கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...

 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...



இந்தியா முழுவதும் அனைத்து ஊராட்சிகளின் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், Cellphone number, Email ID - புகைப்படம் விபரம் அறிய வலைதள முகவரி...

 


All state, All District, All Block, All Panchayat in India You can view The President & Panchayat clerk - Name, Photo,  Cell No, Email ID - use this fallowing link உங்கள் ஊராட்சியின் ஊராட்சி தலைவர், ஊராட்சி  செயலாளர்,  Cellphone number, Email ID - புகைப்படம்  விபரம் அறிய click on Below link 


>>> Click here...


வருமான வரி புதிய வலைதளம்: தொழில்நுட்பக் கோளாறுகள் நீடிப்பு...



 வருமான வரி கணக்கு தாக்கல்‌ செய்வதற்கான புதிய வலைத்தளம்‌ தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும்‌, அதில்‌ உள்ள தொழில்நுட்பக்‌ கோளாறு இன்னும்‌ சரி செய்யப்படவில்லை. இதனால்‌, அந்த வலைதளத்தைப்‌ பயன்டுத்துவதில்‌ சிரமம்‌ ஏற்பட்டுள்ளதாக, பட்டய கணக்காளர்கள்‌ கூறுகிறார்கள்‌.


வருமான வரி கணக்கு தாக்கல்‌ செய்வதற்கான புதிய வலைதளம்‌ கடந்த ஜூன்‌ 7-ஆம்‌ தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அதில்‌, சில தொழில்நுட்பக்‌ கோளாறுகள்‌ இருப்பது தெரியவந்ததால்‌, அதை வடிவமைத்த இன்‌ஃபோசிஸ்‌ நிறுவன நிர்வாகிகளுடன்‌ மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ கடந்த ஜூன்‌ 22-ஆம்‌ தேதி ஆலோசனை நடத்தினர்‌. வலைதளத்தில்‌ ஏற்பட்டுள்ள பிரச்னை ஒரு வாரத்தில்‌ சரிசெய்யப்படும்‌ என்று இன்‌ஃபோசிஸ்‌ நிறுவனம்‌ பதிலளித்திருந்தது. ஆனால்‌, இரண்டு வாரங்களாகியும்‌ தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்படவில்லை என்று பட்டய கணக்காளர்கள்‌ கூறுகிறார்கள்‌.


புதிய வலைதளத்தில்‌ முந்தைய ஆண்டுகளுக்கான வரி கணக்கை தாக்கல்‌ செய்ய முடியவில்லை; நிலுவையில்‌ உள்ள வரியைச்‌ செலுத்தி, வரி மற்றும்‌ அபராதம்‌ செலுத்துவதில்‌ இருந்து விலக்கு பெறும்‌ 'விவாத்‌ சே விஸ்வாஸ்‌' திட்டத்துக்கான படிவம்‌-3 வலைதளப்‌ பக்கத்தில்‌ காணப்படவில்லை. என்று அவர்கள்‌ கூறுகிறார்கள்‌.


இதுகுறித்து பிடிஓ இந்தியா பார்ட்னர்‌ எனும்‌ வரி ஆலோசனைக்‌ குழுமத்தைச்‌ சேர்ந்த அமித்‌ கனத்ரா கூறுகையில்‌, 'இன்‌ஃபோசிஸ்‌ நிர்வாகிகளுடன்‌ நிதியமைச்சர்‌ கடந்த 22-ஆம்‌ தேதி நடத்திய ஆலோசனைக்‌ கூட்டத்துக்குப்‌ பிறகு அனைத்து பிரச்னைகளும்‌ விரைவில்‌ சரியாகிவிடும்‌ என கருதினோம்‌. ஆனால்‌ தொழில்நுட்ப ரீதியில்‌ சில பிரச்னைகள்‌ தொடர்கின்றன என்றார்‌.


வரி செலுத்துவோருக்குப்‌ பல வசதிகளுடன்‌ புதிய வலைதளம்‌ வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம்‌ திட்டமிட்டது. இந்தப்‌ பணி இன்‌ஃபோசிஸ்‌ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. வழக்கமாக, வருமான வரி கணக்கைத்‌ தாக்கல்‌ செய்தால்‌, அதைப்‌ பரிசீலனை செய்து தொகையை வழங்குவதற்கு குறைந்தபட்சம்‌ 63 நாள்கள்‌ ஆகும்‌. அதை ஒரு நாளாகக்‌ குறைக்கும்‌ வகையில்‌ புதிய வலைதளம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளி மாணவர்களைத் தக்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி...

 அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைத் தொகுதி உறுப்பினரும், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சந்தித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ”கடந்த ஒரு வாரத்துக்கு முன் எடுத்த கணக்கின்படி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3.40 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.



நிகழாண்டு அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்பதும், அவர்களை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி ஆசிரியர்களைப் போதிய எண்ணிக்கையில் நியமிப்பது தொடர்பாகவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம். அதேவேளையில், 2020, நவம்பர் 9-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கும், 2021, ஜனவரி 4-ம் தேதி முதல் ஜேஇஇ தேர்வுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


தமிழ்நாட்டில் 17 சதவீதமாக உள்ள பள்ளி இடைநிற்றலை 5 சதவீதமாகக் குறைப்பதுதான் தமிழக அரசின் இலக்கு. பள்ளி இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்துக் கணக்கெடுப்பு நடத்த, துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2013, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய பலர் வேலைக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாகத் துறை உயர் அலுவலர்களுடன் ஏற்கெனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...



 தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு ரத்து:

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, நடைமுறையில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்.

மேலும் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மக்களிடையே நீட் தேர்வு பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாக உள்ளது என பலரும் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்து 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்படும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் நாங்கள் திட்டவட்டமாக உள்ளோம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்புகளும் முறையீடுகளும்...



*CPS ஒழிப்பு இயக்கம்* 

* சந்திப்புகளும் முறையீடுகளும்:*


* (13.07.2021) அன்று தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்கண்ட உயர் அலுவலர்களைச் சந்தித்து CPS திட்டத்தை முழுமையாக இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.*



*1. தலைமைச் செயலாளரின் தனி செயலாளர்*


 *2.கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) தனி செயலாளர்,* 


*3. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தனி செயலாளர்*


 *4.திரு. உமாநாத் IAS, முதலமைச்சரின் செயலாளரின் தனி செயலாளர்*



*5.திரு.பிரசாந்த் மு. வடநேரே IAS,*

*நிதித்துறை கூடுதல் செயலாளரின் தனி செயலாளர்*


 *6.முதலமைச்சர் துணைச் செயலாளர்,*


*7. ரீட்டா ஹரிஷ் தக்கர்,IAS,* *நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்*


*8. திரு. து.ஸ்ரீதர், நிதித்துறை இணை செயலாளர்.*


*CPS திட்டத்தை ரத்து செய்யும்  இடத்தில் அதிகாரிகள் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும் தெரிவித்தனர்.*


 *சிபிஎஸ்  ஒழிப்பு இயக்க கோரிக்கையை உரிய வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.*


 *மேலும், நிதி அமைச்சரிடம் இதுகுறித்து பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.*


_______________________


*மு.செல்வக்குமார்*

*சு.ஜெயராஜராஜேஸ்வரன்*

*பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*

*சி. ஜான் லியோ சகாயராஜ்.*

*மாநில நிதிக் காப்பாளர்.*

பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்...



 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்ற ஜாக்டோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் வருகை

கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பீடுகள் உள்ளிட்ட சில நிர்வாகப் பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.


இதை தொடர்ந்து அடுத்த 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி, 100% ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


 கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.


சுற்றறிக்கை

தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.



சி.இ.ஓ.,க்கள் மீது புகார்

 'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதை தொடர்ந்து இந்த உத்தரவை ஆணையர் அவர்களின் உத்தரவின் கீழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜாக்டோ நிர்வாக அதிகாரிகள், அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு செல்லலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...