கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் புகார் இருந்தால் தெரிவிக்கலாம்: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு...

 


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டு இடங்களில் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு LKG அல்லது முதலாம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.


அதற்காக 2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைமுறைகள் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிப்பது அவசியம்.


பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.


இந்நிலையில் இந்த நடைமுறையில் ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’இது சார்ந்து பெற்றோரின் புகார் அல்லது ஆலோசனைகளை வழங்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் அல்லது தொடக்கக் கல்வி இயக்குநரிடம் தெரிவிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.1000 , பெற்றோருக்கு ரூ.10,000 - அரசுப் பள்ளி வித்தியாச முயற்சி...

 பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி, மாணவர்களின் சேர்க்கையை ஆசிரியர்கள் அதிகப்படுத்தி வருகின்றனர்.



தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், 2021–2022 புதிய கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர் தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து, புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் பரிசுகளும், சலுகைகளும் வழங்கி அரசுப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.


அதற்காக இந்தக் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.


அதன்படி சேர்க்கை தொடங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் தொடங்கிய கணக்குப் புத்தகத்தைப் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.


இதுகுறித்துத் தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேச பக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாகத் தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் கூறிய கருத்துகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளன.


தற்போது பலரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அவர்களின் கவனத்தை அரசுப் பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும்.


மேலும், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலிடம் பெறும் நபருக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் நபருக்கு ரூ.2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.


தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு, 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்விச் செலவு ஆகியவையும் வழங்கப்பட உள்ளன'' என்று தலைமையாசிரியர் சரவணன் தெரிவித்தார்.


8 அல்லது 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் அரசு, தனியார் ITI-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்...

 


2021-22ஆம் கல்வி ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இதற்கு 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்  மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.


இம்மையங்களின் பட்டியல் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர், 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடவும்.


விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com


கூடுதல் விவரங்களுக்கு: 9499055612 / வாட்ஸ்அப் எண் 9499055618


ஆபத்தான 'ஆன்லைன்' வகுப்பு - மரம் ஏறி படிக்கும் மாணவர்கள்...


 மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர்.


நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் மொபைல்போன் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., துாரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.


இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆலமரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இன்று வரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான காணொளிகள் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள PDF Files...

 



🎥 KALVI TV VIDEOS 🎥

  

   அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, இன்றுவரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான காணொளிகள் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் அந்த வகுப்பிற்கான 3 பருவத்திற்குண்டான வீடியோ பாட தொகுப்பு வரும். அதில் தேவையான பாடத் தலைப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.


தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...


தொகுப்பு:

G.கார்த்திகேயன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அழிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். 9841049322.


>>> இரண்டாம் வகுப்பு காணொளிகள்...


>>> மூன்றாம் வகுப்பு காணொளிகள்...


>>> நான்காம் வகுப்பு காணொளிகள்...


>>> ஐந்தாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஆறாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஏழாம் வகுப்பு காணொளிகள்...


>>> எட்டாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஒன்பதாம் வகுப்பு காணொளிகள்...


>>> பத்தாம் வகுப்பு காணொளிகள்...



2021-22 ஆம் கல்வியாண்டு - 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம் (Syllabus) வெளியீடு - தஞ்சாவூர் வருவாய் மாவட்டப் பள்ளிகளுக்கு...

 


2021-22 ஆம் கல்வியாண்டு - 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம் வெளியீடு - தஞ்சாவூர் வருவாய் மாவட்டப் பள்ளிகளுக்கு...


>>> 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம்...


முதுகலை ஆசிரியர் - கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை வருகைப் பதிவேட்டில் எந்த முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் - பள்ளிக்கல்வி ஆணையரகம், பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் ஓ.மு.எண்: 21033, 28011/வி1/இ2/2021, நாள்: 29-06-2021......



 முதுகலை ஆசிரியர் - கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை வருகைப் பதிவேட்டில் எந்த முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில்...

Thanks to Mr.N.Kannan Sir, PGT, Thanjavur.


>>> பள்ளிக்கல்வி ஆணையரகம், பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் ஓ.மு.எண்: 21033, 28011/வி1/இ2/2021, நாள்: 29-06-2021...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...