா விஷயங்களும் அவருக்கு அத்துப்படி.



 பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ஒழித்துவிட்டு பள்ளிகளில் கல்வி ஆணையராக மே 14ஆம் தேதி நந்தகுமார் பதவியேற்றார். பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் தற்போது தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார். 



>>> குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தி...



கொரோனா நோய் தடுப்பு பணியாற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு (நாளிதழ் செய்தி)...

 


செயலர் முதல் சி.இ.ஓ.க்கள் வரை - பள்ளிக் கல்வியில் விரைவில் மாறுதல்...

 


18 முதல் 44 வயதுடைய(அத்தியாவசிய பணியில் உள்ள நபர்களுக்கு) இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிகாட்டு நெறிமுறைகள் -- அரசாணை வெளியீடு...



 18 முதல் 44 வயதுடைய (அத்தியாவசிய பணியில் உள்ள நபர்களுக்கு) இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிகாட்டு நெறிமுறைகள் -- அரசாணை வெளியீடு...





முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



 தமிழ்நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 251, நாள்: 22-05-2021...




கொரோனா பற்றிய சில கேள்விகள் - பதில்கள்...




1. எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ?


இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் அறிகுறி என்று தோன்றியதோ அன்றிலிருந்து 14 நாட்கள் கணக்கு. கரோனா வைரஸ் உங்கள் உடலில் 10-12 நாட்கள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது. எனவே தான் 14 நாட்கள் கணக்கில் ஒருவர் மீண்டும் RT PCR பரிசோதனை செய்தால் கூடுமான வரையில் 12 ம் நாள் க்கு பிறகு Negative என்று வருகிறது. அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலில் இல்லை என்று அர்த்தம். 


2. எனக்கு Negative ன்னு லாம் வந்துடிச்சி.. 14 நாளுக்கு பிறகும் இருமல் மட்டும் போகவே மாட்டேங்குது அப்ப என் உடலில் வைரஸ் இருக்கு ன்னு அக்கம் பக்கம் விஞ்ஞானிகள் சொல்கிறார்களே உண்மையா ?

 

இல்லை. கரோனா வைரஸ் பாதிக்கும் முக்கிய உறுப்பு நுரையீரல்.. அது ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். அதாவது உங்கள் நுரையீரல் கரோனா வைரசால் பாதிக்கபடுவதால் நுரையீரல் Allergic Reaction க்கு உள்ளாகிறது. அந்த Allergy யினால் உருவாகுவது தான் இந்த இருமல். வைரஸ் விட்டு சென்ற பாதிப்பு நுரையீரலை Irritate செய்து கொண்டே இருக்கும் வரை இந்த இருமல் தொடரும். அது எவ்ளோ பகுதியை பாதித்துள்ளது என்பதை அறிய CT Scan உதவுகிறது. 14 நாட்களுக்கு பிறகு இருக்கும் இந்த நீடித்த இருமல் என்பது சிலருக்கு ஒரு மாதமோ இரண்டு மாதங்கள் வரை தொடரலாம். 


3. நான் தனியறையில் 14 நாட்கள் இருந்தேன். அந்த அறையை எங்கள் வீட்டு உறவினர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருந்து அடிச்சு சுத்தம் செய்யணும் ன்னு சொல்றாங்க ? 


அறிவியல் அறிவு கொண்டவர்களுக்கு தெரியும் வைரஸ் உயிர் வாழ ஓர் உயிருள்ள ஒம்புயிரி (Host) தேவை என்று. நம் உடலை விட்டு நீங்கிய பிறகு அது எங்கே போகும் ? அறையிலோ நாம் உடுத்திய உடையிலோ இருக்க அது என்ன முட்டை போடும் கொசுவா? அறையை சுத்தம் செய்வதில் தப்பு இல்லை.. ஆனா அங்க வைரஸ் இருக்கும் ன்னு நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.  


4. CRP Test ன்னு ஒன்னு எடுக்கிறாங்களே தனியார் மருத்துவமனையில் ? அது எதுக்கு.. அது தேவையா ? 


C-reactive Protein என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒருவகைப் புரதம். உடலில் தொற்றோ, அழற்சியோ ஏற்படும்போது அதற்கு எதிர்வினையாற்றி கல்லீரல், சி.ஆர்.பி புரதத்தை வெளியேற்றி ரத்தத்துக்குள் அனுப்பும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படியும் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் கரோனா நோயாளிக்கு C-Reactive Protein பரிசோதனை செய்ய சொல்லி இது வரை சொல்லவில்லை. ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் இதை Discharge செய்யும் முன் ஏன் இதை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லேசான மற்றும் மிதமான கரோனா நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை தேவையே இல்லை. இந்த பரிசோதனை எந்த அரசு மருத்துவமனையும் செய்வதில்லை. உங்கள் கையில் லட்சங்கள் இருந்தால் அல்லது மருத்துவமனைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற கரோனா க்கு தேவை இல்லாத பரிசோதனை (தீவிர தொற்றாளர்கள் தவிர) செய்து நேரத்தையும் பணத்தையும் கரைக்கலாம். 


5. நான் முதல் டோஸ் தடுப்புசி எடுத்து கொண்டேன். பிறகு எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. எப்போது இரண்டவது டோஸ் எடுக்க வேண்டும் ? 


அரசின் வழிகாட்டுதல் படி மூன்று மாதங்களுக்கு பிறகு எடுத்துகொள்ளலாம். 


6. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு விட்டேன். எப்போது தடுப்பூசி போட வேண்டும்? 


பொதுவாக கரோனா தொற்று ஏற்பட்டு 21 நாட்களுக்கு பிறகு உங்கள் உடலில் IgG எனப்படும் நோய் எதிர்ப்பான்கள் உருவாகி விடும். ஆனால் நாளடைவில் இது காணாமல் போகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அந்த கால அளவு 6-9 மாதங்கள் வரை இருக்கிறதாம். எனவே மூன்று மாதங்களுக்கு பிறகு நீங்கள் எபோது வேண்டுமானாலும் தடுப்பூசி எடுத்து கொள்ளலாம். 


7. நான் இப்போது நெகட்டிவ். என்னால் இன்னொருவருக்கு இனிமேல் கரோனா வைரஸ் பரவுமா ? 


நீங்கள் நெகட்டிவ் என்றாலே உங்கள் உடலில் கரோனா வைரஸ் உடலில் இல்லை என்று அர்த்தம். பிறகு எப்படி உங்கள் மூலம் பிறருக்கு பரவும் ??


8. நான் கரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் என்னை சமூகம் ஒதுக்கி வைத்தே பார்க்கிறது ? 


இயல்பு தான். அறிவியல் பார்வை இல்லாத நபர்கள் அறிவியல் குருடு என்றே கருதப்படுவார்கள். அவர்களுக்கு சாக்கடையும் ஒன்றாகத் தான் தெரியும். ஓடும் சுத்தமான பால் போன்ற ஆறும் ஒன்றாகத் தான் தெரியும். “போவியா” என்று நகர்ந்து கொண்டே இருங்கள் 


9. ஆவிபிடித்தல் கரோனவை ஒழிக்குமா ? 


கரோனா வைரஸ் க்கு வாய் இருந்தால் கெக்க பிக்கே என்று சிரித்து உருண்டு விடும். ஆவி பிடித்தல் உங்கள் மூச்சு குழாயை சுத்தம் வேண்டுமானால் செய்யலாம். கரோனா ஒழிப்பிற்கு சல்லி பைசா க்கு தேறாது 


10. எப்போது மருத்துவமனை நாட வேண்டும் ? 


Pulse Oximeter ல் SpO2 94 or 92 க்கு கீழ் உங்கள் ஆக்சிஜன் லெவல் இருந்தால் மட்டுமே மருத்துவமனையை நாட வேண்டும். தேவை இல்லாமல் தீவிர பாதிப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை நீங்கள் ஆக்கிரமித்து கொள்ளாதீர்கள் 


11. D-Dimer Test லாம் கரோனா நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் எடுக்கிறார்களே அவசியமா ? 


ரத்த உறைதலுக்கான பரிசோதனை இது. தீவிரமான நோய் தொற்று ஏற்பட்டால் மட்டுமே இது போன்ற பரிசோதனை உதவும். எல்லோருக்கும் இந்த பரிசோதனை அவசியமே இல்லை. 


12. Procalcitonin, Ferritin, IL-6, HRCT இந்த பரிசோதனைகள் எல்லாம் அவசியமா ? 


அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்ய சொல்லி WHO வோ அல்லது மத்திய அரசோ சொல்லவில்லை. தீவிர நோய் தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு மேலும் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க வேண்டுமானால் இந்த பரிசோதனைகள் ஆய்வு கை கொடுக்கலாம். ஆனால் இன்று தனியார் மருத்துவமனைகள் இதை எல்லாம் எடுத்து கரோனா நோயாளியை சக்கையாக பிழிஞ்சு தள்ளி செல்லும் போது ATM Card ல் பணத்துடன் சென்றால் திரும்ப வரும் போது ATM Card மட்டும் தான் மிஞ்சும். பணம் இருக்காது.. இந்த பரிசோதனையின் அறிவியல் பின்புலம் பற்றி நோயாளிக்கு தெரியாது. அந்த நோயாளிக்கு தேவையே இருக்காது அந்த பரிசோதனைகள். இருந்தும் Bill எகிற வைத்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.. அவசியம் என்றால் மட்டுமே இந்த பரிசோதனைக்கு நாம் ஒப்பு கொள்ள வேண்டும் 


13. இது வரை உலக அளவில் கரோனாக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் என்ன ? 


சில நூறு ரூபாய்களே செலவு வைக்க கூடிய Paracetamol ம் Antibiotics ம் மட்டுமே 


14. அப்ப  Dexamethosone/Remdesivir லாம் ? 


Only Critical Patients. தீவிர நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இந்த மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசு வழிகாட்டி இருக்கிறது. அதுவும் இந்த மருந்து குணபடுத்தும் என்று எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லை. எனவே தேவை இல்லாமல் எல்லாரும் எடுத்து உள்ள உடலுக்கும் உலை வைத்து கொள்ளாதீர்கள். 


15. இறுதியாக ? 


கரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு தொடர்ந்து இருமல் இருக்கும். பயப்பட வேண்டாம். காரணம் நுரையீரல் அழற்ச்சி. (Lung Inflammation). ஒரு விபத்தில் கை கால் எலும்பு உடைவதும் கரோனாவால் நுரையீரல் பாதிகப்படுவதும் ஒன்று தான். ஒன்று சேர கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் அது வரை ஓடுவது, பளு தூக்குவது, மாடி படி ஏறுவது,AC யில் இருப்பது என நுரையீரலுக்கு அதிக பளு கொடுத்தால் சீக்கிரம் நுரையீரல் குணமடைய வாய்ப்பில்லை. நல்ல ஓய்வு தேவை. அதே நேரத்தில் இருமலை தவிர்க்க Chlorpheniramine, Dextromethorphan கொண்ட Syrup உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம் என மருத்துவ உலகம் பரிந்துரை செய்கிறது.


(வாட்ஸ் அப் பகிர்வு)

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர் உத்தரவு...


>>> திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் ந.க. எண்: 3546/ 2019/ ஈ4, நாள்: 19-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...