கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரியலூர் to ரஷ்யா - தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அரசுப் பள்ளி மாணவிகள் - விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வு...

 


அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர், ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்களது அறிவியல் ஆர்வத்தை புரிந்து கொண்ட பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான போட்டிக்கு இவர்களை விண்ணப்பிக்க சொல்லியுள்ளார். 2000 பேர் பங்கேற்றுள்ள இப்போட்டி 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக நடந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த ரகசியா மற்றும் வேதாஶ்ரீ தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையறிந்த பள்ளிகல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னைக்கு அழைத்து அண்மையில் விருது வழங்கி பாரட்டு தெரிவித்து உள்ளார்.


இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி மாணவிகளிடம் கேட்டபோது இது தங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாகவும், நாசாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், அதற்கான முதற்படியாக இதை பயன்படுத்தி கொள்வோம் என தெரிவித்தனர். இந்த அரசு பள்ளி மாணவிகளால் அரியலூர் மாவட்டமே பெருமையடைந்துள்ளது.

இன்றைய (19-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 19, 2021



வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.


பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 19, 2021



எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : மேன்மை உண்டாகும்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 19, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.


புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 19, 2021



ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : ஆதாயமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 19, 2021



தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், கற்பனைகளும் உண்டாகும். மனை தொடர்பான காரியங்களில் லாபம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : லாபம் ஏற்படும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 19, 2021



பயணங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் லாபமடைவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : ஆதாயமான நாள்.


அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.


சித்திரை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 19, 2021



உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 19, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தர்க்க விவாதங்களின் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கேட்டை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 19, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் பொருள் ஆதாயம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப நபர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : ஆதாயம் ஏற்படும்.


பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திராடம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 19, 2021



பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை அளிக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



உத்திராடம் : தைரியமான நாள்.


திருவோணம் : திருப்தி உண்டாகும்.


அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 19, 2021



விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.


சதயம் : இன்னல்கள் குறையும்.


பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 19, 2021



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------


கல்வி தொலைக்காட்சியில் (Kalvi TV) பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை - 19.07.2021 முதல் 23.07.2021 வரை...



KALVI TV CUE SHEET FROM 19-07-2021 to 23-07-2021...

 >>>  தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை - 19.07.2021 முதல் 23.07.2021 வரை...


M.Phil., படிப்புக்கு கட்டணமில்லை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு...

 கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பு, இலவச விடுதி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு...


*உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசத் தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

*''தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது. 2021- 22ஆம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது.


*மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தேர்வுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


*தேர்வு செய்யப்பெறும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.


*விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


*விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 16.08.2021


*நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும்.


*கல்விக் கட்டணம்: கிடையாது.


*மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.


*மேலும் விவரங்களுக்கு:


இயக்குநர்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி, சென்னை - 113,


*தொலைபேசி : 044-2254 2992.


*சேர்க்கை தொடர்பான விதிமுறைகள்/ தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’’.



அரசு விதிகளை மீறி பள்ளியை திறந்து பாடம் நடத்திய ஆசிரியைகள் மீது, மாவட்டக் கல்வி அலுவலர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு...

 சின்னாளபட்டி அருகே அ.குரும்பபட்டியில் அரசு விதிகளை மீறி பள்ளியை திறந்து பாடம் நடத்திய ஆசிரியைகள் மீது, மாவட்ட கல்வி அலுவலர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு...






முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் 4 மணி நேரம் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை...

 


பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக சிக்கல்கள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் நான்கு மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி துறை நிர்வாக பணிகள் , மாணவர் சேர்க்கை , பாடப்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினர்.


வீடியோ கான்பரன்ஸ் முறையில் பகல் , 1:45 மணிக்கு துவங்கிய கூட்டம் , நான்கு மணி நேரம் நடந்தது . பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் , திட்ட அதிகாரி சுதன் , இயக்குநர்கள் கண்ணப்பன், கருப்ப சாமி , உஷாராணி , ராமேஸ்வர முருகன் , பழனிசாமி மற்றும் இணை இயக்குநர்கள் , சென்னையில் உள்ள டி.பி.ஐ. , வளாகத்தில் , அமைச்சருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.


 பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா , தலைமை செயலகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றார் . ‘ கொரோனா சூழலை கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு , ஆன்லைன் மற்றும் கல்வி , ‘ டிவி வழியே பாடங்களை நடத்துவதில் , முழு கவனம் செலுத்த வேண்டும். 


அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என , அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார். நிர்வாக பணிகளை , EMIS ‘ என்ற டிஜிட்டல் தளம் வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை , நிதித்துறையின் மேலாண்மை தளம் வழியே மேற்கொள்ள வேண்டும். இனி நேரடியான நிதி பரிவர்த்தனைகள் கூடாது. நிர்வாக பணிகளில் , எந்த சிக்கலும் இல்லாமல் , அரசின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் ‘ என , முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.



ஏழு ஆண்டுகளாக நடக்காத பணி மாறுதல் கலந்தாய்வு. இந்த ஆண்டு நடத்த BRTEs வலியுறுத்தல்...

 ஏழு ஆண்டுகளாக நடக்காத பணி மாறுதல் கலந்தாய்வு. இந்த ஆண்டு நடத்த ஆசிரியப் பயிற்றுனர்கள் வலியுறுத்தல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...