கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிப்பது எப்படி? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...

 








இன்றைய (07-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 07, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 07, 2021



உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பான எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 07, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றியும் புரிதல் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.


திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.


புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 07, 2021



குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளும், தனவரவுகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : லாபம் மேம்படும்.


ஆயில்யம் : அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 07, 2021



தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 07, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : பொறுமை வேண்டும்.


அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 07, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களால் உங்களின் இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 07, 2021



தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூன் 07, 2021



மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : பரிசுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 07, 2021



தொழில் சார்ந்த கருவிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : லாபம் அதிகரிக்கும்.


திருவோணம் : ஒற்றுமை ஏற்படும்.


அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 07, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் மன அமைதி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : மாற்றமான நாள்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : மன அமைதி உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 07, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆதரவின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். புதிய செயல்திட்டங்களை அமைத்து அதை செயல்வடிவில் மாற்றுவதற்கான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.


ரேவதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


State EMIS Team தகவல் வரும் வரை Students Promotion / Transfer பணிகளை மேற்கொள்ள வேண்டாம்...



 கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது மே 31ஆம் தேதி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளார்கள்.


மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்பிற்கு மாற்றும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்ட செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தற்போது EMIS இல் ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களில் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் மாற்றுச்சான்றிதழ் பெற சில தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும்,  கல்வி இயக்ககத்தின் முறையான அறிவிப்பு வரும் வரை எந்தவித செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Very important information from state EMIS Team to all HMs,

Dear All, please do not carry out any student transfer or promotion activity for now. 

Kindly wait for inputs. We will update you this week.

Thank you...


EMIS Team தகவல் வரும் வரை Students Promotion / Students TC Generate பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...


ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் ஊதியம், ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் - ஆர்.பி.ஐ...

 ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் ஊதியம், ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் - RBI...



ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு...

 


கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு.


கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.


கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்.


நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு.


7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.


மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 3557 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-07-2021 வரை நீட்டிப்பு...

 மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 3557 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-07-2021 வரை நீட்டிப்பு...



>>> சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு & விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிய...



12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு (AFTER +2 - Career Guidance Booklet for 12th Standard Students : +2 க்கு பிறகு என்ன படிப்புகள் படிக்கலாம், நுழைவுத்தேர்வு எழுதி சேர வேண்டிய படிப்புகள் எவை? 77 Pages PDF)...

 


AFTER +2 - Career Guidance Booklet for 12th Standard Students : +2 க்கு பிறகு என்ன படிப்புகள் படிக்கலாம், நுழைவுத்தேர்வு எழுதி சேர வேண்டிய படிப்புகள் எவை? 77 Pages PDF...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...