>>> கொரோனா தடுப்பூசிகள் - ஒரு ஒப்பீடு ( COVID 19 - Vaccines Comparison) - PDF FILE...
கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது.
GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.
குவிந்த வழக்குகள்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.
இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.
பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குளறுபடியான வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை; போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது. அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கலைப்பதே சரி
உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது. அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: தினமலர்
கொரோனா மருத்துவத்துக்கு கூடுதல் கட்டணம் - மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 6 குழு அமைப்பு...
தமிழக அரசுக்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.
6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
ஆயிரம் கோவாக்சின் டோஸ்களும் வந்துள்ளன.
தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசி விநியோகம்.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து மேலும் 42 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் திறக்கப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மேஷம்
ஜூன் 02, 2021
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 02, 2021
சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களில் இருந்து தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் வகையில் சிறு அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோகிணி : தெளிவு உண்டாகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 02, 2021
உத்தியோகம் தொடர்பான உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அனுபவம் ஏற்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------
கடகம்
ஜூன் 02, 2021
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வளர்ச்சி தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தகுந்த ஆலோசனைகளை பெறவும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : ஆலோசனைகளை கேட்கவும்.
ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 02, 2021
வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் மற்றும் பழைய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த உதவிகளை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 02, 2021
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : தடைகள் நீங்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 02, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்களும், சிறு தடைகளும் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த தனம் தொடர்பான வரவுகள் சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சகம்
ஜூன் 02, 2021
வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்களும், அது தொடர்பான ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை அணிந்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
தனுசு
ஜூன் 02, 2021
மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும். வங்கி தொடர்பான பணிகளில் கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 02, 2021
குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களின் மூலம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். மனதில் இருக்கும் கருத்துக்களை முன் வைக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களது எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 02, 2021
எந்தவொரு செயலிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்படும். உறவினர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பதற்றமின்றி செயல்படுவது காரிய வெற்றிக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து அதை சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 02, 2021
செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வதன் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளை குறைக்க இயலும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : சோர்வு உண்டாகும்.
---------------------------------------
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்...
💢முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை கூட்டம்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...