கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா தடுப்பு: உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்த தடுப்பூசிகள் என்னென்ன?

 


கொரோனா தடுப்பு: உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்த தடுப்பூசிகள் என்னென்ன?


உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.


உலகம் முழுவதும் இதுவரை 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


கரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.


அவற்றின் பெயர், பயன்படுத்தப்படும் நாடுகளின் விவரம்:


பைஸர் & பயோடெக்

பைஸர் கரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்ட்)

உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஜான்சன் & ஜான்சன்

சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மாடர்னா

கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.


சினோபார்ம்

சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.


இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.

இன்றைய (03-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 03, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : ஆதரவான நாள்.


பரணி : சேமிப்புகள் மேம்படும்.


கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 03, 2021



நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : இழுபறிகள் நீங்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 03, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 03, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.


பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 03, 2021



மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரம் : அனுசரித்து செல்லவும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 03, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : கலகலப்பான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 03, 2021



புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.


சுவாதி : உத்வேகமான நாள்.


விசாகம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 03, 2021



தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் பொழுதுகளை செலவு செய்து மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



விசாகம் : நெருக்கடிகள் குறையும்.


அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூன் 03, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : சிந்தனைகள் தோன்றும்.


பூராடம் : அறிமுகம் ஏற்படும்.


உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 03, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : கவனம் வேண்டும்.


திருவோணம் : இழுபறிகள் நீங்கும்.


அவிட்டம் : விருப்பங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 03, 2021



அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


சதயம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 03, 2021



புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகளும், காலதாமதமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


2021-22 கல்வி ஆண்டுக்கான -மெட்ரிக் பிந்தைய (POST-MATRIC )கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு...

 


2021-22 கல்வி ஆண்டுக்கான -மெட்ரிக் பிந்தைய (POST-MATRIC )கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கொரோனா மருந்தை எங்கு வாங்கலாம்..? யார் பயன்படுத்தலாம்...?

 


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் '2-டிஜி' (டி டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது.



மத்திய பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இம்மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.




2-டிஜி மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கடந்த மே 17ல் வெளியிட்டனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.




கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள 2டிஜி கரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 2 முதல் 2.5 நாட்களில் குணமடையலாம். இதன் மூலம் ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம்  வரை குறைக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.




டிஆர்டிஒ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 டிஜி மருந்தின் விலை  ரூ.990 க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனைகள், மத்திய மாநில அரசுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. இந்நிலையில் இந்த மருந்து பயன்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது.




அதன் விவரம் வருமாறு:-


* டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருந்தை மருத்துவர்கள் மிதமான அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை பரிந்துரைக்கலாம்.




* கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால், அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.




* கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது.




* இந்த மருந்தை எடுத்துக்கொள்ள விரும்பும் நோயாளிகள் தங்களின் உதவியாளர்கள் வாயிலாக மருத்துவமனையை டாக்டர் ரெட்டிஸ் லேபை அணுக வலியுறுத்த வேண்டும். 2DG@drreddys.com இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்தல் சார்பான அரசாணை - With the Endorsement of Directorate of Elementary Education...

 


கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்தல் சார்பான அரசாணை - With the Endorsement of Directorate of Elementary Education...



>>> அரசாணை (நிலை) எண்: 52, நாள்; 27-05-2021 & தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 06124/ அ1/2020, நாள்:31-05-2021...


12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...



 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/ இ1/ 2020, நாள்: 02-06-2021...




கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 9 பேர் குழுவில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உறுப்பினராக செயல்படுவர்...

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்...



9 பேர் கொண்ட குழுவில் தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்  உறுப்பினராக செயல்படுவர்...



>>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 14802/ 2020/ பரா4-1, நாள்: 31-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...