கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசின் சத்துணவில் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம்...

 


50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

மேலும் பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கணிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வித் தொலைக்காட்சியில் 12-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



 கல்வித் தொலைக்காட்சியில் 12-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 2 – எனது அற்புதமான உடல் - https://youtu.be/yAIHiBqATg0



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 2 – எனது அற்புதமான உடல் -  https://youtu.be/2PKC5pzV3YE



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 4 – அன்றாட வாழ்வில் அறிவியல் - சமையலறை அறிவியல் - பாகம் 2 - https://youtu.be/ZYtssKwRnjY



💥 நான்காம் வகுப்பு - அலகு 3 – வேலை மற்றும் ஆற்றல் - எளிய இயந்திரம் - பகுதி 2 - https://youtu.be/MjI5Yfk0pl0



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 2 – பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருட்கள் - https://youtu.be/ERPr_iLfNdg


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 12-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard ) அறிவியல் பாடக் காணொளிகள்(Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 12-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 2 – விசையும் இயக்கமும் - சீரான, சீரற்ற இயக்கம், இன்றைய அறிவியல், ரோபோ செயல்பாடு -  https://youtu.be/V-6OBmRJZjU



💥 ஏழாம் வகுப்பு -  அலகு 3 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் -  தனிமங்கள் - https://youtu.be/_sCFxpTiO5w?t=8505



கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 12-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  12-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 3 - வருமுன் காப்போம் - https://youtu.be/_sCFxpTiO5w?t=4904



 💥 ஆங்கிலம் - Unit 4 – My  Reminiscence- https://youtu.be/nEMfVtO7Y-Y



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்கள் - அடிப்படை கணித செயல்பாடுகளை அறிதல் - பகுதி 4 -  https://youtu.be/wKovQUscrNQ



💥 அறிவியல் - அலகு 10 - இயற்பியல் - நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் - பகுதி 2 - https://youtu.be/MC6cPAtSNyg



💥 சமூக அறிவியல் - அலகு 3 - வரலாறு - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் -  https://youtu.be/OIkIjgYymnI


கொரோனா சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் - அரசு அறிவிப்பு (செய்தி வெளியீடு(Press Release) எண்: 598, நாள்: 12-08-2021)...

 கொரோனா சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் - அரசு அறிவிப்பு...


செய்தி வெளியீடு எண்: 598, நாள்: 12-08-2021...



37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல்(CEOs Transfer) - அரசாணை(வாலாயம்) எண்(G.O.): 66, நாள்: 12-08-2021 வெளியீடு...



 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - அரசாணை(வாலாயம்) எண்: 66, நாள்: 12-08-2021 வெளியீடு...


>>> அரசாணை(வாலாயம்) எண்: 66, நாள்: 12-08-2021...



COVID Vaccine 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும், 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று...



 கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கேரளாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று பாதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


கொரோனா பெரும்தொடானது 2ம் அலையில் உலகையே உலுக்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி நோய் தொற்று பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என பதிவாகி வரும் நிலையில் அதில் 20 ஆயிரத்திற்கு மேல் கேரளாவில் பதிவாகியுள்ளது. தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.


கேரள மாநில சுகாதார அதிகாரி கூறியதாவது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பின் 14,974 பேருக்கு நோய் தொற்று கண்டறிய பதாகவும் 2 வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள 5,042 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

There is no EE MIDLINE ASSESSMENT as NAS EXAM takes place - SCERT Director's Proceedings

  NAS EXAM நடைபெறுவதால் EE MIDLINE ASSESSMENT கிடையாது - SCERT இயக்குநரின் செயல்முறைகள் எண்ணும், எழுத்தும் 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்...