கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிச்சநல்லூர் குறித்த அமைச்சர் அவர்களின் நாடாளுமன்ற பதில் - குறித்த கனிமொழி M.P. அவர்களின் Twitter பதிவு...

 ஆதிச்சநல்லூர் குறித்த அமைச்சர் அவர்களின் நாடாளுமன்ற பதில் - குறித்த கனிமொழி M.P. அவர்களின் Twitter பதிவு: 

Yesterday in parliament I was astonished by the reply I  got to an unstarred question by minister @kishanreddybjp You have mentioned about walls and toilets being built around the heritage site, drinking water, and solar-powered lights being installed. But unfortunately, we are not able to see or find any of them?

And we would prefer that you build the museum first.


நேற்று பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய ஒரு கேள்விக்கு கிடைத்த மந்திரி கிஷன்ரெட்டி அவர்களின் பதிலைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது பதிலின் படி "ஆதிச்சநல்லூர் பாரம்பரிய இடத்தை சுற்றி சுவர்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன, குடிநீர் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன."  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றில் எதையும் எங்களால் பார்க்கவோ கண்டுபிடிக்கவோ முடியவில்லை? நீங்கள் முதலில் அருங்காட்சியகத்தை உருவாக்குவீர்கள் என விரும்புகிறோம்.





மாணவர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் -பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 மாணவர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் -பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...



கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் புதிய அட்டவணை - Single page...



 >>> கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் புதிய அட்டவணை - Single Page...




அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58? - தமிழக அரசு பரிசீலனை...

 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58? - தமிழக அரசு பரிசீலனை...









ஜூலை 21 - நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969)...

 


ஜூலை 21,

வரலாற்றில் இன்று.


நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969).


வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் ரஷியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்கலனில் பூமியை வலம் வருவது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்கிற வகையில் போட்டியிட்டு சாதனைகள் புரிந்துவந்தனர்.


1961ஆம் ஆண்டு சோவியத் நாட்டை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது. அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே வாரத்தில் ஆலன் ஷப்பெர்ட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டது அமெரிக்கா.


அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1962ஆம் ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். ‘பத்தாண்டிற்குள் நாங்கள் நிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்றார். இதற்கு அப்பல்லோ திட்டம் என்று பெயரிடப்பட்டது.


நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பெற்றோருக்கும், நிலாவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களுக்கும், இது வியப்பாக இருந்தது. நிலாவில் மனிதனால் கால்பதிக்க முடியுமா? என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டனர்.


ஆனால், ஏழே ஆண்டுகளில், நாசா விண்வெளி நிலையம் மனிதனை முதன் முதலில் நிலாவில் கால் பதிக்க வைத்தது உலகத்தையே அதிசயிக்க வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதை காண்பதற்கு கொடுத்து வைக்காமல், அதற்கு முன்பே அதிபர் கென்னடி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


முன்னதாக ஜான் கென்னடியின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிக் கழகம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு செயல் வடிவம் தரத் தொடங்கியது. முதல் இரண்டு ஆண்டுகள், நிலாவில் இறங்குவதற்கு சரியான இடம், குறிப்பாக பள்ளம், மேடுகளற்ற சமதளம், போதுமான சூரிய ஒளி என்று பல காரணிகளைக் கொண்டு தேடினர்.


1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அப்பல்லோ-11 புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து காலை 9.32 மணிக்கு நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைகேல் காலின்ஸ் ஆகியோருடன் விண்கலம் வெற்றிகரமாகக் கிளம்பியது. பன்னிரெண்டு நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டது.


பிறகு, பயணம் மேலும் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் கொலம்பியா விண்கப்பலில் இருந்து பிரிந்து ‘கழுகு’ என்கிற விண்கலத்தின் மூலம் நிலவினை நோக்கி சென்றனர் (அவர்கள் திரும்பி வரும்வரை கொலம்பியா விண்கப்பல் மைகேல் காலின்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது).


நிலவினை நோக்கி செல்லும் இந்த இறுதிக்கட்டப் பயணம் இருப்பதிலேயே மிகச் சிரமம் கொண்டதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் அமைந்தது. விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள், எரிபொருள் பற்றாக்குறையென ஒவ்வொரு நொடியும் ஆபத்து நிறைந்திருந்தது. நிலவை நோக்கிய அந்த கடைசிக் கட்ட பயணத்தின்போது நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தை சாதுரியமாக செலுத்தினார்.


சரியாக மாலை 4:18 மணிக்கு (அமெரிக்க நேரம்), ‘கழுகு நிலவின் தரையை தொட்டுவிட்டது’ என்கிற செய்தி கிடைத்தபோது, நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டானது. ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல் மனிதராக, நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் அமெரிக்க நேரப்படி இரவு 10.56-க்கு தனது இடது காலினை பதித்தார்.


கால் வைக்கும்போது, ‘இந்த சிறு காலடி மனித இனத்தின் பிரமாண்டமான பாய்ச்சல்’ என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஆல்ட்ரின் நிலவில் அடியெடுத்து வைத்தார்.


அமெரிக்க நாட்டு கொடி நாட்டப்பட்டது. தாங்கள் பூமியிலிருந்து வந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கு அமைதி விழைவதாக எழுதப்பட்ட பதாகையை நிலவில் வைத்தனர்.


நள்ளிரவு 11.47 மணிக்கு அமெரிக்க அதிபர் நிக்சன் இவர்களோடு தொலைபேசியில் உரையாடினார். சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி, ஏராளமான கற்களை ஆராய்ச்சிக்காக சேகரித்தனர். புகைப்படங்கள் எடுத்தனர். பூமியைவிட புவி ஈர்ப்பு சக்தி ஆறில் ஒரு பகுதி உள்ளதால், உடல் எடை ஆறில் ஒரு பங்காக இருக்கும்.


பிறகு மீண்டும் கழுகு கலத்திற்கு திரும்பினர். ராக்கெட் உதவியுடன் நிலவின் ஈர்ப்பு சக்தியை எதிர்கொண்டு மேலெழும்பி வானில் உலவும் கொலம்பியாவில் மாலை 5.30 மணிவாக்கில் இணைந்தனர். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இப்பூவுலகை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கினர்.


நான்கு நாட்கள் கழித்து, ஜூலை 24-ந்தேதி பிற்பகல் 12.50 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கலம் பத்திரமாக விழுந்தது. பிறகு, அவர்கள் யு.எஸ்.எஸ். ஹார்னெட் என்கிற கப்பலில் ஏற்றப்பட்டு ஹூஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாரும் நெருங்க முடியாத தனி இடத்தில் 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.


ஒருவேளை ஏதேனும் புதிய கொடிய நுண்ணுயிரிகள் அவர்களிடம் ஒட்டியிருந்தால் அதனை அழிப்பதற்காக இச்செயல்பாடு. பின்னர், நியூயார்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் நிக்ஸன் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968இல் இருந்து டிசம்பர் 1972 வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவில் இருந்து நிலாவுக்கு விண்கலம் அனுப்பியது. 2012இல் நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969இல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.


நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னது போல சிறு காலடி, ஆனால், அதன்பின் ஐம்பது ஆண்டுகளில் மனிதக் குலம் விஞ்ஞானத்தில் பிரமாண்டமான வளர்ச்சி பெற்று விட்டது என்றால் மிகையாகாது.


WhatsApp-ல் புதிதாக 8 நபர்களுடன் உரையாடும் Join Call வசதி அறிமுகம்...

 WhatsApp-ல் புதிதாக 8 நபர்களுடன் உரையாடும் Join Call வசதி அறிமுகம்...



ஓய்வூதியர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறை...



ஓய்வூதியர் சில வழிமுறைகளை பின்பற்றுதல் நல்லது. ஓய்வூதியதாரர் கணவன் இறந்துவிட்டால் அரசுஆணைப்படி மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் (Family Pension) கிடைத்துவிடும். சிக்கல் ஏதுமில்லை. 


ஆனால் முன்பே மனைவி இறந்துவிட்டால் பிறகு கணவன் காலமானால் Lifetime arrears of pension & Family Security Fund Rs.50,000 பெற தாசில்தாரிடம் வாரிசு சான்று பெற்று தாக்கல் செய்யவேண்டும். 


இதைத்தவிர்க்க ஓய்வூதியர் உயிருடன் இருக்கும்போதே ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி இரட்டை பிரதிகளில் (In duplicate) Form A (Prescribed in G.O. Ms. 562-Finance, Dt.15.6.1987 & Nomination for Family Security Fund. ஆகிய இரண்டு வடிவங்களும் Nominee பெயர் Photo ஒட்டி நேரில் ஓய்வூதியதாரர் கையொப்பமிட்டு கொடுத்தால் அலுவலர் Nomination accepted என்று சான்றுடன் ஒரு படிவத்தை திருப்பி கொடுத்த உடன் இரண்டு படிவங்களையும் (Nominee for life time arrears Family Security Fund) ஓய்வூதிய புத்தகத்தில் ஒட்டிவைத்தால் ஓய்வூதியதாரரர் இறந்த பிறகு Nominee சிக்கலின்றி நிலுவைத் தொகைகளை பெறமுடியும்


ராமகிருஷ்ணன்

துணை ஆட்சியர் (ஓய்வு)சென்னை

TANSAF, Chennai - News Letter - April-May 2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...