கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Airtel நிறுவனம் அதன் மிகவும் மலிவான Monthly Prepaid Recharge Plan ஆன ரூ.49 Planஐ நிறுத்தியது - இனி ரூ.79 பிளான் ரீசார்ஜ் மட்டுமே கிடைக்கும்...



 பார்தி ஏர்டெல் நிறுவனம்  ஜூலை 28, புதன்கிழமை முதல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்திக்கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கு பதிலாக ரூ.79-ஐயும் அறிவித்துள்ளது.


இந்த திருத்தம் ஜூலை 29, வியாழக்கிழமை முதல்  நடைமுறைக்கு வரும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.


 ரூ.49 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.38.52 டால்க் டைம், 100MB டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கியது.


ஆக ஏர்டெல் பயனர்கள் இனிமேல் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அணுக முடியாது. அதற்கு பதிலாக ரூ.79 திட்டம் பயர்களுக்கான மிகவும் மலிவு விருப்பமாக இருக்கும்.


ரூ.79 ரீசார்ஜ் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?

ரூ.79 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.64 டாக் டைம், வினாடிக்கு 1 பைசா உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்பு விகிதத்தில் கட்டணம், 106 நிமிடங்கள் வெளிச்செல்லும் அழைப்புகள் மற்றும் 200 எம்பி டேட்டா போன்ற நன்மைகளை அதே 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் வழங்கும்.


முதலில் இலவசமாக கிடைத்தது; தற்போது நிறுத்தப்பட்டுள்ளது!

55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்பட்டு, கடந்த மே மாதத்தில் நாட்டில் அதிகரித்த COVID-19  இடையே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.49 இலவசமாகவும் மற்றும் ரூ.79 ஆனது டபுள் நன்மைகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது ஏர்டெல் தனது மலிவான மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.49-ஐ நிறுத்தியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த வாரம்தான், சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது. ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் நிறுத்தியது.

ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தி சில்லறை வாடிக்கையாளர்களுக்கான மிகக் குறைந்த பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாக ரூ.999-ஐ கொண்டு வந்தது. முன்னதாக இந்த இடத்தில் ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் இருந்தது.

இதற்கிடையில், Vi (முன்னர் வோடபோன் ஐடியா) ஏர்டெல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதன் சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது.

ஆனால் ஏர்டெல் நிறுவனத்தை போலல்லாமல், வி அதன் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.38 டாக் டைம் மற்றும் 100 எம்பி டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஆயினும், வி நிறுவனம் விரைவில் மேலும் சில மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதாவது எதிர்வரும் நாட்களில் ஏர்டெல் போன்றே திருத்தத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


NTSE 2020-21 STAGE-1 தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல், அவர்கள் பெற்ற MAT, SAT, மொத்த மதிப்பெண்கள் வெளியீடு - இவர்கள் அனைவரும் NTSE STAGE -2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் (National Talent Search Examination -2020 - 2021 - Stage 1 - Selection List - Non Disability & Disability Candidates List)...



 NTSE 2020-21 STAGE-1 தேர்வில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல், அவர்கள் பெற்ற MAT, SAT, மொத்த மதிப்பெண்கள் வெளியீடு - இவர்கள் அனைவரும் NTSE STAGE -2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்...

Cut - off:

General 166 above

OBC 150 above

SC 137 above

ST 84 above


>>> Click here to Download National Talent Search Examination -2020 - 2021 - Stage 1 - Selection List - Non Disability & Disability Candidates List...


கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 09-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  09-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - அலகு 2 - திருக்குறள் - பகுதி 1 - https://youtu.be/6uCJzd2HK7A?t=1801



 💥 ஆங்கிலம் - Unit 3 -Sir Issac Newton - The Ingenious Scientist - Grammar –Prepositions - https://youtu.be/0TToUo3WINE



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்களை அறிதல் - எண் கோட்டில் குறித்தல், தசம எண்ணாக மாற்றுதல் -  https://youtu.be/Ayc-J2KHPPk



💥 அறிவியல் - அலகு 17 - தாவரவியல் - தாவர உலகம் - பிரையோபைட்டா, டெரிடோபைட்டா - https://youtu.be/Fu-ihdpAM1g



💥 சமூக அறிவியல் - அலகு 1 - குடிமையியல் - குடிமக்களும், குடியுரிமைகளும் - பாகம் 1 -  https://youtu.be/TD4a_s9ewGM


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 09-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்(I -VII Standard Tamil Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 09-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 3 - மகிழ்வோடு கற்போம் - பகுதி 3 - https://youtu.be/6uCJzd2HK7A



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 4 - நானும் நாங்களும் - https://youtu.be/gp_Hs7lKWOI?t=1825



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 8 – நூலகம் - https://youtu.be/gp_Hs7lKWOI?t=3628



💥 நான்காம் வகுப்பு - அலகு 7 – வெற்றி வேற்கை - https://youtu.be/gp_Hs7lKWOI?t=5428



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 1 – துணைப்பாடம் - என்ன சத்தம் - https://youtu.be/TPLmMa9NVmc



💥 ஆறாம் வகுப்பு - அலகு 3 – அறிவியல் தொழில்நுட்பம் - அறிவியல் ஆத்திசூடி - https://youtu.be/e8b7sf_y1NI



💥 ஏழாம் வகுப்பு -  அலகு 2 – கவிதைப் பேழை - அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - https://youtu.be/9EKPLeIanXg?t=1908



இன்றைய (10-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 10, 2021



தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அஸ்வினி : திருப்தியான நாள்.


பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 10, 2021



உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 10, 2021



எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும்.


திருவாதிரை : கவலைகள் குறையும்.


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 10, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்களில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.


ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 10, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 10, 2021



தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.


அஸ்தம் : லாபகரமான நாள்.


சித்திரை : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 10, 2021



எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : மகிழ்ச்சியான நாள்.


விசாகம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 10, 2021



நண்பர்களின் உதவிகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



விசாகம் : மாற்றமான நாள்.


அனுஷம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


கேட்டை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 10, 2021



குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 10, 2021



தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திராடம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 10, 2021



சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 10, 2021



மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


11.08.2021 அன்று மொஹரம் மாத முதல் பிறை (ஹிஜிரி வருடப் பிறப்பு - Hijri New Year) எனவும் 20.08.2021 அன்று மொஹரம்(Muharram) பண்டிகை அனுசரிக்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு...



>>> 11.08.2021 அன்று மொஹரம் மாத முதல் பிறை (ஹிஜிரி வருடப் பிறப்பு) எனவும் 20.08.2021 அன்று மொஹரம் பண்டிகை  அனுசரிக்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு...



அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்(Director of School Education Allowed 400 Additional Post Graduate Teacher Posts in Government Higher Secondary Schools in the 11th and 12th Standard in the 2019-20 Academic Year based on the Number of Students) ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...

 


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர்  உத்தரவு செயல்முறைகள் ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...